Don't Miss!
- Finance
விலைவாசி விரைவில் குறையும்.. மக்களுக்கு குட் நியூஸ் - பொருளாதார ஆய்வறிக்கை 2023
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Lifestyle
பிப்ரவரி மாசத்துல இந்த 4 ராசிக்காரர்களின் தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்பட போகுது...
- News
"பிரேக்கிங் பேட்" புகழ் போதைப்பொருள்.. சிக்கிய கல்லூரி மாணவர்கள்.. வெளிநாடு வரை பரவிய 'நெட்வொர்க்'
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Technology
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கட்டப்பஞ்சாயத்துக்கு விளக்கம் கேட்ட கமல்... கண்டுக்காத அசீம்... இந்த அசிங்கம் தேவையா?
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சி
இன்று
76வது
நாளில்
அடியெடுத்து
வைத்துள்ளது.
வார
இறுதி
என்பதால்
அகம்
டிவி
வழியே
போட்டியாளர்களிடம்
பேச
ரெடியாகிவிட்டார்
கமல்.
இந்த வாரம் தனலட்சுமி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே விக்ரமனிடம் கட்டப்பஞ்சாயத்து என அநாகரீகமாக பேசிய அசீமிடம் கமல் மிக காட்டமாக கேள்வி கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 76வது நாள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துவிட்டது. இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் தனலட்சுமி எவிக்சன் ஆகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இன்று அகம் டிவி வழியே போட்டியாளர்களுடன் பேசவுள்ள கமல்ஹாசன், இந்த வாரம் டாஸ்க் பற்றி பஞ்சாயத்து நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பிபி ஆரம்ப பள்ளி என தொடங்கிய டாஸ்க், இறுதியாக இந்திரன் சந்திரன் கலைக் கல்லூரி என முடிவுக்கு வந்தது. இதனிடையே கடிதம் எழுதும் டாஸ்க், ரேங்கிங் டாஸ்க் ஆகியவையும் நடந்து முடிந்தன.

பிக் பாஸ் முதல் ப்ரோமோ
இந்நிலையில், இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ கமலின் அறிமுகத்துடன் வெளியானது. அதில், அவர் பிக் பாஸ் வீட்டில் நடந்த ரேங்கிங் டாஸ்க் பற்றிய லீடுடன் அசீமை வறுத்தெடுக்க தயாரானார். ஆனால், கமல் எப்போதும் அசீமை கண்டிக்க மட்டுமே செய்கிறார், அவரை இன்னும் ரெட் கார்டு கொடுத்து அனுப்பாமல் இருப்பதே கமல் செய்யும் முதல் தவறு என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், அசீமை என்னதான் திட்டினாலும் அவர் திருந்தவே வாய்ப்பில்லை என்றும் கூறி வருகின்றனர்.

கட்டப்பஞ்சாயத்துக்கு விளக்கம்
இதனையடுத்து தற்போது 76வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அசீமிடம் கட்டப்பஞ்சாயத்துக்கு விளக்கம் சொல்லுங்க எனக் கேட்டார். ரேங்கிங் டாஸ்க்கின் போது அமுதவாணனுக்கு ஆதரவாக அசீமை கேள்விக் கேட்டார் விக்ரமன். அப்போது பிக் பாஸ் வீட்டுலயும் கட்டப்பஞ்சாயத்து பண்ணாதீங்க விக்ரமன் என அசீம் மரியாதை குறைவாக பேசினார். கட்டப்பஞ்சாயத்து பற்றி அசீம் காட்டமாக பேசியது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது இதுபற்றி தான் அசீமிடம் கேள்வி கேட்கிறார் கமல்.

கண்டுக்காமல் போன அசீம்
மேலும், "கட்டப்பஞ்சாயத்து பற்றிய உங்கள் புரிதல் என்னன்னு சொல்லுங்க?... உதாரணம் பற்றி எடுத்து சொன்னது எப்படி கட்டப்பாஞ்சாயத்து ஆகும்?. நான் உங்களை கண்டிக்கிறேன், இதுக்கு மேல உங்கக் கூட வாதாட எனக்கு பொறுமை இல்லை. அவமரியாதை செய்றதுக்கு முன்னால், திரும்ப இது நமக்கு வந்தா எப்படி இருக்கும்ன்னு யோசிக்க மாட்டீங்களா?. ரெளத்திரம் பழகலாம், அத தினசரி பயிற்சியாக வைத்துக்கொள்ள கூடாது" என காட்டமாக பேசுகிறார் கமல். இது அசீமுக்கு அசிங்கமாக இருந்தாலும், அவர் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன்கள் விளாசல்
ரேங்கிங் டாஸ்க்கில் அசீம் தான் முதலிடத்தில் வந்து நின்றார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத தனலட்சுமி உட்பட ஹவுஸ்மேட்ஸ் .அனைவரும் அசீமிடம் சண்டையிட்டனர். இதுதான் இப்போது விஸ்வரூபம் எடுக்க, கமல் அசீமை விளாசியுள்ளார். ஆனால், அசீம் இதற்கு மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கக் கூடாது என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.