For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பச்சோந்தி விக்ரமன்... நயவஞ்சகக்காரன் அசீம்: மூட்டிவிட்ட பிக் பாஸ்... வேடிக்கைப் பார்க்கும் கமல்

  |

  சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
  13வது வார இறுதி என்பதால் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆனதோடு அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசி வருகிறார்.
  முன்னதாக இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அதிக டைல்ஸ்களை வென்று அமுதவாணன் முதலிடம் பெற்றார். இதனால் இனி நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு அமுதவாணன் தகுதிப் பெற்றுள்ளார்.

  இன்னொரு வாட்டி அதை பண்ணீங்கனா.. வெளியே அனுப்பிடுவேன்.. ஏடிகேவுக்கு பிக் பாஸ் அதிரடி வார்னிங்! இன்னொரு வாட்டி அதை பண்ணீங்கனா.. வெளியே அனுப்பிடுவேன்.. ஏடிகேவுக்கு பிக் பாஸ் அதிரடி வார்னிங்!

   பிக் பாஸ் 90வது நாள்

  பிக் பாஸ் 90வது நாள்

  பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கி தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை 13 பேர் வெளியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடந்தது. அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, ரச்சிதா, மைனா ஆகியோர் இந்த டாஸ்க்கில் விளையாடினர். பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டதன் இறுதியில் அமுதவாணன் இதில் வெற்றிப் பெற்று முதலிடம் பிடித்தார்.

   ஆட்டத்தையே மாற்றிய அமுதா

  ஆட்டத்தையே மாற்றிய அமுதா

  இந்த வாரத்தில் இறுதியாக நடைபெற்ற பிபி கிரிட்டிக்ஸ் விருது விழா, கொஞ்சம் ஜாலியாகவும் சில சண்டைகள் விவாதங்களுடனும் நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று கமல் எபிசோட் தொடங்கியது. இன்னும் இரண்டு நாட்கள் ஹவுஸ்மேட்ஸ்களிடம் அகம் டிவி வழியே பேசப் போகும் கமல் பல பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாக வெளியான இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில், அமுதவாணனின் வெற்றி குறித்தும், அதனால் பிக் பாஸ் வீட்டில் நடந்த மாற்றம் பற்றியும் பேசுகிறார்.

   முதல் ப்ரோமோ

  முதல் ப்ரோமோ

  அதில் "இப்படி நான் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதானா என்று கேட்டவர் எப்பவும் போல் சலைக்காமல் உழைத்து வெற்றிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கிறார். இவரின் வெற்றி இந்த ஆட்டத்தையே மாற்றி அமைத்துவிட்டது. அது எந்தளாவுக்கு என பார்க்கலாம்" எனக் கூறுகிறார். கமல் சொன்னபடி அமுதாவின் வெற்றி இந்த ஆட்டத்தையே மாற்றியுள்ளது உண்மையே. மிக குறைவான வாக்குகளின் அடிப்படையில் அமுதவாணன் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இப்போது டிக்கெட் டூ பினாலேவில் வெற்றிப் பெற்றதால், எவிக்சனில் இருந்து தப்பிவிட்டார். இதனால் அடுத்து குறைவான வாக்குகளை பெற்ற ரச்சிதா அல்லது ஏடிகே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

   நயவஞ்சகக்காரன் அசீம்

  நயவஞ்சகக்காரன் அசீம்

  இதனிடையே இன்றைய தினத்துக்கான மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் எது இவருக்கான குணாதிசயம் என்ற கேள்வியை கமல் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் அசீம், அறுவை, பச்சோந்தி, சுயநலம் என்ற மூன்று குணாதிசயங்களுக்கும் விக்ரமன் பொருந்துவார் எனக் கூறுகிறார். இதற்கான காரணம் சொல்லும் அசீம், "ஷிவின்கிட்ட மட்டும் நீங்க வேற ஒரு விக்ரமனை பார்க்கலாம். மத்தவங்ககிட்ட இன்னொரு விக்ரமனை பார்க்கலாம்" எனக் கூறுகிறார். அதன்பின்னர் அசீம் நயவஞ்சகம் என்ற குணாதிசயத்துக்கு சொந்தமானவர் என பட்டம் சூட்டுகிறார் விக்ரமன். மேலும் "வீக் டேய்ஸ் முழுக்க ஒரு அசீம் இருப்பார், வியாழக்கிழமை ஈவ்னிங் யாருகூட சண்டை போட்டாரோ, அவருக்கு ஒரு காஃபி கொடுத்து பேசி சரிகட்டிவிடுவார்" என்பதாக விளக்கம் கொடுக்கிறார். விக்ரமனின் இந்த கமெண்ட்டுக்கு பார்வையாளர்களிடம் இருந்து பயங்கரமான கைத்தட்டல்கள் கிடைக்கிறது. அதேபோல் நெட்டிசன்களும் விக்ரமனுக்கு ஆதரவாக விக்ரமன் வெறித்தனம் போன்ற கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss hosted by Kamal Haasan is approaching its 90th day. In this case, the second promo for the 90th day has been released now. In this promo, Azeem and Vikraman fight in front of Kamal.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X