Don't Miss!
- News
பஞ்சாபில் 88 வயது ஏழை தாத்தாவுக்கு அடித்த யோகம்.. லாட்டரி பரிசால் ஓவர் நைட்டில் கோடிகளை அள்ளினார்
- Lifestyle
தினமும் இந்த விஷயங்கள செஞ்சா போதுமாம்... உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வராதாம் தெரியுமா?
- Sports
ஒருத்தரை நீக்கியே ஆகனும்.. 2வது ஒருநாள் போட்டி.. குழம்பி நிற்கும் ரோகித் சர்மா - என்ன காரணம்??
- Automobiles
தேஸ்வி சூர்யா திறந்த எமர்ஜென்ஸி கதவுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்குதா?
- Technology
கர்மா இஸ் பூமராங்! 62,084 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் சிறுகோள்! NASA கணிப்பு சொல்வது என்ன?
- Finance
Netflix சிஇஓ ராஜினாமா.. எல்லோருக்கும் பதில் சொல்ல முடியல..!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
- Travel
மூணாறில் உறைபனி - சென்னை to மூணாறு காரில் செல்ல இது தான் சரியான நேரம்!
கமல் வைத்த ஆப்பு... ஆடிப்போன அசீம்: பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கல!
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சியில்
இந்த
வாரம்
யார்
எவிக்சன்
என்ற
எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.
இதுவரை
கிடைத்த
தகவல்களின்
படி
ஜனனி
பிக்
பாஸ்
வீட்டை
விட்டு
வெளியேறியுள்ளதாக
சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அசீம்க்கு கமல் வைத்த ஆப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Bigg
Boss
Tamil6:பிக்
பாஸ்
வீட்டிலிருந்து
வெளியேறிய
போட்டியாளர்..யாருமே
எதிர்பார்க்காத
செம
ட்விஸ்ட்!

பிக் பாஸ் 70வது நாள்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இன்று 70வது நாளை எட்டியுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இருந்து இதுவரை 10 பேர் வெளியேறிவிட்டனர். மீதமிருக்கும் 11 போட்டியாளர்களில் ஒருவர் இன்று எவிக்சன் ஆகவுள்ளார். வார இறுதியான நேற்றும் இன்றும் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸ்களிடம் கலந்துரையாடி வருகிறார் கமல். இந்நிலையில் இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ சற்று நேரம் முன்பு வெளியாகியிருந்தது.

பிக் பாஸ் முதல் ப்ரோமோ
இந்த முதல் ப்ரோமோவில் எவிக்சன் லிஸ்ட்டில் இருக்கும் கடைசி மூன்று போட்டியாளர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அதன்படி ஏடிகே, மணிகண்டன், ஜனனி மூவரும் தங்களில் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என கமலிடம் கருத்து கூறினர். இறுதியாக இந்த தேர்வை அவர்கள் கைகளிலேயே ஒப்படைக்கும் விதமாக குலுக்கல் முறையில் யார் என முடிவெடுக்கும்படி கமல் விட்டுவிட்டதாக தெரிகிறது. இதில், ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கமல் வைத்த ஆப்பு
இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 6ன் இன்றைய தினத்துக்கான 2வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அடிக்கடி சீன் கிரியேட் செய்வது யார் என்ற கேள்வியை ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் வைக்கிறார் கமல். அதில், ஏடிகே, தனலட்சுமி இருவரும் தனலட்சுமியை கூறுகின்றனர். அவர் தான் அடிக்கடி சீன் கிரியேட் செய்வதாக தெரிவித்தனர். அதனையடுத்து பேசும் விக்ரமன் அசீம் தான் சீன் கிரியேட் செய்வதாகவும், "தன்னை நடுநிலைப்படுத்தி அசீம் பேசும் விசயங்கள், பலரையும் காயப்படுத்துகிறது" என குற்றம்சாட்டினார். இதற்கு விளக்கம் கூறும் அசீம், "எனக்காக கேட்டதோட மற்றவர்களுக்காக கேக்கப் போய் கேட்டு மாட்டுனது தான் ஜாஸ்தி" என பேசுகிறார்.

ஆடிப்போன அசீம்
இதனை கேட்ட கமல், மரத்தை பிளந்து ஆப்பு வைக்கும் போது அத எடுக்கணும்ங்குறது தான் ஆசை. ஆனால், உங்க வால் அங்க மாட்டிக்குதே" என நக்கலாக அசீம்க்கு ஒரு வார்னிங் கொடுத்தார். இதைக் கேட்டு அசீம் எதும் பேச முடியாமல் சிரிப்பது தான் இரண்டாவது ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. நேற்றைய டாஸ்க்கில் அசீமை சிறந்த போட்டியாளர் என கூறிய ஷிவின், அவர் இறுதி நாளில் டைட்டில் வின்னர் என்ற இலக்கை நோக்கியே விளையாடுவதாகக் கூறியிருந்தார். அசீம் டைட்டில் வின்னர் என்ற இலக்கை நோக்கி பயணித்தாலும், ப்ரோமோவில் கமல் கொடுத்த வார்னிங் என்னவென்பதை இன்று இரவு தெரியவரும்.