Don't Miss!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- News
கருணாநிதி மீது நாங்க அளவுகடந்த அன்பு வச்சிருந்தோம்! அதனால் தான் இரவோடு இரவாக அதை செய்தோம் -அன்புமணி
- Automobiles
7 வருசம் கழிச்சு பெட்ரோல்/டீசல் வாகனம் ஓட்டுபவர்களை எல்லாம் பூமர் அங்கிள்னு கூப்டுவாங்க! இப்பவே உஷாராகிடுங்க
- Technology
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தெளிவா அரசியல் பேசுங்க... Boring Performer விக்ரமனை விளாசிய மணிகண்டன்
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சி
இன்றோடு
61வது
நாளை
எட்டியுள்ளது.
21
போட்டியாளர்களுடன்
தொடங்கிய
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சியில்
இந்த
வாரம்
2
பேர்
எவிக்சன்
ஆகவுள்ளனர்.
இந்நிலையில்,
இந்த
வாரத்திற்கான
டாஸ்குகள்
முடிவடைந்து
அதில்
யார்
சிறந்த
போட்டியாளர்
யார்
Boring
Performer
என்ற
தீர்ப்பு
சக
போட்டியாளர்களால்
வழங்கப்பட்டுள்ளது.
பிக்
பாஸ்
சீசன்
6
டைட்டில்
வின்னர்
கன்ஃபார்மா
இவர்
தான்...
அப்போ
அசீம்
அவுட்
ஆகுறது
உறுதியா?

பிக் பாஸ் 61வது நாள்
பிக் பாஸ் சீசன் 6ல் இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, மகேஷ்வரி, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஷி ஆகியோர் வெளியேறிவிட்டனர். 21 போட்டியாளர்களில் 8 பேர் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் 13 போட்டியாளர்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகின்ற்னர். கடந்த வாரங்களில் இரண்டு அணிகளாக பிரிந்து டாஸ்குகளில் விளையாடிய ஹவுஸ்மேட்ஸ், இந்த வாரம் தனித்தனியாக களமிறங்கினர். அதன்படி இந்த வாரம் டாஸ்க்கில் யார் வெற்றிப் பெற்றார்கள், யார் மோசமாக விளையாடினார்கள் என்பது இன்று இரவு தெரிந்துவிடும.

Boring Performer விக்ரமன்
இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு பாத்திரமாக வந்து ஹவுஸ்மேட்ஸ்களை மகிழ்விக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி மைனா நந்தினி நாய் சேகர், தனலட்சுமி நேசமணி, அசீம் வக்கீல் கணேசன் என கள்மிறங்க விக்ரமனுக்கு அந்நியன் கெட்டப் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த இரு நாட்கள் அகம் டிவி வழியே கமல் முன்னிலையில் பஞ்சாயத்துகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த வாரம் சிறந்த போட்டியாளர்கள் யார், Boring Performer யார் என ஹவுஸ்மேட்ஸ்களிடம் கேட்கப்பட்டது. அதில் விக்ரமன் Boring Performer ஆக தேர்வானார்.

விக்ரமன் - மணிகண்டன் மோதல்
ஹவுஸ்மேட்ஸ்களிடம் வாக்கெடுப்பு நடக்கும் போது, விக்ரமன் - மணிகண்டன் இடையே மோதல் ஏற்பட்டது. இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில் விக்ரமன் - மணிகண்டன் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தற்போது 2வது ப்ரோமொ வெளியாகியுள்ளது. அதில், மீண்டும் விக்ரமன் - மணிகண்டன் இருவரும் க்டுமையாக வாக்குவாதம் செய்கின்றனர். ஏற்கனவே இருவருக்கும் இடையே சிலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளதால், இந்தமுறையும் அவர்கள் காரசாரமாக விவாதம் செய்தனர்.

விக்ரமனின் அரசியல்
ஒருகட்டத்தில் விக்ரமனின் அரசியல் சித்தாந்தம் குறித்து மணிகண்டன் பேசியதாக தெரிகிறது. இதனால், தன்னுடைய ஐடியாலஜி பற்றி பேசிய மணிகண்டனை விக்ரமன் கேள்வி கேட்க, அதற்கு முதலில் நீங்கள் உங்கள் அரசியலை தெளிவாக பேசுங்கள் என மணிகண்டன் காட்டமாக பதில் கூறுகிறார். அதன்பின்னர் அங்கிருந்து மணிகண்டன் சென்றுவிட, அவரை விடாமல் துரத்திச் சென்று வாக்குவாதம் செய்கிறார் விக்ரமன். அப்போதும் விக்ரமனை நோஸ்கட் செய்யும் விதமாக "நீங்க பேசிட்டே இருங்க... நான் இதோ வரேன்" என மணிகண்டன் சொல்ல, விக்ரமன் டென்ஷனாக அங்கிருந்து கிளம்புகிறார். இதனால், விக்ரமன் - மணிகண்டன் இடையேயான மோதல் என்ன ஆனது என இன்று இரவு தெரியவரலாம்.