Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பிக் பாஸ் வீட்டின் லக்கி போட்டியாளர் இவர் தான்... கும்பலாக சேர்ந்து மெடல் போட்டுவிட்ட ஹவுஸ்மேட்ஸ்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் 63வது நாளான இன்று, இந்த வாரத்தின் இரண்டாவது எவிக்சன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆயிஷாவும் ஜனனியும் எவிக்சன் லிஸ்ட்டில் டாப்பில் இருந்ததை பார்க்க முடிந்தது.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோ கொஞ்சம் எமோஷனலாக இருந்த நிலையில், தற்போது 3வது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே: பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய கமல்... மனமுடைந்து போன ஹவுஸ்மேட்ஸ்!

இந்த வாரம் எவிக்சன்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 9வது வாரத்தை நிறைவு செய்துள்ளது. 62வது நாளான நேற்று ராம் எவிக்சன் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இன்று மேலும் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவிருக்கிறார். இந்த வாரம் நாமினேஷனில் அசீம், ஏடிகே, ஜனனி, ஆயிஷா, ராம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இவர்களில் ராம் நேற்றே எவிக்சன் ஆகி வெளியேறிவிட்ட நிலையில், மேலும் ஒரு போட்டியாளர் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, இன்றைய முதல் ப்ரோமோவில் ஆயிஷா, ஜனனி இருவரும் இறுதிப்பட்டியலில் இருந்தனர்.

எமோஷனலான பிக் பாஸ் வீடு
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ரொம்பவே எமோஷனலான காட்சிகள் அரங்கேறின. பிக் பாஸ் போட்டியாளர்களை அவர்களது அம்மா, அப்பா பற்றி பேசவைத்தார் கமல். அதில், அம்மா, அப்பா இருவருமே எனக்கு குழந்தைங்க மாதிரி என கண் கலங்குகிறார் மைனா நந்தினி. அவரைத் தொடர்ந்து பேசிய அசீம், "என்ன தான் உள்ளுக்குள்ள ஸ்ட்ராங்கா இருந்தாலும், அந்த ஃபீல் இருக்கும்" என சொல்லி கண்ணீர் வடிக்கிறார். அடுத்து கதிர் பேச, இறுதியாக கமலும் ரொம்பவே எமோஷனலாக பேசியிருந்தார்.

ஜனனி கழுத்தில் லக்கி மெடல்
இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள 3வது ப்ரோமோவில், யார் தனது அதிர்ஷ்டத்தால் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார் என கமல் கேள்வியெழுப்பினார். அதற்கான கோல்டு மெடலை பெரும்பாலான போட்டியாளர்கள் ஜனனியின் கழுத்தில் மாட்டி விட்டனர். ஜனனி தான் போட்டிகளில் அதிகம் பங்கேற்காமலேயே பிக் பாஸ் வீட்டில் 60 நாட்களை கடந்துவிட்டார் என போட்டியாளர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். ஆனால், ஜனனியோ ரச்சிதாவின் கழுத்தில் லக்கி என்ற மெடலை மாட்டி விட்டார்.

கமல் கேட்ட அந்த கேள்வி
இதனையடுத்து ஜனனியிடம் கேள்வியெழுப்பிய கமல், "அதிகம் மெடல் வாங்கிய நீங்கள் தான், ரச்சிதாவை லக்கி போட்டியாளர் என சொல்றீங்க. அப்போ உங்க கழுத்துல இத்தனை மெடல் இருக்கே, அத பத்தி என்ன நினைக்கிறீங்க" எனக் கேட்டார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஜனனி அப்படியே திகைத்துப்போய் நிற்பதாக மூன்றாவது ப்ரோமோ முடிவடைகிறது. இதனால், இன்று ஜனனி எவிக்சன் ஆகலாம் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ராம் வெளியேறிவிட்ட நிலையில், 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இன்று மேலும் ஒருவர் வெளியேற உள்ளதால், அடுத்த வாரத்தில் 11 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.