Don't Miss!
- Finance
H-1B visa: அலேக்கா தூக்கும் 3 நிறுவனங்கள்.. இந்திய நிறுவனங்கள் ஆதிக்கமா? உண்மை என்ன?
- Automobiles
பெட்ரோலும் வேணாம் பேட்டரியும் வேணாம் பச்ச தண்ணீல ஓடும் எலெக்ட்ரிக் கார்... ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா?
- News
நாளை இலங்கை சுதந்திர தினம்-கரிநாள் என யாழ். மாணவர்கள் அறிவிப்பு- உலக நாடுகளில் தமிழர்கள் போராட்டம்!
- Technology
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- Lifestyle
இந்த பிரச்சனை இருக்குறவங்க.. வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதாம்.. உஷாரா இருங்க..
- Sports
"பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறாங்க" ஹர்திக்கின் கேப்டன்சி.. ரமீஷ் ராஜா சுவாரஸ்ய கருத்து!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திடீரென சுருண்டு விழுந்த ஏடிகே...பதறிப்போன போட்டியாளர்கள்..என்ன ஆச்சு அவருக்கு!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் நேற்று ஏடிகேவுக்கு திடீரென உடல்நிலைக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் கனா காணும் டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க் பார்ப்பதற்கு ரசிக்கும் படிஇல்லை என்றாலும் சிலரின் பெர்பாமன்ஸ் ரசிக்கும்படி இருந்தது.
பள்ளி மாணவனாக நடித்த அசீம், தனலட்சுமிக்கு காதல் கடிதம் கொடுத்ததும், அவரின் பின்னால் சுற்றியதும் ரசிக்கும்படி இருந்தது.
ஆயிஷா.. ஜனனி.. தனா.. என்ன பெண் போட்டியாளரா வெளியேத்துறாங்க.. பிக் பாஸில் எதிரொலிக்கிறதா ஆணாதிக்கம்?

ரேங்கிங் டாஸ்க்
பிக்பாஸ் வீட்டில் வெள்ளிக்கிழமை ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றது. இதில் முதல் இடத்தில் அசீம் நின்றார். முதல் இடத்திற்கு தகுதியானவர் என்று நினைப்பவர்கள் அவரிடம் பேசி அந்த இடத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதால், விக்ரமன், ஷிவின், மைனா என அனைவரும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

கட்டப்பஞ்சாயத்து செய்யாதீங்க
ஆனால், யாருடைய பேச்சுக்கும் மதிப்பு கொடுக்காமல் வாய்க்கு வந்தபடி பேசினார். குறிப்பாக விக்ரமனை கட்டப்பஞ்சாயத்து செய்யாதீங்க என்றும், கட்டப்பஞ்சாயத்து செய்து செய்து பழகிப்போச்சா என்று கேட்டதும் உண்மையில் வரம்பும் மீறும் வகையில் இருந்தது. எந்த வார்த்தை பேசினால், அவர்கள் ஆத்திரத்தில் கத்துவார்கள் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு அசீம் தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கிப் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

எனக்கு பொறுமை இல்லை
நேற்று நிகழ்ச்சிக்கு கமல் வந்தவுடன் அந்த ராங்கிங் டாஸ்க் பற்றி பேசியிருந்தார். அசீமிடம் கட்டப்பஞ்சாயத்தை எங்களுடைய புரிதல் என்ன என்று கமல் கேள்வி எழுப்புகிறார். மேலும், உதாரணம் எடுத்துச் சொன்னது எப்படி கட்டப்பஞ்சாயத்து ஆகும். உங்களிடம் பேசுவதற்கு எனக்கு பொறுமை இல்லை. அவமரியாதை செய்வதற்கு முன்னால் இப்படி ஒரு அவமரியாதை எனக்கு வந்தால் என்னவாகும் என்று நீங்க யோசிக்கவே மாட்டீங்களா? மத்தவங்களாம் அதுக்கு அவமானப்படுறாங்க ஆனா நீங்க தூசி தட்டுறமாதிரி தட்டி விட்டுறீங்க என்றார்.

கண்டுகொள்ளாத அசீம்
மேலும், ரௌத்திரம் பழகனுமே தவிற அன்றாட பயிற்சியா வச்சிக்க கூடாது என்று சகட்டுமேனிக்கு விளாசினார். அவர் என்ன சொன்னாலும், அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் நின்று கொண்டிருந்தார் அசீம். அதுபோலவே விக்ரமனுக்கு மட்டும் அதிக ஆதரவு கொடுத்தார். இதையடுத்து இந்த வாரம் விக்ரமன்,ஷிவின் இருவரும் காப்பாற்றப்பட்டார்கள்.

இப்படி ஒருவரா
அதன்பின் போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும், அசீம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க எனக் கேட்டதும் அமுதவாணன் உட்பட ரச்சிதா வரை அனைவரும் இப்படி ஒருவரை நான் வெளியில் பார்த்தால், நிச்சயம் பேச்சே வைத்துக்கொள்ளமாட்டேன் என்றார்கள். இவை அனைத்தையும் அசீம் கேட்டுக்கொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல் அப்பாவி போல இருந்தார்.

திடீரென சுருண்டுவிழுந்த ஏடிகே
இவ்வாறு கமல் பேசிவிட்டு சென்றதும் ஏடிகேவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்படியே சோபாவில் இருந்து தரையில் சுருண்டு படுத்துவிட்டார். இதனால் பதறிப்போன போட்டியாளர்கள் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். இதையடுத்து,வந்த கமல் ஏடிகேவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். பயப்படும்படி எதுவும் இல்லை என்றார்.இதனால், ஏடிகேவின் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.