For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஷிவானி செஞ்ச அந்த ஒரு விஷயம்.. பாராட்டும் நெட்டிசன்ஸ்.. சனம்க்கு சுட்டுப் போட்டாக் கூட வராதாம்!

  |

  சென்னை: அக்டோபர் 4ம் தேதி சொன்னபடி கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து விட்டார்.

  Anitha Sampath ஐ கடும்பாக்கிய Suresh • சூடு பிடிக்கும் பிக் பாஸ் வீடு

  ஏற்கனவே எதிர்பார்த்த 16 போட்டியாளர்களும், ஒருவர் பின் ஒருவராக ஆஜராகினர்.

  கடைசி வரைக்கும் ஏதாவது புதிய போட்டியாளர் இடம்பெறுவாரா? என எதிர்பார்த்த பிக் பாஸ் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.

  பிக்பாஸ் வீட்டில் நடிக்கிறாரா தர்ஷனின் முன்னாள் காதலி? எல்லாம் இப்படி சொல்லிட்டாங்களே!

  இது போதும்

  இது போதும்

  ஆனால், அதை எல்லாம் ஷிவானி, அனிதா சம்பத், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, சம்யுக்தா என இளம் பெண்கள் கூட்டணி சரி செய்துள்ளனர். செம ஹாட்டாக பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இறங்கி உள்ள ஏகப்பட்ட இளம் பெண்களால் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பது உறுதி ஆகி உள்ளது.

  இவங்க தான் சின்னப் பொண்ணு

  இவங்க தான் சின்னப் பொண்ணு

  கேப்ரில்லாவை விட ஷிவானி நாராயணன் தான் இந்த சீசனில் சின்னப் பொண்ணு என்பது கமல்ஹாசனின் அறிமுகத்தின் மூலமே தெரிந்து விட்டது. இன்ஸ்டாகிராமில் தினமும் 5 மணிக்கும், 4 மணிக்கும் அழகு ததும்ப போட்டோக்களையும் நடன வீடியோக்களையும் போட்டு வந்த ஷிவானியை முதல் நாள் எபிசோடிலேயே மொக்கை செய்து விட்டனர்.

  எல்லாம் நன்மைக்கே

  எல்லாம் நன்மைக்கே

  பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை டார்கெட் செய்பவர்களை விட டார்கெட் செய்யப்படுபவரை தான் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். சனம் ஷெட்டி, ஷிவானி குறித்து ஹார்ஷாக பேசும் போது கூட வயதில் மூத்தவர் என்பதற்காக அவரிடம் அனுமதி கேட்டு பேசிய பக்குவ குணம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை உடனடியாக உருவாக்கி தந்து விட்டது.

  அதிக ஹார்ட் பிரேக்

  அதிக ஹார்ட் பிரேக்

  அதுமட்டுமின்றி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஷிவானியை அழைத்து வைத்து, ஹார்ட் பிரேக்குகளாக குத்தக் குத்த இளைஞர்கள் இதயங்கள் ஒவ்வொன்றும் ஷிவானிக்காக அதில் இடம் கொடுக்க முன் வந்து விட்டது. ஷிவானிக்கு என தனி ஆர்மியும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  அந்த ஒரு விஷயம்

  அந்த ஒரு விஷயம்

  ஷிவானி நாராயனனுக்கு ஹார்ட் பிரேக் கொடுத்த சனம் ஷெட்டியை பழிக்கு பழி வாங்காமல் அவருக்கு ஹார்ட் கொடுத்த சீரியல் நடிகை ஷிவானியை பிக் பாஸ் ரசிகர்கள் பாராட்டி தள்ளுகின்றனர். கடைசி வரை நீங்க இந்த வீட்டில் இருந்து வின்னர் ஆக வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர்.

  வின்னர் பெண் தான்

  வின்னர் பெண் தான்

  பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் ஆண் போட்டியாளரான ஆரவ் டைட்டில் வென்றார். இரண்டாவது சீசனில் பெண் போட்டியாளரான ரித்விகா டைட்டில் வென்றார். கடந்த சீசனில் முகேன் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றார். இந்நிலையில், இந்த சீசனில் நிச்சயம் ஒரு பெண் போட்டியாளர் தான் டைட்டில் வெல்வார் என்றும் அதற்கு ஷிவானி மற்றும் அனிதாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

  மாறவே மாட்டார்

  மாறவே மாட்டார்

  கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் எல்லாம் சனம் ஷெட்டியை பார்த்த மறு கணமே அவர் இந்த வீட்டில் நடிக்கிறார் என்பதை போட்டுடைத்து விட்டனர். ஷிவானியை காயப்படுத்தும் வகையில் பேசிய சனம் ஷெட்டியை ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். காதலர் தர்ஷன் மீது போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியவர் ஆயிற்றே என்றும் டார்கெட் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

  மொட்டை மேல தான் காண்டு

  மொட்டை மேல தான் காண்டு

  சனம் ஷெட்டியை விட, ஷிவானியிடமும், அனிதா சம்பத்துடனும் சண்டைக்கு மல்லுக்கட்டும் மொட்டை தலை சுரேஷ் சக்கரவர்த்தி மீது தான் பிக் பாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபமும் உள்ளது. எவிக்‌ஷன் வரட்டும் அவர் தான் எவிக்‌ஷன் செய்யப்படுவார் என கமெண்ட் போட்டு வருகின்றனர். சிலர், அவர் தான் அடுத்த வனிதா அக்கா அவர் இல்லைன்னா போர் அடிக்கும், இந்த வயசுலையும் செமையா கேம் ஆடுறார் மனுஷன் என பாராட்டுகின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil Season 4 started with a grand opening ceremony on last Sunday. Shivani who gave heart to Sanam Shetty praised by Bigg Boss fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X