Don't Miss!
- News
கிருஷ்ணகிரி கல்வீச்சு.. மக்கள் பிரச்சினைகளை கவனம் கொள்ளுங்கள்.. தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
- Finance
அதானி குழும கடன் எவ்வளவு.. எஸ்பிஐ டூ ஐடிஎப்சி.. வெளியாகும் ரிப்போர்ட்..!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Automobiles
75 லட்ச ரூபாய் காரை திடீர்னு தீ வைத்து எரித்த டாக்டர்! காரணத்தை கேட்டதும் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆடிப்போயிருச்சு
- Lifestyle
எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஷிவின், ரச்சிதா Safe Game ஆடுறாங்க... இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்: கடுப்பான அசீம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 88வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், ஹவுஸ் மேட்ஸ்களுக்கு டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.
இந்த வாரம் நடந்த போட்டிகளில் இதுவரை அமுதவாணன், ஏடிகே, கதிர், மைனா ஆகியோர் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.
இன்னொரு வாட்டி அதை பண்ணீங்கனா.. வெளியே அனுப்பிடுவேன்.. ஏடிகேவுக்கு பிக் பாஸ் அதிரடி வார்னிங்!

பிக் பாஸ் 88வது நாள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும். வரும் 21ம் தேதி யார் டைட்டில் வின்னர் என்பது தெரிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இதனிடையே 88வது நாள் போட்டிகள் மிக சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேபோல் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கும் காரசாரமாக நடைபெற்று வருகிறது.

ரச்சிதா - ஷிவின் குரூப்பிசம்
சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மீதமிருக்கும் 8 போட்டியாளர்கள் மட்டுமே டிக்கெட் டூ பினாலேவில் விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் போட்டியாளர் நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளார். இதனால் எட்டு பேரும் தீவிரமாக விளையாடி வரும் நிலையில் ரச்சிதாவும் ஷிவினும் குரூப்பிசம் செய்வதாக அசீம் கூறி வருகிறார். நேற்று நடந்த சைக்கிள் ஓட்டும் போட்டியில், விக்ரமனும் அசீமும் ஒரே சைக்கிளில் அமர்ந்து விளையாடி வந்தனர். அப்போது இன்னொரு சைக்கிளில் அமுதவாணன், ஷிவின், ரச்சிதா மூவரும் விளையாடி வந்தனர். அப்போது ஷிவின், ரச்சிதா இருவரும் கேட்டுக் கொண்டதற்காக அசீமும் விக்ரமனும் ஸ்வாப் செய்தனர்.

கடுப்பான அசீம்
முதல் ஸ்வாப்பிங் சரியாக சென்றாலும் அடுத்த முறை அசீம் 10 நொடிகளுக்கும் மேல் சைக்கிளில் இருந்து இறங்கி அவுட் ஆனார். அதனால் கடுப்பான அசீம் ஷிவின், ரச்சிதா இருவரையும் பார்த்து, "உங்களால் தான் எனக்கு இப்படி ஆச்சு, நான் ஒழுங்கா விளையாடிட்டு இருந்தேன். இப்போ நான் தான் பாதிக்கப்பட்டுருக்கேன். அதனால அடுத்த கேம் உங்க ரெண்டு பேரையும் வச்சு செய்றேன்" என சவால் விட்டிருந்தார். அதேநேரம் இறுதியாக சைக்கிள் டாஸ்க்கில் விக்ரமன் வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு இணையாக ரச்சிதாவும் விளையாடினார்.

மீண்டும் மோதல்
இந்நிலையில் 88வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில் ஷிவின், ரச்சிதா இருவருடனும் மீண்டும் மோதலில் ஈடுபட்டார் அசீம். அப்போதும் அவர்கள் இருவரையும் வச்சி செய்வேன் என அசீம் சவால் விட்டார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அடுத்த டாஸ்க்கில் இரண்டு பேர் ஜோடியாக விளையாட வேண்டும் என சொல்ல, அமுதவாணன் விக்ரமனை தேர்வு செய்கிறார். மைனா - கதிர் இருவரும் இன்னொரு அணியாக விளையாடுகின்றனர். அப்போது ஷிவினை தன்னுடன் விளையாடுமாறு அசீம் அழைக்க, அதற்கு ஷிவின் மறுத்து விடுகிறார்.

நெட்டிசன்கள் ட்ரோல்
மேலும் ரச்சிதாவுடன் விளையாடுகிறேன் என அவர் பக்கம் சென்று விடுகிறார். இதனால் இன்னும் டென்ஷனான அசீம், ஷிவின் - ரச்சிதா கூட்டணிய உடைக்கணும், ஆனா இவங்க Safe Game ஆட அவங்களுக்குத் தேவையான டீம் கூட விளையாடுறாங்க. இது எல்லாம் நியாயமே இல்லை என புலம்புகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அசீம் எந்தப் போட்டியிலும் ஜெயிக்காம இப்படி சொல்றது நியாயமா எனக் கேட்டு வருகின்றனர். அதேபோல் ஷிவின் - ரச்சிதா இருவரும் குரூப்பிசம் செய்வதாகவ்ம் அவர்களுக்கு எதிராக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.