Don't Miss!
- News
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம்
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அழுகை, கத்தல், ஆளுமை இல்லாத போட்டியாளர்கள்... நட்பே பிரதானம்... பிக்பாஸ் சீசன் 5 ஒரு அலசல்!
சென்னை : விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ளார் ராஜு ஜெயமோகன்.
அழுகை,கோபம், சண்டை, தள்ளுமுள்ளு என பல இந்த வீட்டிற்குள் நடந்தாலும் பிக் பாஸ் சீசன் 5ல் நட்பே பிரதான இடத்தை பிடித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
பிக் பாஸ் சீசன் 5 கடந்து வந்த பாதை ஒரு சுவாரசிய அலசல்...
வெளியானது
குக்
வித்
கோமாளியின்
புதிய
பிரமோ...
கலக்கல்
ரோஷினி
டான்ஸ்
அள்ளுதே

18 போட்டியாளர்கள்
பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது.

கண்ணீர் கதை
முதல் வாரத்தில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கண்ணீர் மல்க கூறினர். இதில், திருநங்கை நமிதா மாரிமுத்துவின் கண்ணீர் கதை மனதை உலுக்கியது. அதேபோல, தாமரையின் அழுகை பார்வையாளர்களை கண்ணீர்விட வைத்தது.

நமிதா வெளியேறினார்
இரண்டாவது வாரத்திலேயே நமிதா மாரிமுத்து உடல்நிலை சரியில்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவர் குறித்த எந்த தகவலையும் விஜய் தொலைக்காட்சி வெளியிடவில்லை. இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து முதல் நபராக நாடியா சாங்க் வெளியேற்றப்பட்டார்.

பஞ்சதந்திர டாஸ்க்
நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று என பஞ்சபூதத்தையும் உணர்த்தும் வகையில் பஞ்சதந்திர டாஸ்க் நடைபெற்றது. இதில் காயினை திருடி தன் வசம் வைத்து இருந்தவர்களுக்கு பிக் பாஸ் வீட்டை ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது இது உண்மையில் ஒரு நல்ல டாஸ்க்காக இருந்தது. இந்த காயின் டாஸ்கின் போதே வீட்டில் களேபரம் வெடித்து.

மினி அன்பு டீம் உடைந்தது
காயின் டாஸ்கின் போது, அபிஷேக்கின் நடவடிக்கையால் கடுப்பான மக்கள் அவருக்கு குறைவான வாக்குகள் அளித்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். பிக் பாஸ் வீட்டில் மினி அன்பு டீம் அமைத்து கூட்டணியாக செயல்பட்டு வந்த பிரியங்கா, நிரூப், அபிஷேக் டீம் உடைந்தது

நட்பில் விரிசல்
காயின் டாஸ்கில் பிரியங்காவின் நாணயத்தை நிரூப் எடுத்துக் கொண்டதால் பிரியங்கா நிரூப் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டு இருவரும் எலியும் பூனையுமாக மாறி அவ்வப்போது சண்டைப் போட்டுக் கொண்டனர். பல நேரத்தில் இவர்களின் சண்டையால் பிரியங்கா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

வைல்டு கார்டு என்ட்ரி
சின்னப்பொண்னு,ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி என ஒவ்வொரு போட்டியாளர்களாக வெளியேற்றப்பட்டு வந்தனர். இதில்,நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட அபிஷேக் மீண்டும் வீட்டிற்குள் வந்தார். அதேபோல சஞ்ஜீவ் மற்றும் அமீர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்தனர்.

பாவனியை லவ் பண்றியா
அமீரின் என்ட்ரிக்கு பிறகே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூடுபிடித்தது என்று சொல்லலாம் வந்ததுமே பாவனியின் பின் சுற்றிவந்து கெட்ட பெயரை எடுத்தார் அமீர். அந்த நேரத்தில் பாவனியை நீ லவ் பண்ணியா என, அபிநய்யிடம் ராஜு கேட்ட கேள்வி, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது வீட்டிற்குள் பெரும் புயலை கிளப்பி பூதாகரமான போது கமல் தலையிட்டு குறும்படம் போட்டுக்காட்டி பாவனியின் மாற்றி மாற்றி பேசும் செயல்தான் பிரச்சனைக்கு காரணம் என கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அமீர் வென்றார்
பிக் பாஸ் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் கொட்டும் மழையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒற்றைக்காலில் நின்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு அமீர் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, நிரூப் இரண்டாவது நபராக இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பணத்துடன் வெளியேறிய சிபி
சிபி புத்திசாலித்தனமாக யோசித்து 12 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். நிரூப் நேரடியாக பைனலுக்கு தேர்வானதால், நாமினேஷனில் தாமரை வீட்டிலிருந்து வெளியேறினார். தாமரை வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

டாப் 5 போட்டியாளர்கள்
ராஜு,அமீர், நிரூப், பிரியங்கா,பாவனி டாப் 5 போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டை அலங்கரித்தனர். எந்த சீசனிலும் இல்லாத நட்பு இந்த சீசனில் இருந்ததாக கமல் பல முறை பாராட்டி உள்ளார். வருண்,அக்ஷராவின் நட்பு மெச்சும்படியாக இருந்தது. அதே போல பிரியங்கா நிரூப்பின் மீது வைத்திருந்த நட்புக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம்.

பாவனிக்கு 3வது இடம்
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் நிரூப் 5வது இடத்தை பிடித்தார், அமீர் 4வது இடத்தையும், பாவனி 3வது இடத்தையும் பிடித்தனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல், பிரியங்கா, ராஜுவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை வெளியே அழைத்து வந்தார்.
Recommended Video

ராஜு வின்னர்
பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜுவை அறிவித்தார். அவருக்கு பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலும் 50 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. பிரியங்கா 2வது இடத்தைப் பிடித்தார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கோபம், அழுகை, சண்டைகள் பல நடந்தாலும் அனைவரும் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்த மறக்கவில்லை. அன்பால் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.