Don't Miss!
- Technology
OnePlus Keyboard-ல் இப்படி ஒரு ஸ்பெஷலிட்டியா? இப்போதே வாங்க ரெடியாகும் இந்தியர்கள்.!
- News
அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு..72 வயது முதியவர் அரங்கேற்றிய கொடூரம்..ஷாக் கொடுக்கும் பின்னணி
- Automobiles
ஒரு ஆளுக்கு ஒரு கார் தான் வாங்கனும் மீறி வாங்குனா அதிகமா வரிகட்டனும்! கோர்ட்டில் தொடரப்பட்ட நூதன வழக்கு
- Lifestyle
மாவு பிசையும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா... பந்துபோல மென்மையான சப்பாத்தி வருமாம்...!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Finance
ஊழியர்களை ஏன் பணி நீக்கம் செய்றீங்க..அப்படி செய்யாதீங்க.. அஷ்னீர் குரோவரின் பரிந்துரைய பாருங்க!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
இந்த வீட்டுக்கே பெருமை... வந்த வேலை முடிஞ்சிடுச்சு... ஷிவினுக்கு பிக் பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டதால் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதிப் பெற்ற நிலையில் கதிர் மட்டும் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறினார்.
இந்நிலையில் விக்ரமன், அசீம், ஷிவ்ன், அமுதா, மைனா என 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் பயணித்து வருகின்றனர்.
இதனையடுத்து பைனலிஸ்ட்டில் இருக்கும் ஷிவினுக்கு பிக் பாஸ் சர்ப்ரைஸ் கொடுக்க, அதற்கு அவரும் எமோஷனலான ப்ரோமோ ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயலி வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்... மார்டன் டிரஸ் பெண்களுக்கு அட்வைஸ் கொடுத்த இயக்குநர் நவீன்

இறுதிப்போட்டியில் 5 ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 21 பேருடன் களைகட்டிய பிக் பாஸ் வீட்டில் இப்போது பைனலிஸ்ட் மட்டுமே உள்ளனர். விக்ரமன், ஷிவின், அசீம், மைனா நந்தினி, கதிர், அமுதவாணன் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்த நிலையில், கதிர் மட்டும் 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் வெளியேறினார். இதனால் இப்போது 5 பேர் மட்டுமே பைனல் ரேஸில் உள்ளனர்.

பைனலிஸ்ட்களுக்கு சர்ப்ரைஸ்
பிக் பாஸ் இறுதி வாரம் என்பதால் ஏற்கனவே எவிக்சன் செய்யப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் வீட்டுக்குள் வந்திருந்தனர். அப்போது சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அரங்கேறின. இதனையடுத்து நேற்றில் இருந்து பைனலிஸ்ட்கள் தவிர ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் வீட்டில் இருக்கும் பைனலிஸ்ட்களுக்கு பிக் பாஸ் அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.

நெகிழ்ந்த ஷிவின்
அதன்படி இன்று முதலில் வெளியான ப்ரோமோவில் அமுதா மட்டும் கார்டன் ஏரியாவுக்கு வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இதுவரை அவர் விளையாடிய புகைப்படங்களுடன் நடுவில் இருக்கும் ஸ்டேஜில் நிற்க வைத்து அவரை புகழ்கிறார். அதேபோல் அடுத்த ப்ரோமோவில் மைனா நந்தினியை ஸ்டேஜில் ஏற்றி அவருக்கு புகழ்மாலை சூட்டுகிறார். இறுதியாக வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஷிவின் கார்டன் ஏரியாவுக்கு வருகிறார். அவர் ஸ்டேஜ் ஏறியதும் "உங்களால் இந்த வீட்டுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும், ஏன் ஒரு முழு சமூகத்துக்கும் பெருமை" எனக் கூறுகிறார்.

வந்த வேலை முடிந்தது
பிக் பாஸின் இந்த சர்ப்ரைஸ்ஸை எதிர்பார்க்காத ஷிவின், பிக் பாஸுக்கு நன்றி சொன்னதோடு நான் வந்த வேலை முடிந்து விட்டதாக நினைக்கிறேன் என்கிறார். அப்போது மீண்டும் பேசத் தொடங்கும் பிக் பாஸ், இனி நீங்க எந்த ஊருக்கும் போய் ஒளிய வேண்டாம், நீங்க காலடி எடுத்து வைக்கும் போது நிறைய தாய்மார்கள் அவங்க வீட்டு பெண்ணாக கொண்டாடுவாங்க, அதுக்கு தயாரா இருங்க என கூறுகிறார். பிக் பாஸின் இந்த நெகிழ்ச்சியான வார்த்தையால் கண்கலங்கிய ஷிவினுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். ஏற்கனவே ஷிவினை இந்த சீசனின் சிறந்த கண்டுபிடிப்பு என ஹவுஸ்மேட்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.