Don't Miss!
- Finance
Economic survey 2023:அரசின் மூலதன செலவு இலக்கு எட்டப்படலாம்.. ஆய்வறிக்கையில் குட் நியூஸ்!
- News
இன்னைக்கு ஒரு புடி! சூப் -பிரியாணி- சாலட்! தூய்மை பணியாளருடன் மதிய உணவு சாப்பிட்ட முதலமைச்சர்!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Technology
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே: பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய கமல்... மனமுடைந்து போன ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 9வது வாரத்தை நிறைவு செய்கிறது.
63 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சீசனில் இருந்து இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.
இந்த வாரம் ஏற்கனவே ராம் வெளியேறிவிட்ட நிலையில், மேலும் ஒரு எவிக்சன் யார் என்பது இன்று இரவு தெரியவரும்.
பிக்
பாஸ்
வீட்டில்
சும்மாவே
தூங்கி
முழித்த
ராம்...
60
நாள்
சம்பளம்
இத்தனை
லட்சமா?

பிக் பாஸ் 9வது வாரம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 9வது வாரத்தை நிறைவு செய்துள்ளது. 62வது நாளான நேற்று ராம் எவிக்சன் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இந்த வாரம் மேலும் ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ளார். அது யாராக இருக்கும் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கும் அளவிற்கு இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதில், ஆயிஷா, ஜனனி இருவரும் இறுதிப்பட்டியலில் இருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பஞ்ச் வசனத்துடன் எவிக்சன் கார்டை கையில் எடுத்தார் கமல். இந்த முதல் ப்ரோமோவை தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
63வது நாளின் இரண்டாவது ப்ரோமோவில் யார் எவிக்சன் என்ற சஸ்பென்ஸ் தெரியவரும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், யாருமே எதிர்பார்க்காத படி ரொம்பவே எமோஷனல் ப்ளஸ் சென்டிமென்டலாக இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவின் தொடக்கத்தில் எப்போதும் ஜாலியாக பேசும் மைனா நந்தினி, நா தழுதழுக்க குரல் உடைந்து பேசுகிறார். அதில், அம்மா, அப்பா இருவருமே எனக்கு குழந்தைங்க மாதிரி என கண் கலங்குகிறார். அவரைத் தொடர்ந்து பேசும் அசீம், "என்ன தான் உள்ளுக்குள்ள ஸ்ட்ராங்கா இருந்தாலும், அந்த ஃபீல் இருக்கும்" என சொல்லி கண்ணீர் வடிக்கிறார்.

கண்கலங்கிய கமல்ஹாசன்
அவரைத் தொடர்ந்து கதிரும் அம்மா, அப்பா குறித்து ரொம்பவே எமோஷனலாக பேச, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். அப்போது பேசும் கமல், "நீங்கள்லாம் இப்படி அம்மா அப்பா பத்தி பேசுறீங்களே இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. இப்படி தெளிவாக பேசும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காமலேயே நாம் அவர்களை இழந்து விடுவோம். அப்படி ஒரு குழந்தை தான் நான்" என கண்ணீர் ததும்ப பேசுகிறார். அதனால், இன்றைய எபிசோட் மிகவும் எமோஷனலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக் பாஸ்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6ல், இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, மகேஷ்வரி, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஷி, ராம் ஆகியோர் வெளியேறிவிட்டனர். மொத்தமாக 63 நாட்கள் முடிந்துவிட்ட பிக் பாஸ் சீசன் 6, இன்னும் 5 வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இதில், அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், மணிகண்டன், தனலட்சுமி ஆகியோர் இடையே யார் டைட்டில் என்ற போட்டி பயங்கரமாக காணப்படுகிறது.