Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முதலில் கை வச்சது யாரு... உண்மையை சொன்ன விக்ரமன்... பிக் பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த சர்ச்சை
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்கில் யார் வெற்றிப் பெற்றார்கள் என ஹவுஸ்மேட்ஸ் இன்றிரவு தீர்ப்பளிக்கவுள்ளனர்.
அதேபோல் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் ஆகப் போகிறார்கள் என்பதும் அடுத்த இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடந்த இந்த வார டாஸ்க்கில் விக்ரமன் சொன்ன உண்மையால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
பிக் பாஸ் டைட்டில் தான் அவரோட டார்க்கெட்... உண்மையை சொன்ன ஷிவின்... ஒப்புக்கொண்ட அசீம்!

சொர்க்கவாசிகள் - நரகவாசிகள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் சொர்க்கவாசிகள், - நரகவாசிகள் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 11 போட்டியாளர்களும் இரண்டு அணிகளாக விளையாடினர். இதனடிப்படையில் இந்த வாரம் யார் சிறப்பாக விளையாடினார்கள், யார் சரியாக விளையாடவில்லை என்ற தீர்ப்புகளை ஹவுஸ்மேட்ஸ்களே இன்றிரவு வழங்கவுள்ளனர். இதில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் என அசீம், அமுதவாணன் இருவருமே தேர்வாகியுள்ளதாக தெரிகிறது.

தனலட்சுமியின் புலம்பல்
இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில் மணிகண்டன், ஜனனி, அமுதவாணன், ஏடிகே நால்வரும் நாமினேஷன் ஃபிரீ ஷோனுக்கு தேர்வானார்கள். ஆனால், அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த தனலட்சுமி இதில் இடம்பெறவில்லை. இதனால், கேமரா முன்னால் தனியாக புலம்பித் தீர்த்தார் தனலட்சுமி. மேலும் எல்லாரும் நண்பர்களாக ஃபேவரிசத்துடன் விளையாடுவதாகவும் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் கோபத்துடன் சண்டையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் தனலட்சுமி, இப்போது இப்படி அடக்கி வாசிக்கிறாரெ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ஹவுஸ்மேட்ஸ் தீர்ப்பு
அதனைத் தொடர்ந்து வெளியான 2வது ப்ரோமோவில் இந்த வாரம் யார் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் என ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்தனர். அதில் அமுதவாணன், அசீம் இருவரும் சிறப்பாக விளையாடியதாக மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி, ஷிவின் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். அதனால், அசீம், அமுதவாணன் இருவரும் இந்த வாரம் சேவ் ஆகிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் நன்றாக விளையாடவில்லை என்ற தீர்ப்பு இன்றிரவு தெரியவரும். இந்நிலையில், தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

முதலில் கை வச்சது யாரு?
இன்றைய தினத்துக்கான மூன்றாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டுக்குள் விக்ரமனும் ஜனனியும் சோகமாக அமர்ந்திருக்கின்றனர் நரகவாசிகளான அவர்கள் இருவரும் சொர்க்கத்துக்குள் வரவேண்டும் என்பதே டாஸ்க் என தெரிகிறது. ஆனால், அவர்கள் இருவரில் யார் முதலில் உள்ளே வந்தார்கள் என்பது சர்ச்சையாகியுள்ளது. குகை வழியாக விக்ரமன், ஜனனி இருவரும் ஒரே நேரத்தில் சொர்க்கத்திற்கு உள்ளே வர முயன்றுள்ளனர். அதில், யார் முதலில் சொர்க்கம் உள்ளே கை வைத்தது என்ற கேள்வி வரும் போது, விக்ரமன் நான் தான் என வாதிடுகிறார். ஆனால், தனலட்சுமியோ குகை உள்ளே விக்ரமன் முதலில் சென்றாலும், ஜனனி தான் கை வைத்ததாக கூறுகிறார். இதனால் விக்ரமனுக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் உருவாக, விக்ர்மன் அங்கிருந்து கோபமாக வெளியேறுகிறார். எனவே இன்றைய இரவு பிக் பாஸ் வீட்டில் பல பஞ்சாயத்துகள் அரங்கேறும் என தெரிகிறது.