Don't Miss!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- News
கொடுங்கோல்.. தலித் கோயிலுக்கு சென்றது தவறா? ஜாதி தீண்டாமை தொடருதே - கொந்தளித்த பா.ரஞ்சித்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
Bigg Boss Tamil 6: இந்த வாரம் எவிக்சனில் ட்விஸ்ட் வைத்த கமல்... யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நேற்றைய தினம் நடந்த எபிசோடில் ஷிவின், விக்ரமன் இருவரும் Save செய்யப்பட்டனர். அசீம், அமுதவாணன் இருவரும் ஏற்கனவே நாமினேஷன் ப்ரீ Zone-ல் இடம்பிடித்துவிட்டனர்.
இந்நிலையில், மீதமிருக்கும் ஏடிகே, கதிர், மைனா நந்தினி, ரச்சிதா இவர்களில் யார் எவிக்சன் செய்யப்படவுள்ளனர் என்பதே சர்ப்ரைஸ்ஸாக உள்ளது.

பிக் பாஸ் 91வது நாள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 91வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை 13 பேர் வெளியேறிவிட்டனர். இந்த வாரம் அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, ரச்சிதா, மைனா என மொத்தம் 8 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த வாரம் நடத்தப்பட்ட டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அமுதவாணன் வெற்றிப் பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று யார் எவிக்சன் என்ற ரிசல்ட் வரப்போகிறது.

விக்ரமன், ஷிவின் Save
வாரத்தின் இறுதி இரண்டு நாட்களும் கமல் எபிசோட் என்பதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். அதன்படி நேற்று அகம் டிவி வழியே பேசிய கமல் முதலில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வென்ற அமுதாவை பாராட்டினார். அதன்பின்னர் ஆரம்பத்திலேயே ஷிவினை Save என அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தார். அதன்பின்னர் கடந்த வாரம் டாஸ்க்கில் நடந்த பஞ்சாயத்துகளுக்கு தீர்ப்பு எழுதும் படலம் தொடங்கியது. இதிலும் எதிர்பார்த்தபடி அசீம் தான் அதிக மொக்கை வாங்கினார். அப்படி இருந்தும் வழக்கம் போல இதெல்லாம் கண்டுக்குற ஆள் நான் இல்லையென சீன் போட்டுக் கொண்டார்.

இந்த வாரம் எவிக்சன்
இந்த எவிக்சன் பிராசசில் ஏற்கனவே அசீமும் அமுதாவும் Save ஆகிவிட்டனர். நாமினேஷன் ப்ரீ டாஸ்க்கில் அசீம் வெற்றிப் பெற்றதால் இதிலிருந்து தப்பினார். அதேபோல் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் கடுமையான உழைப்பை கொடுத்த அமுதவாணன் முதலிடம் பிடித்து வெற்றிப் பெற்றார். இதன்மூலம் இவர் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெற்றார். ஆனால் அதைவிட முக்கியமானது இந்த வாரம் எவிக்சனில் இருந்து அவர் தப்பியது தான். காரணம் வாக்குகளின் அடிப்படையில் அமுதா தான் இந்த வாரம் எவிக்சன் ஆகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

எவிக்சனில் ட்விஸ்ட் வைத்த கமல்
இந்நிலையில், 91வது நாளான இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் செட்டுக்குள் எவிக்சன் கார்டுடன் என்ட்ரி கொடுக்கிறார் கமல். கதிர், ஏடிகே, மைனா நந்தினி, ரச்சிதா இந்த நால்வர் மட்டுமே இன்னும் Save ஆகாமல் இருக்கின்றனர். இந்த ப்ரோமோவில் மைனா நந்தினி, ரச்சிதா இருவரும் தான் எவிக்சன் டாப் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இறுதியாக ஹவுஸ்மேட்ஸ்களிடம் கமல் ஒப்பினியன் கேட்க, பெரும்பாலானோர் மைனா நந்தினி தான் வெளியேறுவார் என கூறுகின்றனர். ஆனால் எவிக்சன் கார்டை எடுக்கும் கமல் அதில் யார் பேரும் இல்லை என ட்விஸ்ட் வைக்கிறார். பின்னர் ஹவுஸ்மேட்ஸ் முன்னால் இருக்கும் பெட்டியை ரச்சிதாவும் மைனாவும் ஒன்றாக திறந்து பாருங்கள், அதில் தான் எவிக்சன் கார்டு உள்ளது என கூறுவது செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதனிடையே ரச்சிதா தான் இந்த வாரம் எவிக்சன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.