For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Sacrifice Task போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்... அப்போ அசீம்க்கு மட்டும் ஸ்பெஷலா?

  |

  சென்னை: விஜய் டிவியில் அக்டோபர் 9ம் தேதி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது.
  21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் இதுவரை 14 பேர் வெளியேறிவிட்டனர்.
  அதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

  இதனிடையே இதுவரை எவிக்சனான போட்டியாளர்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து அட்ராசிட்டி செய்துவருகின்றனர்.

  ஆணழகன் அஜித்.. ஷாலினி மடியில் எப்படி உட்கார்ந்து இருக்காரு பாருங்க.. டிரெண்டாகும் த்ரோபேக் பிக்! ஆணழகன் அஜித்.. ஷாலினி மடியில் எப்படி உட்கார்ந்து இருக்காரு பாருங்க.. டிரெண்டாகும் த்ரோபேக் பிக்!

   பிக் பாஸ் 97வது நாள்

  பிக் பாஸ் 97வது நாள்

  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது அதன் இறுதி பகுதிக்கு வந்துவிட்டது. அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா ஆகியோர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இவர்களில் அமுதா டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார். அதனால் அவரை தவிர யாராவது ஒருவர் இந்த வாரம் கண்டிப்பாக எவிக்சன் செய்யப்படுவார்.

   ஹவுஸ்மேட்ஸ் ரிட்டர்ன்ஸ்

  ஹவுஸ்மேட்ஸ் ரிட்டர்ன்ஸ்

  அதன்படி இதுவரை கிடைத்த தகவலின் படி ஏடிகே குறைவான வாக்குகளுடன் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் ஏடிகே தான் பிக் பாஸ் சீசன் 6ல் கடைசி எவிக்சனாக வெளியே செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இதுவரை பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், அசல் கோளாறு, சாந்தி, ஜிபி முத்து, மணிகண்டன். தனலட்சுமி, நிவாஷினி, குயின்ஷி, ராம், ஷெரினா, மகேஷ்வரி ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களுக்கு Sacrifice Task 2.O கொடுத்தனர்.

   அதிருப்தியில் கமல்ஹாசன்

  அதிருப்தியில் கமல்ஹாசன்

  ஏற்கனவே கொடுக்கப்பட்ட Sacrifice Taskல், அசீம் லுங்கு, பணியனோடு வலம் வருகிறார். மைனாவும் ஷிவினும் தங்களது முடியை ஷார்ட் செய்திருந்தனர். அமுதா ஹேர் கலரிங் செய்திருந்தார். விக்ரமன், கதிர் ஆகியோரும் Sacrifice செய்திருந்தனர். ஆனால், பழைய ஹவுஸ்மேட்ஸ்கள் கொடுத்த டாஸ்க்கில் அசீமை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் கொஞ்சம் மோசமான Sacrifice Task கொடுக்கப்பட்டது. அசீம் சேலை அல்லது சுடிதார் அணியவேண்டும் என சொன்னதற்கு, அவர் அதனை மறுத்துவிட்டார். ஆனால் ஏடிகே, விக்ரமன், அமுதா, கதிர், மைனா, ஷிவின் ஆகியோர் கொஞ்சம் ரிஸ்க்கான டாஸ்க் கொடுக்கப்பட்ட போதும் அதனை ஏற்றுக்கொண்டனர். இவர்களிலும் கதிரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் முடி, மேக்கப் சம்பந்தப்பட்ட டாஸ்க் கொடுக்கப்பட்டன.

   யாருக்கு வன்மம்?

  யாருக்கு வன்மம்?

  இந்நிலையில், சனிக்கிழமையான இன்று கமல்ஹாசன் அகம் டிவி வழியே பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார். அதற்கு முன்னதாக வெளியான கமலின் ப்ரோமோ ஷாட்டில், Sacrifice Task கொடுக்கப்பட்டதை சிலர் தியாக மனப்பான்மையோடு ஏற்றுக்கொண்டாலும், இன்னொருபக்கம் வன்மத்துடன் டாஸ்க் கொடுக்கப்பட்டதாக தனது அதிருப்தியை தெரிவிக்கிறார். அதுகுறித்து ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசலாம் என சொல்லுவதாக முதல் ப்ரோமோ முடிவடைகிறது. அதாவது அசீம்க்கு ஹேட் கட்டிங், ஷேவிங் டாஸ்க் கொடுக்க வேண்டாம், அடுத்த வாரம் வெளியே போனால் முடி இல்லாமல் நன்றாக இருக்காது என தனா, மணிகண்டன், அசல் கோளாறு முடிவெடுத்தது தான் காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   கமல் கொடுத்த ட்விஸ்ட்

  கமல் கொடுத்த ட்விஸ்ட்

  இதனையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் Sacrifice Task விளையாடிய போட்டியாளர்களை பாராட்டுகிறார் கமல். மேலும், உங்களை நாயகர்களாக பார்க்க வேண்டும் என்பதால் தான் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதனால் உங்களுக்கு டைம் கொடுக்குறேன், மீண்டும் பழையபடி வாருங்கள் எனக் கூறுகிறார். உடனடியாக 7 பேரும் Sacrifice Task இல் இருந்து விடுபட்டு இயல்பாக வருகின்றனர். ஆனாலும், ஏடிகேவின் நிலை தான் கொஞ்சம் பரிதாபமாக உள்ளது. இதன் பின்னர் தான் இந்த டாஸ்க்கில் யார் யார் எப்படி விளையாடினார்கள் என்ற தீர்ப்பு வரும் என தெரிகிறது. அதனை இன்று இரவு எபிசோடில் தெரிந்துகொள்ளலாம். அதேநேரம் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அசீம் எந்த Sacrifice-ம் செய்யவில்லை என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss hosted by Kamal Haasan is approaching its 97th day. In this case, the second promo for the 97th day has been released now. In this promo, Kamal appreciates the Sacrifice Task contestant in the Bigg Boss house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X