Don't Miss!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- News
விஷம் கக்கும் மதவாத சக்திகள்.. நேர்மை எனும் நெருப்பில் பொசுங்கிப் போவது உறுதி.. மநீம ஆவேசம்!
- Automobiles
பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!
- Lifestyle
இந்த விஷயங்கள மட்டும் நீங்க தெரிஞ்சிகிட்டா... இனி காலிஃபிளவர் இலைகள தூக்கி எறியமாட்டீங்களாம்..!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Finance
பாகிஸ்தான் ரூபாய் நிலைமை ரொம்ப மோசம்.. இப்படியே போச்சுன்னா..!!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நேற்று தனலட்சுமிக்கு விருது... இன்று காரசாரமான சண்டை: கதறி அழுத ஷிவின்... கண்டுகொள்ளாத ஹவுஸ்மேட்ஸ்
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சியில்
கடந்த
வாரம்
ராம்,
ஆயிஷா
இருவரும்
எவிக்சனில்
வெளியேறினர்.
எஞ்சியிருக்கும்
11
போட்டியாளர்களுடன்
தொடங்கியுள்ள
இன்றைய
போட்டியில்
காலையில்
இருந்தே
பரபரப்பு
காணப்படுகிறது.
முதல்
இரண்டு
ப்ரோமோக்களில்
நாமினேஷன்,
அசீம்
-
ஏடிகே
மோதல்
தெரியவந்த
நிலையில்,
மூன்றாவது
ப்ரோமோ
பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
பிக்
பாஸ்
வீட்டின்
லக்கி
போட்டியாளர்
இவர்
தான்...
கும்பலாக
சேர்ந்து
மெடல்
போட்டுவிட்ட
ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ் 64வது நாள்
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து, இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். ஜிபி முத்து மட்டும் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறிய நிலையில், மற்ற போட்டியாளர்கள் மக்களால் எவிக்சன் செய்யப்பட்டுள்ளனர். முதன்முறையாக கடந்த வாரம் இரண்டு எவிக்சன் நடைபெற்றது. முதலில் ராமும், அடுத்து ஆயிஷாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து நடையக் கட்டினர். இதனையடுத்து மீதமிருக்கும் 11 போட்டியாளர்களும் இந்த வாரம் பிக் பாஸ் போட்டியை தொடங்கியுள்ளனர்.

முதல் ப்ரோமோ
நேற்று அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்த கமல், மீண்டும் இந்த வாரம் இறுதியில் எவிக்சன் கார்டுடன் வருவார். அதுவரை இந்த வாரம் போட்டி எப்படி இருக்கும் என்பதை இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோவில் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை எவிக்சனுக்கு நாமினேட் செய்தனர். அதன்படி, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரச்சிதா ஆகியோர் சக போட்டியாளர்களால் குறிவைக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த வாரம் போட்டி முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஷிவின் - தனலட்சுமி சண்டை
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அசீம் பற்றி விக்ரமனிடம் புலம்பித் தீர்த்தார் ஏடிகே. இதனையடுத்து தற்போது 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ஷிவினும் தனலட்சுமியும் சண்டைப் போட்டுக்கொள்ளும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிச்சனில் தோசை போடும் போது தான் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுவதாக தெரிகிறது. தனலட்சுமிக்கு உதவி செய்வதற்காக ஷிவின் செல்ல, அது மோதலில் கொண்டுபோய் விட்டுள்ளது. ஷிவின் எவ்வளவோ சமாதானம் பேச தனலட்சுமி கத்துகிறார். அதனால் ஷிவினும் டென்ஷனாகிப் பேச, தனலட்சுமி அவரை "கத்தாத கத்தாத" என டீஸ் செய்கிறார்.

நேற்று அவார்டு... இன்று தகராறு
முன்னதாக நேற்றைய எபிசோடில் யார் ஹார்ட் ஒர்க்கர், யார் லக்கியஸ்ட் கண்டெஸ்டெண்ட் என்ற போட்டி கமல் முன்னிலையில் நடைபெற்றது. அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் லக்கி மெடலை ஜனனியின் கழுத்தில் மாட்டி விட்டனர். ஜனனி தான் போட்டிகளில் அதிகம் பங்கேற்காமலேயே பிக் பாஸ் வீட்டில் 60 நாட்களை கடந்துவிட்டார் என தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். அப்போது ஹார்ட் ஒர்க்கர் என்ற விருதை தனலட்சுமி வென்றார். அதில் ஷிவின் கொடுத்த விருதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று விருது கொடுத்து பாராட்டிக் கொண்ட நிலையில், இன்று இருவரும் கடுமையாக சண்டையிட்டது ஏன் என இன்று இரவு தெரியவரும்.