Don't Miss!
- News
2023-24ம் ஆண்டு மத்திய பட்ஜெட்.. 5 பெரும் எதிர்பார்ப்புகள் என்னென்ன? வருமான வரி சலுகை இருக்குமா?
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தீப்பொறி பறக்க ஆரம்பமானது… பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே!
சென்னை : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தீப்பொறி பறக்க பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே கோலாகலமாக தொடங்கி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.
18 போட்டியாளர்கள் உடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், 2 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தனர். இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் இசைவாணியுடன் குத்தாட்டம் போட்ட ஐக்கி பெர்ரி.. வேறலெவல் வீடியோ!

வெற்றியாளர் யார்
பிக் பாஸ் சீசன் 5 இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியில் தெரிந்து விடும். பிக் பாஸ் வீட்டில் இது இறுதி வாரம் என்பதால், பொங்கல் கொண்டாட்டமும் சேர்ந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைக்கட்டியது.

ஃபைனல்ஸிட்
ராஜூ, பிரியங்கா, பாவ்னி, நிரூப், அமீர் ஆகியோர் ஃபைனல்ஸிட்டாக தேர்வாகியுள்ளனர். இதில் ராஜூ மற்றும் பிரியங்கா முதல் 2 இடங்களை பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராஜூ தான் வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளன.

கிராண்ட் ஃபினாலே
தீப்பொறி பறக்க சிவகார்த்திகேயன் படப்பாடலுடன் கோலாகலமாக கிராண்ட் ஃபினாலே தொடங்கியது. முந்தைய சீசனில் இல்லாத நட்பு இந்த சீசனில் இருந்ததை கமலஹாசன் வெகுவாக பாராட்டினார். பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களை வரவேற்றார்.

சீசன் 5 போட்டியாளர்கள்
சின்னபொண்ணு, நாடியா சாங், தாமரை, ஐக்கி பெர்ரி, சிபி சக்கரவர்த்தி, தாமரை, அக்ஷரா,, இசைவாணி, வருண், சஞ்சீவ், ஸ்ருதி மேடையில் அமர்ந்து இருந்தனர். ஆனால், நமிதா மாரிமுத்து, அண்ணாச்சி, அபிஷேக், மதுமிதா ஆகியோர் கொரோனா பரவல் காரணமாக கலந்து கொள்ளமுடியவில்லை என்று கமல் கூறினார்.

பட வாய்ப்பு
அப்போது பேசி சின்னப்பொண்ணு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு அன்பறிவு பட வாய்ப்பு கிடைத்ததாக கூறினார். அதேபோல நாடக கலைஞரான தாமரைச்செல்வி என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த விஜய்டிவிக்கு ரொம்ப நன்றி தெரிவித்துக்கொண்டார். ஐக்கி பெர்ஜிக்கு 4 திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாகவும், இன்டிபென்ட் ஆல்பத்திற்கு வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறினார்.