வாத்திய ஏமாத்தவே முடியாது...சாட்டையை சுழற்ற தயாராகும் கமல்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தின் நிறைவுப் பகுதியை எட்டி உள்ளது. மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் நமீதா மாரிமுத்து மற்றும் நாடியா சாங் ஏற்கனவே வெளியேறி உள்ளனர்.

கடந்த வாரம் 15 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். அவர்களில் இருந்து நாடியா வெளியேறினார். இதைத் தொடர்ந்து இந்த வாரம் 9 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காகவும், நாமினேட் செய்யப்பட்டுள்ள தங்களுக்கு விருப்பமானவர்களை காப்பாற்றவும் சலுகை வழங்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் பல சண்டை சர்ச்சரவுகள், மோதல்கள் நடைபெற்றது. பஞ்ச பூதங்களின் பெயர்கள் அடங்கிய நாணயங்களை காப்பாற்ற குழுக்களாக சேர்ந்து ஹவுஸ்மேட்கள் விளையாடினர். இதில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஆகியோர் மீது மற்ற போட்டியாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Bigg boss tamil season 5 first promo for today

இறுதியாக இந்த டாஸ்கில் தாமரை, நிரூப், இசைவாணி, பாவனி, வருண் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து வீட்டில் மைக் சரியாக போடாதவர்கள், பகலில் தூங்குபவர்கள், ஆங்கிலத்தில் பேசுபவர்கள், சரியாக பங்களிக்காதவர்கள் என ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கழுத்தில் போர்டு மாட்டப்பட்டுள்ளது. பலர் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என கூறி பிக்பாஸ் பலமுறை கண்டித்தும், தொடர்ந்து விதிகள் மீறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 20 ம் நாளான இன்று கமல் வரும் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது. இதில்,
மாத்தி மாத்தி பேசி உள்ள இருக்கறவங்கள வேணா ஏமாத்திடலாம். ஆனா, வாத்திய ஏமாத்தவே முடியாது. கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு. ஏன்னா, அவங்க உடைச்ச ரூல்ஸ் ஏராளம். ஒவ்வொன்னா கேட்டுடலாம். இன்னிக்கு ராத்திரி என பேசினார் கமல்.

சின்ன பொண்ணுவிடம் நாணயம் உள்ளதா என பிரியங்கா சோதனை செய்து பார்த்தது, பகலில் தூங்கியது, ஸ்டாட்டர்ஜி என்ற பெயரில் அபிஷேக் செய்த குழப்பங்கள் போன்றவைகளுக்காக பிரியங்கா மற்றும் அவரது குழுவினரை கமல் நன்றாக கேள்வி கேட்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு கேள்வி கேட்போம் என கமல் சொன்னது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த வாரம் அபிஷேக்கை வெளியேற்ற வேண்டும் என பலர் எதிர்பார்த்துள்ளனர். இந்த வாரம் 9 பேர் நாமினேட் ஆன நிலையில், யார் முதலில் சேவ் ஆக போகிறார்கள். யார் இந்த வாரம் வெளியேற்றப்பட போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X