நீங்களும் ஆகலாம் பிக் பாஸ்... அவன் குறுக்க மட்டும் போய்டாதீங்க... விக்ரமனை கலாய்த்த ஜிபி முத்து!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வரவிருக்கிறது.
13 வாரங்களை நிறைவு செய்துள்ள பிக் பாஸ் சீசன் 6, தற்போது 14வது வாரத்தின் தொடக்கத்தில் உள்ளது.
இந்த வாரம் எவிக்சன் நாமினேஷனை தவிர வேறு எந்த டாஸ்க்கும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
ஆனால் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து அவர்களது குறைகளை சுட்டிக் காட்ட, முன்னாள் போட்டியாளர்களும் விருந்தினர்களும் வந்து செல்கின்றனர்.

பிக் பாஸ் 94வது நாள்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை 14 பேர் வெளியேறிவிட்டனர். இதனையடுத்து இந்த வாரம் அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா என மொத்தம் 7 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இவர்களில் அமுதா டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டார். இதனையடுத்து மற்ற 6 போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதுவே இந்த சீசனின் இறுதி நாமினேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

நோ டாஸ்க், ஒன்லி என்ஜாய்
இந்த வாரம் எவிக்சன் நாமினேஷனை தவிர வேறு எந்த டாஸ்க்கும் நடைபெறவில்லை. போட்டியாளர்கள் அனைவரும் மனதளவில் இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டும் என பிக் பாஸ் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. அதன்படி இந்த வாரத்தின் முதல் நாளில் பிக் பாஸ் பிரபலங்கள் அமீர், சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். அவர்கள் இருவரும் போட்டியாளர்களின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டி, சில ஆலோசனைகளை வழங்கினர்.

இன்றைய ஹைலைட்ஸ்
அவர்களைத் தொடர்ந்து நேற்று விஜே பார்வதி, விஜே ஷோபனா இருவரும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக இன்றைய முதல் ப்ரோமோவில் ராபர்ட் மாஸ்டரும், அசல் கோளாறும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். அப்போது ஏடிகே மீது அசல் கோளாறு விமர்சனம் வைக்க, ஜாலியாக இருந்த பிக் பாஸ் வீடு மீண்டும் களேபரம் ஆனது. அதன் பின்னர் வந்த இரண்டாவது ப்ரோமோவில் சாந்தியும் ஜிபி முத்துவும் ஸ்டோர் ரூமில் இருந்து வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு மீண்டும் களைக்கட்டத் தொடங்கியது.

விக்ரமனை கலாய்த்த ஜிபி முத்து
இதனையடுத்து தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் நீங்களும் ஆகலாம் பிக் பாஸ் என்ற ஜாலியான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி போட்டியாளர்கள் பிக் பாஸ் வாய்ஸில் கமெண்ட்ஸ் கொடுக்கலாம் என தெரிகிறது. ஏடிகே பிக் பாஸ் போன்று கமெண்ட்ஸ் கொடுக்கும் போது, ஜிபி முத்துவை 15 நிமிட கேப்டனாக நியமிக்கிறார். இதனையடுத்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் கிச்சனை கிளீன் செய்யுமாறு விரட்டுகிறார் ஜிபி முத்து. அப்போது விக்ரமனை வேகமாக வேலை பாருங்க என ஜிபி முத்து விரட்ட, அமுதவாணன் வேற லெவலில் பில்டப் கொடுக்கிறார். இதெல்லாம் தட்டிக் கேக்க ஒருத்தன் வருவான், அவன் குறுக்க மட்டும் போய்டாதீங்க சார் என கேஜிஃஎப் லெவலில் விக்ரமனை கலாய்க்கின்றனர். இந்த ஜாலியான வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











