பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்... கூடவே ஒரு ரூல்ஸும் போட்டாங்க பாருங்க...

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் தனலட்சுமி எவிக்சன் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் எவிக்சன் என்ற கேள்விகளுடன் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிர்ச்சி வைத்தியமாக Freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

 பிக் பாஸ் 80வது நாள்

பிக் பாஸ் 80வது நாள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 80வது நாளை எட்டிவிட்டது. இன்னும் இருபது நாட்களில் பிக் பாஸ் சீசன் 6 முடிவுக்கு வர உள்ளதால், போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தனலட்சுமி கடந்த வாரம் எவிக்சன் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் எந்த போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 ஐஸ்வர்யா ராஜேஷ் என்ட்ரி

ஐஸ்வர்யா ராஜேஷ் என்ட்ரி

இந்த வாரத்தின் முதல் இரு தினங்களில், கேப்டன்ஷி டாஸ்க், ஓப்பன் நாமினேஷன் நடந்து முடிந்தது. அதேபோல், பிக் பாஸ் கிளாக் டாஸ்க்கும் நடத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன்படி போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆகி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். ஷிவினின் தோழி, அமுதவாணனின் குடும்பத்தினர், மைனா நந்தினியின் கணவர் ஆகியோர் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளே சென்றுள்ளார்.

 ரூல்ஸ் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

ரூல்ஸ் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில் ரச்சிதாவின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார். அவரைப் பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வடித்த ரச்சிதா, அவரது மடியில் படுத்துக்கொண்டு அழுதார். அதன்பின்னர் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், மணிகண்டனின் அம்மா, மனைவி, மகன் ஆகியோர் மெயின் என்ட்ரன்ஸ் வழியாக உள்ளே செல்ல, கன்பெக்‌ஷன் ரூம் வழியே ஐஸ்வர்யா ராஜேஷும் என்ட்ரி கொடுக்கிறார். அவரைப் பார்த்ததும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் உற்சாகமாக கத்துகின்றனர். அப்போது அவர்களுடன் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "நீங்க என்னதான் சண்டை போட்டாலும் சாப்பிடும் போது ஒன்னா இருக்கணும்ன்னு ஒரு ரூல்ஸ் போட்டுக்கோங்க" என்கிறார்.

 வாத்தி கம்மிங் ஆட்டம்

வாத்தி கம்மிங் ஆட்டம்

அதற்கு பதில் சொல்லும் ஹவுஸ்மேட்ஸ், ரூல்ஸ் போடவே ஒரு சண்டை நடக்குமே என ஜாலியாக அவரை கலாய்க்கின்றனர். அதன்பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது அம்மா, மணிகண்டன் ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆட, பிக் பாஸ் போட்டியாளர்களும் ஆட்டம் போடுகின்றனர். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் நடனமாடிய 3வது ப்ரோமோ, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 டிரைவர் ஜமுனா ரிலீஸ்

டிரைவர் ஜமுனா ரிலீஸ்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் இந்த வாரம் ரிலீஸாகிறது. அதேபோல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இந்த வாரம் ரிலீஸாகவிருந்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள் வெளியாக வேண்டாம் என தயாரிப்பாளர்கள் கருதுவதால் தி கிரேட் இந்தியன் கிச்சன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் ஐஸ்வர்யா ராஜேஷ் வந்துள்ளது, டிரைவர் ஜமுனா படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்துள்ளது. தனது அண்ணன் மணிகண்டனை ஆதரிக்கும் நோக்கத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ், தனது படத்துக்கும் ப்ரோமோஷன் செய்துவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X