Don't Miss!
- Sports
ஆஸி.யை வீழ்த்த 2 செய்தால் போதும்.. ரோகித் படைக்கு முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் அறிவுரை
- News
"ஆணுறை".. ஆஹா, அப்ப இதுவேறயா.. டபுள் மடங்காக எகிறிய "கருத்தடை" மாத்திரை.. புட்டு புட்டு வைத்த ஆய்வு
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
அதானி குழுமம்: ஹிண்டன்பர்க் மூலம் எல்ஐசி-க்கும் பிரச்சனை.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை..!
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
உச்சக்கட்ட எமோஷனல் மோடில் பிக் பாஸ் வீடு... ரியாக்ட் பண்ண முடியாமல் திணறும் ரசிகர்கள்
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சி
இன்று
வெற்றிகரமாக
73வது
நாளில்
அடியெடுத்து
வைத்துள்ளது.
இதுவரை
ரொம்பவே
ஹார்ஷாக
சென்று
கொண்டிருந்த
பிக்
பாஸ்
டாஸ்க்
எல்லாம்
இப்போது
மிக
எமோஷனலாக
நடந்து
வருகிறது.
இந்த
வாரம்
எந்த
போட்டியாளர்
எவிக்சன்
ஆகப்
போகிறார்
என்ற
எதிர்பார்ப்புக்கு
நடுவே
தற்போது
வெளியான
ப்ரோமோ
பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
பிக்
பாஸ்
வீட்டில்
மீண்டும்
தலைதூக்கிய
ஃபேவரிசம்...
உக்கிரமாக
மோதிக்
கொண்ட
ஹவுஸ்மேட்ஸ்

எமோஷனல் மோடில் பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை 72 நாட்களை கடந்துவிட்ட இந்த சீசனில் இருந்து, 11 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். கடந்த வாரம் ஜனனி எவிக்சன் ஆகிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளே ஓப்பன் நாமினேஷன் தொடங்கினாலும், அடுத்தடுத்து நடக்கும் டாஸ்குகள் ரொம்பவே எமோஷனலாக காணப்படுகிறது.

பிபி ஆரம்ப பள்ளியில் சண்டை
பிக் பாஸ் வீடு இந்த வாரம் பிபி ஆரம்ப பள்ளியாக செயல்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் என போட்டியாளர்கள் இருபிரிவுகளாக விளையாடி வருகின்றனர். மேலும், மழலை மொழியில் பேசியும் என்டர்டெயின்மெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில் கதிர் - தனலட்சுமி இடையே சண்டை ஏற்பட்டது. தவறை உணர வேண்டும் என தனலட்சுமியிடம் கூறுகிறார் கதிர். அதற்கு தனலட்சுமி வழக்கம் போல கதிரை அவமரியாதையாக பேச, இருவருக்கும் இடையே பிரச்சினை வலுக்கிறது. ஆனால், அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்பது இன்று இரவு எபிசோடில் தான் தெரியவரும்.

கதறி அழுத ஷிவின்
இதனை தொடர்ந்து தற்போது 73வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் யாருக்காவது கடிதம் எழுத வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி அனைவரும் தாங்கள் எழுதிய கடிதத்துடன் கார்டன் ஏரியாவில் அமர்ந்துள்ளனர். முதலில் ஷிவின் ஒரு கடிதத்தை வாசிக்கிறார். அது சக போட்டியாளர் ஒருவர் அவரது அக்காவுக்காக எழுதியது என தெரிகிறது, "என் கூட பொறந்த பாவத்துக்கு உனக்கு கஷ்டம் மட்டும் தான்" என படித்துவிட்டு கதறி அழுகிறார் ஷிவின். அது எந்தப் போட்டியாளரின் கடிதம் என இன்று இரவு தெரியவரும்.

அசீமை அரவணைத்த விக்ரமன்
அடுத்து ஏடிகே ஒரு கடிதத்தை படிக்கிறார். அது அசீம் அவரது மகனுக்காக எழுதிய கடிதம் என தெரிகிறது. தனது மகன் என்றாவது கண்டிப்பாக என்னை தேடி வருவான் என்ற ஏக்கத்தில் அசீம் எழுதிய கடிதத்தை ஏடிகே படிக்கிறார். அப்போது கண்ணீர் விட்டு அழும் அசீமை, விக்ரமன் அரவணைத்து ஆறுதல் கூறுகிறார். அதனையடுத்து அமுதவாணன் ஒரு போட்டியாளரின் கடிதத்தை படிக்கிறார். அதுவும் ரொம்பவே எமோஷனலாக இருக்க, சக போட்டியாளர்கள் கண் கலங்குகின்றனர்.

ரசிகர்கள் ரியாக்ஷன்
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இரண்டுவிதமான பார்வைகளோடு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சிலர் போட்டியாளர்கள் எல்லோருக்கும் பல கஷ்டங்கள் இருப்பதாகவும், அதனையும் மீறி அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பதாகக் கூறி ஆறுதல் தெரிவித்துள்ளனர். இன்னும் பலர், அங்க என்ன அவார்டா கொடுக்குறாங்க... இந்த நடிப்பு நடிக்கிறீங்க... இந்த வாரம் கமல் வந்து அவரே ஆச்சரியப்படப் போறார்" என கிண்டலாக கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர். ரசிகர்களின் இருவிதமான கமெண்ட்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.