பிக் பாஸ் 6 டாப் 3 பைனலிஸ்ட்... ஹவுஸ்மேட்ஸ் தீர்ப்பில் முன்னணியில் இருப்பது யார்ன்னு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக பத்தாவது வாரத்தை நிறைவு செய்யவுள்ளது.
இந்த வாரம் சொர்க்கவாசிகள், நரகவாசிகள் என்ற டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ல் டாப் 3 பைனலிஸ்ட்டில் யார் யார் இருப்பார்கள் என்ற பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் 66வது நாள்
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 66வது நாளை எட்டியுள்ளது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். ஜிபி முத்து மட்டும் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார், இந்நிலையில், முதன்முறையாக கடந்த வாரம் ராம், ஆயிஷா என இரண்டு எவிக்ஷன்கள் நடந்து முடிந்தது. இதனையடுத்து இந்த வாரம் டாஸ்க்கில் மீதமிருக்கும் 11 போட்டியாளர்களும் விளையாடி வருகின்றனர். இதில் சொர்க்கவாசிகள், நரகவாசிகள் என்னும் இரு பிரிவுகளாக ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 3வது ப்ரோமோ
பிக் பாஸ் சீசன் 6ல் 66வது நாளுக்கான 3வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் பெறுவதற்கான டாப் 3 பைனலிஸ்ட்கள் யார், யாராக இருப்பார்கள் என ஹவுஸ்மேட்ஸ்களிடம் கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ஏடிகே, விக்ரமன் என கூறுவதோடு அதற்கான காரணத்தையும் விவரிக்கிறார். விக்ரமன் இதுவரை யாரையும் ஹார்ஷாக பேசியது கிடையாது, அதேபோல் ஃபவுலான விரும்பத்தகாத வார்த்தைகளை பேசியது இல்லை என கூறுகிறார்.

அசீம் தான் டைட்டில் வின்னர்?
ஏடிகேவை தொடர்ந்து பேசும் தனலட்சுமி, டாப் 3 பைனலிஸ்ட்டில் அசீம் இருப்பார் எனக் கூறுகிறார். "என்ன மனுசன் அப்படின்னு யோசிக்க வச்சு, யாரா இருந்தாலும் பரவாயில்ல என்னோட கேம் நான் விளையாடணும்னு அந்த கேமுக்காக தன்னை அர்ப்பணிச்சிக்குறதால அசீம் பைனல் லிஸ்ட்ல இருப்பார்" என விளக்கம் கொடுக்கிறார். அதன்படி இப்போதைய நிலையில், அசீம், விக்ரமன் இடையே இனி பயங்கரமான மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஒருவர் யார்?
அசீம், விக்ரமன் ஆகியோருடன் மூன்றாவதாக இருக்கப் போகும் இன்னொரு போட்டியாளர் யார் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அதில், ஷிவின், தனலட்சுமி இந்த இருவரில் ஒருவர் தான் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவின், தனலட்சுமி இருவருமே டஃப் கொடுத்து விளையாடி வருகின்றனர். அதனால், அவர்களில் ஒருவர் கண்டிப்பாக இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் இருக்க வய்ப்புள்ளதாக நெட்டிசன்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இனி ஒவ்வொரு நாளும் போட்டி பலமாக இருக்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











