Don't Miss!
- News
திரைப்படங்கள் குறித்த தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்.. பாஜகவினரை பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல்
- Automobiles
மாட்டு சாணத்தில் ஓடும் வாகனம்... விவசாயிகளின் கவலை எல்லாம் தீர போகுது!
- Lifestyle
Today Rasi Palan 18 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பணம் தொடர்பான எந்த வேலையும் செய்திடாதீர்கள்...
- Sports
உலக கோப்பை ஹாக்கியில் ஷாக்.. ஜப்பான் செய்த ஏமாற்று வேலை.. கையும் களவுமாக சிக்கியது
- Finance
இந்தியா ரஷ்யா இடையில் 2023ல் சிறப்பான சம்பவம் இருக்கு..எஸ் & பி கொடுத்த செம அப்டேட்!
- Technology
அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகமான பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய கோயிலா – மன நிம்மதியை வழங்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
கதிர் ஷிவினோட பிரதர்... பாட்டாவே பாடிய ஹவுஸ்மேட்ஸ்... எல்லாம் அதனால தானா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் 3 வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது.
இதுவரை கிடைத்த ரசிகர்களின் கணிப்பில் விக்ரமன் அல்லது ஷிவின் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த வாரம் Freeze and Loop என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இதில் ஹவுஸ்மேட்ஸ் Freeze இல் இருக்கும் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகி சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்... கூடவே ஒரு ரூல்ஸும் போட்டாங்க பாருங்க...

பிக் பாஸ் 81வது நாள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 81வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்னும் 19 நாட்களில் இந்த சீசனுக்கான பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்ற முடிவு தெரிந்துவிடும். அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ரச்சிதா இவர்கள் தான் இப்போதைக்கு டாப் 6 பொசிஷனில் இருக்கின்றனர். இவர்களில் கூட அசீம், விக்ரம், ஷிவின் மூவரும் தான் டைட்டில் வெல்வதற்கான லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர். இதனால், ஆட்டம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதனிடையே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் Freeze and Loop டாஸ்க் நடைபெற்று வருகிறது.

முதல் ப்ரோமோவில் காதல்
நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏடிகே, ரச்சிதா, மணிகண்டன் ஆகியோரின் குடும்பத்தினர் வந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து இன்று எந்த போட்டியாளரின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி கதிரின் அம்மா, அப்பா ஆகியோருடன் அவரது காதலியும் வந்து சென்றுள்ளார். கதிர் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வ்ந்து அட்ராசிட்டி செய்தது தான் முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில் கதிர் அவரது காதலி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததை எதிர்பார்க்கவே இல்லை. பிக் பாஸ் கொடுத்த இந்த சர்ப்ரைஸை ரொமான்ஸாக கொண்டாடினார் கதிர்.

கதிர் ஷிவினுக்கு பிரதர்
கதிர், அவரது அம்மா ஆகியோருடன் கதிரின் காதலியும் சேர்ந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினர். இதனைத் தொடர்ந்து இன்றைய தினத்துக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஷிவின் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவரது அருகில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அமர்ந்துள்ளனர். அப்போது ஏடிகே ஷிவின் மனநிலையில் இருந்து ஒரு பாட்டுப் பாடுகிறார். கதிர் வீட்டில் இருந்து ஷிவினை பெண் பார்க்க வந்தால் அதை அவர் எப்படி எதிர்பார்த்திருப்பார் என்ற கற்பனையில் ரகளையாக பாடுகிறார் எடிகே. அவருடன் ஹவுஸ்மேட்ஸும் கோரஸ்ஸாக ஷிவினை கலாய்த்து பாடுகின்றனர்.

வெட்கத்தில் சிவந்த ஷிவின்
அப்போது கதிர் ஷிவினின் மாமா இல்லை, கதிர் தான் ஷிவினுக்கு பிரதர் என்ற வரியை சேர்த்து ஹவுஸ்மேட்ஸ் பாட, அதற்கு வெட்கத்தில் சிரிக்கிறார் ஷிவின். பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி காதல் கதைகள் அரங்கேறும் என்பது தெரிந்ததே. இந்த சீசனில் முதலில் அசல் கோளாறு - நிவாஷினி இருவரின் ரூட்டும் ட்ரெண்ட் ஆனது. அடுத்து மூக்குத்தி மூக்குத்தி என ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டர் சுத்தி சுத்தி வந்ததும் வைரலாகி இருந்தது. அதேபோல், கதிருக்கு ஷிவின் ரூட்டு விட, போட்டிக்கு குயின்ஷியும் களத்தில் இறங்கினார். குயின்ஷி வீட்டில் இருக்கும் வரை ஷிவின் - கதிர் - குயின்ஷி என்ற டாக் அதிகம் இருந்தது. அதையே இப்போதும் கையில் எடுத்துள்ள ஹவுஸ்மேட்ஸ், கதிரின் உண்மையான காதலி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றுவிட்டதால், ஷிவின் நிலை இப்படி ஆகிவிட்டதே என பாட்டுப் பாடி கிண்டல் செய்து வருகின்றனர். இந்த ஜாலியான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.