Don't Miss!
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Sports
இந்திய அணியை பலப்படுத்தனும்..இதுக்காக ஸ்பெஷல் பயிற்சி தருகிறோம்..குறை குறித்து பேசிய ராகுல் டிராவிட்
- News
அதிமுக இப்போ 3 ஆக பிரிந்துள்ளது.. காரணமே அவங்க தான்.. தொல் திருமாவளவன் அட்டாக்
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் 6: அசீம் டைட்டில் வெல்வாரா..? அவரது தம்பி ஆதில் சொன்ன அதிர்ச்சி தகவல்
சென்னை: அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இறுதிப் போட்டியில் ஷிவின், விக்ரமன், அசீம் மூவரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
முதன்முறையாக மூன்று பேருமே கிராண்ட் பினாலே மேடையில் ஏறவுள்ளதாக பிக் பாஸ் அறிவித்துள்ளது எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அசீம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் ஆவாரா என்ற கேள்விக்கு அவரது தம்பி ஆதில் சொன்ன அதிர்ச்சி தகவல் வைரலாகி வருகிறது.
பிக்
பாஸ்
குயின்ஸியின்
மாமாக்குட்டியான
மணிகண்டன்..
ரெண்டு
பேரும்
செம
டான்ஸ்..
தீயாய்
பரவும்
வீடியோ!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்?
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 இன்றோடு முடிவுக்கு வருகிறது. ஜிபி முத்து முதல் மைனா வரை 21 பேரும் டைட்டில் வின்னர் கனவோடு பிக் பாஸ் வீட்டுக்குல் அடியெடுத்து வைத்தனர். ஆனால் ஷிவின், விக்ரமன், அசீம் மூவர் மட்டுமே கிராண்ட் பினாலே மேடையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இவர்கள் மூன்று பேரில் ஷிவின் முதல் ஆளாக எவிக்சன் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

விக்ரமன் - அசீம் இடையே போட்டி
எஞ்சியிருக்கும் விக்ரமன் - அசீம் இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்ரமன், அசீம் இருவருக்கும் சமமான வாய்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் விக்ரமனுக்கு ஆதரவு கேட்டு ட்வீட் செய்திருந்தனர். இதற்கு பிக் பாஸ் ரசிகர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொலைக்காட்சிக்கான ரியாலிட்டி ஷோவில் அரசியல் வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

அசீம் சகோதரரின் கணிப்பு
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பங்கள் வரும் எபிசோடில் அசீமின் சகோதரர் முகம்மது ஆதில் சென்றிருந்தார். அவர் நேர்காணல் ஒன்றில் அசீம் இறுதிப் போட்டியில் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், கண்டிப்பாக அசீம் ஜெயிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. எல்லோருமே நல்ல போட்டியாளர்கள் தான். அவர் தனிமனிதனாக அந்த வீட்டில் போராடியதாக பிக்பாஸே பாராட்டியுள்ளார். மக்களிடமே போட்டியின் முடிவை விட்டுவிட்டோம். விக்ரமனை அவர் சார்ந்த கட்சியின்ர் ஆதரித்து ட்வீட் செய்திருந்தனர் எனக் கூறியிருந்தார்.

அசீம் தான் வெல்வார்
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கான போட்டி தான். அவர்களின் வாக்குகளை பொறுத்தே எல்லாம் அமைந்துள்ளது. அவர்கள் ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களையும், கட்சி ரீதியாக வருகிற சப்போர்ட்டையும் பார்த்து வாக்குகளை செலுத்தியிருப்பார்கள் என நம்புகிறேன். அசீமின் தம்பியாக இல்லாமல் மக்களில் ஒருவராக சொல்ல வேண்டுமென்றால் அசீம் தான் டைட்டில் வெல்வார் என நம்புகிறேன் என முகம்மது ஆதில் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து வைரலாகி வரும் போதே, அசீம் தான் டைட்டில் வென்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.