Don't Miss!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- News
17 உனக்கு, 33 எனக்கு.. சிறுவனுடன் பெண் ஓட்டம்.. கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்காம்.. பேர் "மகாலட்சுமி"
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் தலைதூக்கிய ஃபேவரிசம்... உக்கிரமாக மோதிக் கொண்ட ஹவுஸ்மேட்ஸ்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றோடு 10வது வாரத்தை நிறைவு செய்துள்ளது.
கடந்த இரு தினங்களாக போட்டியாளர்களுடன் பேசிய பிக் பாஸ் கமல்ஹாசன், இந்த வாரத்தின் எவிக்சன் யார் என்பதையும் அறிவித்தார்.
அதன்படி நேற்று இலங்கையைச் சேர்ந்த ஜனனி, பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டார்.
அடேங்கப்பா..பிக் பாஸ் வீட்டில் ஜனனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வெளியேறிய ஜனனி
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 71வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. நேற்றோடு 10வது வாரத்தை நிறைவு செய்துள்ள பிக் பாஸ் சீசன் 6ல், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, மகேஷ்வரி, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஷி, ஆயிஷா, ராம் ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்சனில் ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஓப்பன் நாமினேஷன்
இதனையடுத்து இந்த வாரம் எஞ்சியிருக்கும் 10 போட்டியாளர்களும் தங்களது விளையாட்டை தொடர்ந்து வருகின்றனர். அதன்படி 71வது நாளான இன்று முதலில் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில், ஷிவின், தனலட்சுமி, அசீம் இந்த மூவரும் தான் மற்ற போட்டியாளர்களின் இலக்காக தெரிகிறது. அதற்கான காரணத்துடன் நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் முகத்தில் ஹவுஸ்மேட்ஸ் மார்க் செய்தனர்.

இரண்டாவது ப்ரோமோ
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6ன் இன்றைய தினத்துக்கான 2வது ப்ரோமோ வெளியானது. அதில், தனலட்சுமி, ஷிவின், அசீம் ஆகியோர் இடையே பிரச்சினை வெடிக்க, மூவரும் கடுமையாக விவாதம் செய்துகொள்கின்றனர். இன்றைய ஓப்பன் நாமினேஷனில் தனலட்சுமி ரொம்பவே கோபமாக நடந்துகொள்வதாக ஹவுஸ்மேட்ஸ் கூறியிருந்தனர். அதனை நிரூபிக்கும் வகையில் அவர் மீண்டும் மீண்டும் ஷிவினிடம் சண்டை போட்டது வைரலானது.

மீண்டும் தொடங்கிய ஃபேவரிசம்
இந்நிலையில், தற்போது இன்றைய தினத்துக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகியுள்ளது. அதில், தன்னை ஃபேவரிசம் செய்வதாக எதை வைத்து சொன்னாய் என அமுதவாணனிடம் கேட்கிறார் மைனா நந்தினி. மேலும், அதுக்கு எதாவது ஒரு காரணம் சொல்லு என அம்முவை மடக்குகிறார். அதற்கு அவர், "நீயும் தான் என்னை ஃபேவரிசம் செய்வதாக சொன்ன, நான் ஜனனிக்கு எப்படி ஃபேவரிசம் செய்தேன்" எனக் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. இறுதியாக இந்த சண்டையில் ரச்சிதாவையும் கோர்த்து விடுகிறார் அமுதவாணன். இப்படி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மூன்றாவது ப்ரோமோ, பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.