Don't Miss!
- Technology
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுகம் தேதி இதுதான்.!
- News
ரத கஜ துரக பதாதிகள்..ஈரோட்டில் கிழக்கில் திமுக படைத்தளபதிகள்..சிந்தாமல் சிதறாமல் "சக்கர வியூகம்"
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜனனியை அமுதவாணன் நல்லா Use பண்ணி வெளியே அனுப்பிட்டார்... இத சொன்னது அசீம்... அதுதான் கொடுமை
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 12வது வாரத்தின் இறுதிப் பகுதியை எட்டிவிட்டது.
சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் கமல்ஹாசன் முன்னிலையில் சில பஞ்சாயத்துகள் நடைபெறவுள்ளன.
முக்கியமாக இந்த வாரம் யார் எவிக்சன் என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே இன்றைய தினத்துக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
எங்கப்பா
அந்த
3
பிக்
பாஸ்
பிரபலங்களே
காணோம்..
’துணிவு’
அறிவிப்பில்
மிஸ்ஸான
அமீர்,
பாவனி,
சிபி!

பிக் பாஸ் 83வது நாள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 83வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கமல்ஹாசனும் அகம் டிவி வழியே இன்றைய நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் ஹவுஸ்மேட்ஸ்களின் குடும்பத்தினர் வந்து சென்றனர். அப்போது போட்டியாளர்களுக்கு Freeze - Release என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க் கொடுக்கப்பட்ட மூன்று நாட்களும் பிக் பாஸ் வீடு கலகலப்பாக இருந்தது.

திருந்தாத சில போட்டியாளர்கள்
இந்நிலையில், இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ சற்றுநேரம் முன்பு வெளியாகியிருந்தது. அதில், பிக் பாஸ் ஏரியாவில் என்ட்ரி கொடுத்த கமல், ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த குடும்பத்தினர் அவர்கள் விளையாட்டில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டியிருந்தனர். அதை புரிந்துகொண்டு ஹவுஸ்மேட்ஸ் விளையாடினார்களா இல்லையா என்பதை பார்க்கலாம் என பேசியிருந்தார். அதனால் இன்றைய எபிசோடில் சில டிவிஸ்ட்கள் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அசீம் - அமுதவாணன் மோதல்
அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அடுத்தவர்கள் வாய்ப்பை பறித்தது யார் என்ற கேள்வியை ஹவுஸ்மேட்ஸ்களிடம் கமல் கேட்டதாக தெரிகிறது. அப்போது அதற்காக கொடுக்கப்பட்டிருந்த மஞ்சள் நிற கார்டை அமுதவாணனிடம் கொடுக்கும் அசீம், ஜனனியோட வாய்ப்புகளை பலவகையில் பறித்தார் என காரணம் கூறுகிறார். அங்கிருந்து கட்டாகும் இந்த ப்ரோமோ, நேராக அசீம், அமுதவாணன் இடையேயான சண்டையில் போய் நிற்கிறது. அசீம் சொன்னது உண்மையில்லை என மறுக்கிறார் அமுதவாணன்.

விடாமல் துரத்திய அசீம்
மேலும், இது நூறு சதம் பொய் எனக் கூறுகிறார் அமுதவாணன். அப்போது அமுதவாணனுக்கு பேசுவதற்கே இடம் கொடுக்காமல் துரத்தும் அசீம், ஸ்போர்ட்ஸ்மேன் என சொல்லப்பட்ட ஜனனியை நீங்க எங்கேயுமே விளையாடவிடவில்லை என அசீம் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதற்கு அது ஸ்விமிங்பூல் டாஸ்க் என அமுதவாணன் விளக்கம் கொடுக்க, அதை ஏற்காமல் குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என விடாமல் சீண்டுகிறார் அசீம். மேலும், ஜனனி இந்த வீட்டில் இருந்து போக முழுக்க முழுக்க காரணம் நீங்க தான், அந்தப் பெண்ணை நன்றாக பயன்படுத்தி இங்கே இருந்து அனுப்பிவிட்டதாக அசீம் சொல்வதாக இந்த ப்ரோமோ முடிகிறது.

இதுக்கு ஏன் சண்டை
ஜனனி எவிக்சன் ஆக அமுதவாணன் தான் காரணம் என அசீம் கூறுவதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் அசீம் போடுற சண்டையை தாக்குப்பிடித்து யாருமே இருக்க முடியாது. அதனால் அசீம் - அமுதவாணன் இரண்டு பேருமே இதுக்கு காரணம் எனக் கூறி ட்ரோல் செய்து வருகின்றனர். இறுதியாக இதற்கு கமல்ஹாசன் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.