Don't Miss!
- News
புதிய வரி விதிப்பு முறைதான் பெஸ்ட்! அதிக பலன் உடையதா? சொல்லாமல் சொல்லிய மத்திய அரசு.. இதை படிங்க!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Finance
Budget 2023: பட்ஜெட் எதிரொலி.. சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இதுவரை ஒரு வார்த்தைக் கூட கேட்கல... எமோஷனலான ஏடிகே, விக்ரமன்... கண்கலங்கிய மைனா!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் 28 நாட்களில் அதன் இறுதிப் பகுதியை எட்டிவிடும்.
இதுவரை 11 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், டைட்டில் வின்னர் ரேஸில் கடும் போட்டி காணப்படுகிறது.
இதனிடையே பிக் பாஸ் வீட்டில் ஏடிகே, விக்ரமன் இருவரும் எமோஷனலாக, மைனா நந்தினி கண் கலங்கும் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
Bigg Boss Tamil 6 Eviction: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இவங்க தான் வெளியே போவாங்களாம்!

இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 72வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் ஜனனி எவிக்சன் ஆகிவிட்ட நிலையில், இந்த வாரம் எஞ்சியிருக்கும் 10 போட்டியார்களுடன் பிக் பாஸ் டாஸ்க் தொடங்கியது. முதலில் இந்த வாரத்துக்கான எவிக்சன் யார் என்பதற்கான ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில், வழக்கம் போல அசீம், தனலட்சுமி இருவரும் இடம்பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் டாஸ்க் என்னவென்பதை பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

பிபி ஆரம்ப பள்ளி
அதன்படி இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்தின் டாஸ்க் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் பிக் பாஸ் வீடு இந்த வாரம் பிபி ஆரம்ப பள்ளியாக செயல்படும், போட்டியாளர்கள் மழலை மொழியில் பேச வேண்டும் என சொல்லப்பட்டது. அதன்படி, ஆரம்ப பள்ளியில் பாடம் எடுக்க வரும் விக்ரமன் வாத்தியாரிடம், மைனா நந்தினி தனது மழலை மொழியில் கேள்விகளை கேட்கிறார். எப்போதும் சீரியஸ் டோனில் இருக்கும் விக்ரமன், வாத்தியார் கெட்டப்பில் 'மியா மியா பூனைக்குட்டி' என பேபி ரைம்ஸ் பாடுவதை ரசிகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எமோஷனலான ஹவுஸ்மேட்ஸ்
இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் 72வது நாளுக்கன இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கார்டன் ஏரியாவில் ஒன்றாக அமர்ந்து பேசி வருகின்றனர். அப்போது தனது அப்பா, அம்மா பற்றி எமோஷனலாக பேசத் தொடங்குகிறார் ஏடிகே. அதில், "தனது அப்பா, அம்மா இருவரின் பிரச்சினையால் நான் ரெம்ப கஷ்டப்பட்டுருக்கேன். இப்பக் கூட அவர்கள் வாயை திறந்து, என்னிடம் என்ன பண்ற, எதுவும் தேவையா என எதுவும் கேட்பதில்லை" என பேசுகிறார்.

கண்கலங்கிய மைனா நந்தினி
ஏடிகேவை தொடர்ந்து பேசும் விக்ரமன், "கஷ்டப்படாத ஒரு நிலைமை எனக்கு வந்துருக்குன்னா அதுக்கு என் அப்பா தான் காரணம். நான் அவருக்கு இதுவரை ஓப்பனா நன்றி சொன்னதில்ல. ஆனா, அவரு இல்லைன்னா நான் இப்போ இல்லை" என உருக்கமாக பேசுகிறார். ஆனால், அவருக்கு அடுத்தபடியாக பேசிய மைனா தான் ரொம்பவே கண் கலங்கிவிட்டார். "சின்ன வயசுல இருந்து அம்மா, அப்பா இரண்டு பேரையும் சண்டை போட்டு தான் பார்த்துருக்கேன். அவங்கள ஒருநாள் கூட பேசி சிரிச்சு பார்த்தது இல்ல" என அழுகையுடன் நிறைவு செய்கிறார். இந்த ப்ரோமோ பிக் பாஸ் ரசிகர்களையும் எமோஷனலாக்கியுள்ளது.