கழுத்த நெரிச்சு சாகடிக்க வந்தாங்க... ரச்சிதாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?: ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.
மீதமிருக்கும் 10 போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கை விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மைனா நந்தினி எவிக்சன் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிக் பாஸ் 72வது நாள்

பிக் பாஸ் 72வது நாள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஜனனி எவிக்சன் செய்யப்பட்டார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. மேலும், இந்த வாரத்தின் எவிக்சன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மைனா நந்தினி அல்லது ரச்சிதா இருவரில் யாரேனும் ஒருவர் வெளியேறலாம் எனத் தெரிகிறது. இதில் மைனா நந்தினிக்கே ஓட்டுகள் குறைவாக இருப்பதால், அவர் தான் எவிக்சன் செய்யப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக நேற்றே ஓப்பன் நாமினேஷனும் நடந்து முடிந்துவிட்டது.

 பிக் பாஸ் 72வது நாள் முதல் ப்ரோமோ

பிக் பாஸ் 72வது நாள் முதல் ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் 70வது நாளுக்கான முதல் ப்ரோமோவில், இந்த வாரத்தின் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிக் பாஸ் வீடு இந்த வாரம் பிபி ஆரம்ப பள்ளியாக செயல்படுகிறது, மேலும், போட்டியாளர்கள் மழலை மொழியில் பேச வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று ஹவுஸ்மேட்ஸ் ஆரம்ப பள்ளி டாஸ்க்கை விளையாடி வருகின்றனர். முதலில் ஆரம்ப பள்ளியின் வாத்தியாராக விக்ரமன் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வகுப்பு எடுத்தார்.

 அம்மா, அப்பா பற்றி பேசிய போட்டியாளர்கள்

அம்மா, அப்பா பற்றி பேசிய போட்டியாளர்கள்

அதன் பின்னர் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கார்டன் ஏரியாவில் ஒன்றாக அமர்ந்து தங்களது அப்பா, அம்மா பற்றி பேசுகின்றனர். அதில், ஏடிகே, விக்ரமன், மைனா நந்தினி மூவருமே மிகவும் எமோஷனலாக பேசியிருந்தனர். ஒருகட்டத்தில் மைனா நந்தினி அவரது அம்மா, அப்பா இருவரும் அடிக்கடி சண்டைப் போடுவார்கள் எனக் கூறி கண் கலங்கினார். இது அங்கிருந்த ஹவுஸ்மேட்ஸ்களையும் ரொம்பவே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 ரச்சிதாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

ரச்சிதாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

இந்நிலையில், பிக் பாஸ் 3வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இது இரண்டாவது ப்ரோமோவின் தொடர்ச்சியாக தான் வெளிவந்துள்ளது. இந்த முறை ஷிவின் தனது அம்மா பற்றி பேசுகிறார். அம்மா தன்னைப் பற்றியே அதிகம் கவலைப்படுவார்கள் என உருக்கமாக பேசுகிறார். அவரைத் தொடர்ந்து பேசும் ரச்சிதா, தன் அப்பா டிரைவர் எனவும், அம்மா படிக்காததால் என்னை படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவார். மேலும், சில நேரங்களில் ஒழுங்காக படிக்கவில்லை என்றும் நான் பெண் பிள்ளை என்பதற்காகவும், என் கழுத்தைப் பிடித்து நெறிச்சு, செத்துடுன்னு சொல்லி சாகடிக்க வருவாங்க என அதிர்ச்சியான உண்மையைக் கூறியுள்ளார்.

 ஹவுஸ்மேட்ஸ், ரசிகர்கள் அதிர்ச்சி

ஹவுஸ்மேட்ஸ், ரசிகர்கள் அதிர்ச்சி

ரச்சிதா இப்படி ஓப்பனாக பேசியது, ஹவுஸ்மேட்ஸ், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை அளித்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் எப்போதுமே சைலண்டாக இருக்கும் ரச்சிதா, போட்டிகளில் அதிகம் பங்கேற்பதில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அப்போதெல்லாம் எனக்கு அதுமாதிரி ஹார்ஷாக விளையாட முடியவில்லை என ரச்சிதா கூறியதற்கு இதுதான் காரணமா எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X