Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஜனனி? விக்ரமன் நியாயமான ஆளே கிடையாது என விளாசிய அசீம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 12வது வாரத்தின் இறுதிப் பகுதியை எட்டியுள்ளது.
இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்புடன் 82வது நாளின் போட்டியை விளையாடி வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.
இந்த வாரம் முதல் 4 நாட்களில் ஜாலியாக சென்றுகொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 6, இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.
அடுத்த இரண்டு தினங்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் எபிசோட் என்பதால், இன்று போட்டியாளர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர்.
அடக்கடவுளே.. மேலாடை அணியாமல் வெளியே சுற்றிய பிக் பாஸ் பிரபலம்.. விளாசும் ரசிகர்கள்!

பிக் பாஸ் 82வது நாள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 82வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆட்டம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதுவரை கிடைத்த தகவலின்படி மணிகண்டன், ஏடிகே இருவரும் தான் குறைந்த ஓட்டுக்கள் வாங்கியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக மணிகண்டன் தான் இந்த வாரம் எவிக்சன் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்றைய தினத்துக்கான மூன்று ப்ரோமோக்களும் வெளியாகிவிட்டன.

விக்ரமனை டார்க்கெட் செய்த மைனா
அதன்படி இன்று வெளியான முதல் ப்ரோமோவில், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதாக தெரிகிறது. முதலில் பேச வரும் மைனா, விக்ரமனை டார்க்கெட் செய்து தனது கருத்துகளை முன்வைக்கிறார். அதில், நீங்கள் ஒப்பினியன் செல்வது சரிதான், ஆனால், எல்லாவற்றுக்கும் கருத்து சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களின் குறைகளை மட்டுமே விக்ரமன் பேசிவருவதாக விமர்சனம் செய்கிறார் மைனா. அதற்கு மைனாவிடம் பதில் சொன்ன விக்ரமன், நீங்க இதுவரை எந்த போட்டியாளர்கள் செய்த தவறையும் சுட்டிக் காட்டி நான் பார்த்ததே இல்லையே எனக் கூறினார்.

சனிக்கிழமை தைரிய லட்சுமி ரச்சிதா
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், அசீம் விளையாடுவது பற்றி விமர்சனம் செய்கிறார் ரச்சிதா. அதில் அசீம் எப்போதும் அடுத்தவர்களை அமுக்கிவிடுகிறார் என கூறுகிறார். உடனே இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அசீம், என்னைப் பார்த்து அப்படி சொல்ல வேண்டாம், நான் யாரையும் அமுக்கிவிடவில்லை. உங்களுக்கு தான் சனிக்கிழமை மட்டும் தைரியம் வருகிறது. கமல் சார் வருவார் என தெரிந்ததும் தைரியமாக பேசுறீங்க. ஆனால், வீட்டில் இருக்கும் என்னிடம் இதுவரை தைரியமாக ஒருநாள் கூட பேசியதே இல்லை என மறுக்கிறார்.

அசீம் - விக்ரமன் மீண்டும் மோதல்
இந்நிலையில், இன்றைய தினத்துக்கான மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜனனி ஷிவினை நாமினேட் செய்த போது, நீங்க அத தப்பா பார்க்கலையா என அமுதவாணனிடம் கேள்வி எழுப்புகிறார். ஆனால் அமுதவாணன் விக்ரமனின் கேள்விக்கு பதிலளிக்காமல், நீங்களும் தான் அசீமை 'ஏய்' என ஒருமையில் பேசியிருந்தீங்க, அப்போ அது தப்பில்லையா என திருப்பிக் கேட்கிறார். அதற்கு விளக்கம் சொல்லும் விக்ரமன், "அவரு சாப்பாட்டுல எச்சி துப்பித் தர்றேன் நீ சாப்பிடுன்னு சொன்னார்" என மேலும் விளக்கம் சொல்ல வருகிறார். ஆனால், அதை அனுமதிக்காத அசீம், நான் Question மார்க் தான் வச்சேன், நீங்க தான் புல் ஸ்டாப் வச்சிங்க, நீங்க தான் நியாயமானவன் மாதிரியும், மற்றவங்க நியாயமற்றவர்கள் மாதிரியும் பேசாதீங்க" என கூறுகிறார். அதனால் கடுப்பான விக்ரமன், நியாயம் இல்லைன்னா, அது நியாயம் இல்லைன்னு தான் சொல்வேன் என கோபமாக செல்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ பிக் பாஸ் ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது.