அசீம் திருந்தவே இல்லை... அதிரடியாக வழங்கப்பட்ட ரெட் கார்டு... பிக் பாஸ் வீட்டில் ட்விஸ்ட்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 11வது வாரத்தை கடந்து அதன் இறுதி பகுதிக்கு வந்துவிட்டது.
கடந்த வாரம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் படி தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டார்.
இதனையடுத்து இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பிக் பாஸ் வீட்டின் கேப்டன் யார் என்ற போட்டி நடைபெற்றது.
இதில், அசீம் - அமுதவாணன் இடையே நடைபெற்ற டாஸ்க்கில், அமுதவாணன் தான் கேப்டனாக தேர்வாகியுள்ளார்.

பிக் பாஸ் 78வது நாள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இனிவரும் நாட்கள் எல்லாமே கோல்டன் டேஸ் தான். 77 நாட்களாக மொத்தம் 11 வாரங்களைக் கடந்துவிட்ட பிக் பாஸ் சீசன் 6, இன்று 78வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக வார இறுதிநாளான கடந்த இரு தினங்களும் அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்தித்தார் கமல். அதில் பிக் பாஸ் வீட்டில் அசீம் நடந்துகொண்ட அத்துமீறல்கள் தான் மிகப்பெரிய பஞ்சாயத்தாக இருந்தது. ஆனால் இறுதியாக தனலட்சுமி தான் எவிக்சன் செய்யப்பட்டார்.

மீண்டும் உருமாறிய அசீம்
முன்னதாக விக்ரமனிடம் அசீம் பயன்படுத்திய கட்டப்பாஞ்சாயத்து என்ற வார்த்தை மிகப் பெரிய சர்ச்சையானது. அப்போது கமல் உட்பட ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே அசீம் நடந்துகொண்ட விதம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், அசீம் வழக்கம் போல சிந்து பாடி கமலுக்கே அல்வா கொடுத்தார். இனிமேல் நான் திருந்திடுவேன் சார், என்னோட அறிவு கண்ண திறந்துட்டீங்க என, கமலுக்கே சாம்பிராணி போட்டுவிட்டார். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் தான் இப்படி, வெளியே நான் தங்கக் கட்டி என சீன் போட்டார். ஆனால், அவரின் பொய் எல்லாம் ஒரே இரவில் வெளிச்சத்துக்கு வந்தது.

கேப்டன் டாஸ்க்கில் சண்டை
இந்த வாரம் முதலில் கேப்டன் டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் அசீம் - அமுதவாணன் இடையே தான் இறுதிப் போட்டி நடைபெற்றது. ஆனால், இதிலும் அசீம் விதிமுறைகளை மீறி விளையாடியதை முதல் ப்ரோமோவில் பார்க்க முடிந்தது. இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக அமுதவாணன் தேர்வாகியுள்ளார். இதனையடுத்து தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதில் பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம் கேப்டன் அமுதவாணன் உட்பட அனைவரும் எவிக்சன் நாமினேஷனுக்குள் இடம்பெற்றனர். அதேபோல் இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடந்துள்ளது.

அசீம்க்கு ரெட் கார்டு
இந்த ஓப்பன் நாமினேஷனில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று கலர்களில் கார்டுகள் உள்ளன. அதனை போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுக்கு கொடுக்க வேண்டும். அதாவது ரெட் கலர் என்றால் அது எவிக்சன் நாமினேஷன், பச்சை சேவ் செய்வதற்கான ஆப்ஷன் என சொல்லப்படுகிறது. அதன்படி அசீம் தன்னிடம் இருக்கும் ரெட் கார்டை ஷிவினுக்கு வழங்குகிறார். ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட மேலும் சிலர் அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்கின்றனர். அதேபோல் விக்ரமன் மணிகண்டனுக்கு ரெட் கார்டு வழங்குகிறார். இதில் அசீமை நாமினேட் செய்த ஹவுஸ்மேட்ஸ், அவர் இன்னும் திருந்தவே இல்லை, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை செய்கின்றனர். இதனால், இந்த வாரமாவது அசீம் எவிக்ட் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications











