Don't Miss!
- Finance
ஒரே வாரத்தில் ரூ.2.16 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், எஸ்பிஐ டாப் லூசர்.. லிஸ்டில் யாரெல்லாம்?
- News
வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரச்சிதாவை கலாய்த்த அசீம்... கண்கலங்கிய ராபர்ட் மாஸ்டர்... இவரு திருந்தவே மாட்டாரா?
சென்னை:
கமல்ஹாசன்
தொகுத்து
வழங்கும்
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சி
அடுத்த
வாரம்
முடிவுக்கு
வருகிறது.
சீசன்
6ல்
யார்
பிக்
பாஸ்
டைட்டில்
வின்னராக
வருவார்
என்ற
எதிர்பார்ப்பு
ரசிகர்களிடம்
ஏற்பட்டுள்ளது.
இதில்,
விக்ரமன்,
அசீம்,
ஷிவின்,
அமுதவாணன்
ஆகியோர்
இடையே
கடும்
போட்டி
நிலவும்
என
ரசிகர்கள்
எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில்,
இந்த
வாரம்
நடக்கும்
Sacrifice
Task-ல்
அசீம்
பவுல்
கேம்
ஆடியது
பெரும்
சர்ச்சையாகியுள்ளது.
பிக்
பாஸ்
வீடா
இது...
என்னங்கய்யா
எல்லாரும்
இப்படி
மாறிட்டாங்க...
நம்பவே
முடியல!

பிக் பாஸ் 96வது நாள்
விஜய் டிவி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 6வது சீசனின் இறுதிப் பகுதியை எட்டியுள்ளது. அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா என மொத்தம் 7 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இவர்களில் அமுதா மட்டும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார். அதனால் அவர் மட்டும் இந்த வாரம் எவிக்சன் நாமினேஷனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவுஸ்மேட்ஸ் அட்ராசிட்டிஸ்
இந்த வாரம் எவிக்சன் நாமினேஷனை தவிர வேறு எந்த டாஸ்க்கும் நடைபெறவில்லை. அதேநேரம் அமீர், சுரேஷ் சக்கரவர்த்தி விஜே பார்வதி, விஜே ஷோபனா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று, போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ் என்னவென்பதை சுட்டிக் காட்டினர். அதன்பின் இந்த சீசனில் எவிக்சனான போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். ராபர்ட் மாஸ்டர், அசல் கோளாறு, சாந்தி, ஜிபி முத்து, மணிகண்டன். தனலட்சுமி, நிவாஷினி, குயின்ஷி, ராம் ஆகியோர் மீண்டும் சென்றதால், பிக் பாஸ் வீடே செம்ம ரகளையாக இருக்கிறது.

இப்போதும் திருந்தாத அசீம்
இந்த வாரம் நடைபெறும் Sacrifice Task-ல் அசீம் லுங்கியும் பனியனும் மட்டுமே அணிந்திருக்க வேண்டும் என பிக் பாஸ் ஆர்டர் போட்டுள்ளார். அதன்படி லுங்கி, பனியன் அணிந்திருந்தாலும் அசீம் Uncomfortable-ஆகவே பீல் செய்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவர் ஹேர் ஸ்டைல், மேக்கப் ஏதும் செய்யக்கூடாது எனவும் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அசீம் அடிக்கடி பிக் பாஸிடம் கெஞ்சிக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில், தற்போது வெளியான இன்றைய தினத்துக்கான இரண்டாவது ப்ரோமோவில் ராபர்ட் மாஸ்டரிடம் அசீம் வரம்பு மீறி பேசியது சர்ச்சையாகி உள்ளது.

நெட்டிசன்கள் ட்ரோல்
அதாவது பாத்ரூமில் மேக்அப் கிட்களை ஒழித்து வைத்து யாருக்கும் தெரியாமல் மேக் அப் செய்துள்ளார் அசீம். இதனை ஷிவின், மைனா, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் கண்டுபிடித்து, அசீமிடம் கேட்கின்றனர். அப்போது அசீம் தேவையில்லாமல் "ரச்சிதாவை கலாய்த்ததால் மாஸ்டருக்கு கோபம் வந்துவிட்டது" என சொல்ல, அதனை கேட்ட மாஸ்டர் உடனே கண்கலங்கிவிட்டார். எதுவாக இருந்தாலும் இங்க இருக்குறவங்கள பத்தி பேசணும், ஏன் வெளிய இருக்குறவங்கள இழுக்குற என அழுதபடி வெளியேறிவிட்டார். அப்போதும் தன்னிலை அறியாத அசீம், எந்த பிரச்சினைக்கும் போகமாட்டேன், வந்தா யாரா இருந்தாலும் வச்சு செய்வேன் என ச்வால் விடுவது, ரசிகர்களை எரிச்சல்படுத்தியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் அசீம் பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியே இல்லாத நபர் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.