Don't Miss!
- News
குவாட் அமைப்பில் இந்தியா சேரவே இதுதான் காரணம்.. நடந்தது என்ன? "சீக்ரெட்டை" சொன்ன அமெரிக்க புள்ளி!
- Finance
Padma Awards 2023: குமார் மங்கலம் பிர்லா முதல் அரீஸ் கம்பட்டா வரையில்.. தொழில்துறையினருக்கு மகுடம்!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிக் பாஸ் வீட்டின் கபட நாடக வேடதாரி இவர்கள் தான்... விக்ரமன், ரச்சிதா முகத்திரையை கிழித்த கமல்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்தின் இறுதி பகுதியை எட்டிவிட்டது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் ஏற்கனவே 8 பேர் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் 2 பேர் எவிக்சன் செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினத்திற்கான இரண்டாவது ப்ரோமோவில் விக்ரமன், ரச்சிதா இருவரின் உண்மையான முகத்திரையை தெரிய வைத்துள்ளார் கமல்.
துணிவு 'சில்லா சில்லா’ பாடலில் பிக் பாஸ் பிரபலங்கள்.. அமீர், பாவனி, சிபிக்கு அடித்தது ஜாக்பாட்!

பிக் பாஸ் 62வது நாள்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6ல், இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, மகேஷ்வரி, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஷி ஆகியோர் வெளியேறிவிட்டனர். எஞ்சியிருந்த 13 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த வாரம் டாஸ்க் நேற்றோடு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த வாரத்தில் வெளியேறப் போகும் இருவரும் யார் என முடிவு செய்துவிட்டு போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே பேசி வருகிறார் கமல். எப்போதும் ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடும் நிலையில், இந்த வாரம் தனித்தனியாக களமிறங்கினர்.

கபட நாடக வேடதாரி
இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு பாத்திரமாக வந்து ஹவுஸ்மேட்ஸ்களை மகிழ்விக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி போட்டியும் முடிந்துவிட்டது, ஆனால் வேடம் போட்டும் யார் தங்களது இயல்பை இழக்காமல் ஒரிஜினல் கேரக்டராகவே விளையாடினார்கள் என்பது தான் உண்மையான ரிசல்ட் என தெரிகிறது. இதனை இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோவிலேயே சுட்டிக் காட்டி இருந்தார் கமல். அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இதுவரை தனது உண்மையான முகத்தைக் காட்டாமல் கபட நாடகம் போடும் வேடதாரி யார் என கமல் கேள்வி எழுப்புகிறார்.

வசமாக சிக்கிய ரச்சிதா
இந்த கேள்விக்கு பதில் சொல்லி நாடகமாடுபவர் முகத்தில் மரு வைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில், அசீம், மணிகண்டன், ராம் உள்ளிட்டோர் ரச்சிதாவை வேடதாரி எனக் கூறி முகத்தில் மரு வைத்து விடுகின்றனர். ரச்சிதா எப்போதுமே அமைதியாக இருப்பதுடன் போட்டிகளில் அதிகம் கலந்துகொள்ளாமல் இருப்பதுமே இதற்கு காரணமாக ஹவுஸ் மேட்ஸ்களால் கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை ரச்சிதாவிற்கு வார்னிங் கொடுத்தும் அவர் சேஃப் கேம் விளையாடுவது இந்த வாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

அடுத்த டார்க்கெட் விக்ரமன்
அதேபோல், ஆயிஷா, தனலட்சுமி இருவரும் விக்ரமனை வேடதாரி எனக் கூறி, அவரது முகத்தில் மரு வைத்துவிடுகின்றனர். போட்டிக்காக ஒன்றை பேசிவிட்டு வெளியே வேறுமாதிரி விக்ரமன் விளையாடுகிறார் என ஆயிஷாவும் தனலட்சுமியும் சொல்வதை ப்ரோமோவில் பார்க்க முடிகிறது. அப்போது தனலட்சுமியிடம் விவாதம் செய்யும் விக்ரமன், "என்னை வெளியே எப்பவாது பார்த்திருக்கீங்களா? இல்ல என்னோட நிகழ்ச்சிகளையாவது பார்த்தது உண்டா" என கேள்விகளால் மடக்குகிறார். எப்போதுமே லைம் லைட்டில் இருக்கும் விக்ரமன், இந்த வாரம் சக போட்டியாளர்களால் டார்க்கெட் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.