Don't Miss!
- News
"அன்பு, மதம், கோட்பாடு, பண்பாடுனு எல்லாம் சொல்லுவாங்க.. நம்பிடாதீங்க.." மாணவிகளுக்கு கனிமொழி அட்வைஸ்
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என்ன சொல்றீங்க.. ஒவ்வொரு சீசனில் இருந்தும் 4 பேரு வராங்களா? பிக் பாஸ் ஒடிடி பராக்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது.
மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டு போட்டியாளர்களை டைட்டில் வின்னராக மாற்ற முடியும் என்பதால் அந்த நிகழ்ச்சியை பலரும் ஆர்வமுடன் கண்டு களித்து அது தொடர்பான ட்வீட்கள், கமெண்ட்டுகள், மீம்கள், வீடியோ ட்ரோல்கள் என போட்டு பிக் பாஸ் முடியும் வரை ஒரே கொண்டாட்டம் தான்.
குக்
வித்
கோமாளி
சீசன்
3...
சூப்பர்
ஆட்டம்
போட்ட
சூப்பர்
கோமாளி
ஆர்மி, ஹேட்டர்கள் என ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி வரும் நிலையில், தமிழ் ரசிகர்களுக்காக பிக் பாஸ் ஒடிடி விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக போகிறது.

இன்னும் ஒருவாரம் தான்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5வது சீசன் முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ளது. சட்டுபுட்டுன்னு ராஜுவுக்கு டைட்டிலையும் பிரியங்காவை ரன்னர் அப் ஆக்கியும் ஷோவை முடித்து விடுங்கள் என மக்களே சொல்லும் அளவுக்கு இந்த சீசன் எல்லாத்தையும் எளிதில் கணிக்கக் கூடிய சீசனாக மாறி விட்டது. ஆனாலும், கமல் சொல்வது போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல இறுதி வரை ஏதாவது மேஜிக் நடக்குமா? என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இந்த சீசன் ஃபினாலேவையும் எதிர்நோக்கி உள்ளனர்.

பிக் பாஸ் ஒடிடி
இந்நிலையில், இந்தியில் உருவானதை போலவே தமிழிலும் தற்போது பிக் பாஸ் ஒடிடி விரைவில் வரப் போகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகாமல் வெறும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கனா காணும் காலங்கள், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை ஒடிடியில் அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளது.

பழைய போட்டியாளர்கள்
பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சியில் புதிதாக போட்டியாளர்கள் வந்தால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் ஆனால், அதை விட சுவாரஸ்யத்தை கூட்ட இதுவரை பிக் பாஸ் போட்டியாளர்களாக கலக்கிய பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் சீசன் முதல் 5வது சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவியா முதல் சுஜா வரை
பிக் பாஸ் ஒடிடியில் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட 4 பிரபலங்கள் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் ரசிகர்களின் தலைவி ஓவியா, ஜூலி, சுஜா மற்றும் சிநேகன் அல்லது பரணி கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

வனிதா, அனிதா
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் காரசார போட்டியாளர்களான வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், ஜூலி மற்றும் அபிஷேக் ராஜா உள்ளிட்டோரும் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல ஒவ்வொரு சீசனில் இருந்தும் 4 அல்லது 2 போட்டியாளர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. படங்களில் பிசியான பிரபலங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை.