twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு படம் எஃபெக்ட் பிக் பாஸ் வீட்டையும் விட்டு வைக்கல.. அரசியல் மாநாடாக மாறிய பிக் பாஸ் வீடு!

    |

    சென்னை: ஏற்கனவே தாமரை பற்றி அரசியல் ரீதியாக சொன்ன வசனமே அரசியல் கட்சிகள் மத்தியில் பிரச்சனைகளை கிளப்பி உள்ள நிலையில், பிக் பாஸ் வீடே அரசியல் மாநாடாக மாற போகிறதாம்.

    விஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளான பிரியங்கா மற்றும் ராஜுவை ஃபைனல்ஸ்க்கு கொண்டு செல்ல மற்றுமொரு பேச்சுப் போட்டி டாஸ்க்காக இந்த அரசியல் மாநாடு இருக்கும் என இப்பவே நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

    இரண்டாவது புரமோவில் சஞ்சீவ் டீம் பிரிக்கும் போதே அரசியல் ஆரம்பிப்பது வேற லெவல் ஹைலைட்.

    அதீரா ஆட்டம் ஆரம்பமாக போகுது.. கேஜிஎஃப் 2 டப்பிங்கை முடித்த சஞ்சய் தத்.. வேற லெவல் அப்டேட்!அதீரா ஆட்டம் ஆரம்பமாக போகுது.. கேஜிஎஃப் 2 டப்பிங்கை முடித்த சஞ்சய் தத்.. வேற லெவல் அப்டேட்!

    சம்பவம் இருக்கு

    சம்பவம் இருக்கு

    கண்ணாடி டாஸ்க், பொம்மை டாஸ்க், நியூஸ் டாஸ்க்கை தொடர்ந்து புதிதாக அரசியல் மாநாடு டாஸ்க்கை அறிமுகப்படுத்துகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. ஏற்கனவே இந்த சீசனில் ஏகப்பட்ட அரசியல் நடைபெற்று வருவதை பார்த்த பிக் பாஸ் டீம் இந்த வாரம் அதையே லக்சரி டாஸ்க்காக மாற்றி இருப்பதால் நிச்சயம் நிறைய சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாடு படத்தின் எஃபெக்ட்

    மாநாடு படத்தின் எஃபெக்ட்

    இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் எஃபெக்ட் பிக் பாஸ் வீட்டிலும் எதிரொலித்து விட்டதாக ரசிகர்கள் இன்று வெளியாகி உள்ள இரண்டாவது புரமோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். பலவீனங்களையே பலமாக்கி பிரச்சாரம் செய்ய பிக் பாஸ் அறிவுறுத்தி உள்ளார்.

    அரசியல் மாநாடு

    அரசியல் மாநாடு

    இந்த வாரம் பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறப் போகிறது. மூன்று கட்சிகளாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்கள் பிரிந்து பிரச்சாரங்கள் செய்து தேர்தலை நடத்தி வெற்றி பெற வேண்டும். இதில் ராஜுவுக்கும் பிரியங்காவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிசிக்கல் கேம் கிடையாதா

    பிசிக்கல் கேம் கிடையாதா

    தொடர்ந்து வாய்ச்சொல் வீரர்களாகவே இந்த சீசனில் ஒவ்வொரு கேமும் பிரியங்கா மற்றும் ராஜுவை காப்பாற்றிக் கொண்டே செல்லும் வகையில் டாஸ்க்குகள் கொடுக்கப்படுவதாகவும் பிசிக்கல் டாஸ்க் கொடுக்கும் எண்ணமே பிக் பாஸுக்கு இல்லையா? என்கிற குற்றச்சாட்டையும் இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

    அரசியல் ஆரம்பம்

    அரசியல் ஆரம்பம்

    ராஜு அரசியல் மாநாடு டாஸ்க் குறித்த அறிவிப்பை படித்து முடித்த உடனே சஞ்சீவ் நான், இமான், ராஜு, தாமரை என டீம் பிரிக்க அப்போ நாங்க என்ன பண்றது என வருண் வசமாக கேள்வி கேட்க அக்‌ஷராவும் தனக்கு இந்த கட்சி வேண்டாம் என சொல்ல அரசியல் மாநாடு இப்பவே ஆரம்பம் ஆகிடுச்சு இந்த வாரம் இந்த டாஸ்க்கையாவது புரிந்து கொண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடுவார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

    Recommended Video

    Maanadu மாஸ்! தெறிக்க விடுகிறார்..Simbu..ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil Filmibeat
    கமல் ஸ்கோர் பண்ணுவார்

    கமல் ஸ்கோர் பண்ணுவார்

    கடந்த வாரமே புதிய தலைமைக்கு தடங்கல் பண்ணக் கூடாது என கிடைத்த கேப்பில் அரசியல் பண்ண கமல் இந்த வாரம் ஷோவே அரசியல் மாநாடாக மாறி உள்ள நிலையில், செமயா ஸ்கோர் பண்ணுவார் என பிக் பாஸ் ரசிகர்கள் இப்போதே கணித்து கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Bigg Boss Tamil 5 house turns as a Political Maanaadu for this week luxury budget task. Raju reading the task details and housemates fight for party partition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X