Don't Miss!
- News
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஹவுஸ்மேட்ஸை கண்கலங்க வைத்த தனலட்சுமி... அனுதாபம் தெரிவித்த ரசிகர்கள்: பிக் பாஸ் வீட்டில் சோகம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 60வது நாளை எட்டியுள்ளது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 8 பேர் வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 60வது நாளான இன்று தனலட்சுமி கதறி அழும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
காசு, பணம், துட்டு, மணி என ஆட்டம் போடும் ஏடிகே... ப்ரோமோ கண்டென்ட் இல்லாம தவிக்கும் பிக் பாஸ்!

பிக் பாஸ் 60வது நாள்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, மகேஷ்வரி, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருக்கும் என கமல்ஹாசன் கூறிவிட்டதால், போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது.

கதறி அழுத தனலட்சுமி
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதில், வக்கீல் கணேஷேன் என்ற கேரக்டரில் விளையாடி வரும் அசீமிற்கு, சிரித்துகொண்டே வாதாடும் டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் ரொம்ப சீரியஸ்ஸான வழக்கை சிரித்தபடியே வாதாடினார். இதனையடுத்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் தனலட்சுமி கதறி அழுவது இடம்பெற்றுள்ளது. இதனை பார்க்கும் ஹவுஸ்மேட்ஸ் கண்கலங்கியபடி அமர்ந்துள்ளனர்.

சீட்டுக் கம்பெனியில் ஏமாந்த மோசமணி
நேசாணி கெட்டப்பில் மோசமணி என்ற கேரக்டருடன் இந்த வாரம் டாஸ்க்கை விளையாடி வருகிறார் தனலட்சுமி. இந்த வாரம் முழுவதும் மோசமணி என்ற பாத்திரத்திலேயே ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே டாஸ்க். அதன்படி இன்று தனலட்சுமிக்கு எமோஷனலான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சீட்டு கம்பெனியில் பணம் கொடுத்து ஏமாந்ததால், அடுத்த வாரம் நடக்கவிருந்த தனலட்சுமியின் மகள் திருமணம் தடைபடுகிறது. அதனை நினைத்து அழவேண்டும் என மணிகண்டன் டாஸ்க் புக்கை படித்துக் காட்டுகிறார்.

நடிப்பில் அசத்திய தனலட்சுமி
இதனைக் கேட்டதும் அப்படியே பாத்திரமாக மாறிவிட்ட தனலட்சுமி, சீட்டு கம்பெனியில் பணம் போட்டு ஏமாந்தவர்களின் வலியை அப்படியே மேடையில் நடித்துக் காட்டினார். அப்போது "ஐயோ என் பணமெல்லாம் போச்சே, என் பொண்ணோட கல்யாணத்த எப்படி நடத்தப்போறேன்" என கதறி அழுதது ஹவுஸ்மேட்ஸ்களையே கண் கலங்க வைத்தது. இந்த டாஸ்க்கில் தனலட்சுமியின் நடிப்பு ரியலாகவே இருந்தது. இதற்கு சக போட்டியாளர்கள் என்ன ரியாக்ட் செய்தார்கள் என்பது இன்று இரவு தெரியவரும்.

காட்சிகள் மாறும்
நேற்றைய தினம் மணிகண்டன் வெறித்தனமான டான்ஸ் ஃபெர்பாமன்ஸ் செய்து அசீமிடம் இருந்து 15000 அன்பளிப்பு பெற்றார். அதனைப் பார்த்து பொறாமைப்பட்ட தனலட்சுமி, இது திறமைக்கு கிடைத்தது இல்லை, குரூப்பிசம் என ஜனனி, ரச்சிதாவிடம் புலம்பினார். ஆனால், இன்று தனலட்சுமியின் ஃபெர்பாமன்ஸ பார்த்து சக போட்டியாளர்கள் கண் கலங்கியதை பார்க்கும் போது, பிக் பாஸ் வீட்டில் காட்சிகள் மாறியுள்ளது தெரியவருகிறது. இப்போது தனலட்சுமிக்கு உண்மைகள் புரிந்திருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.