Don't Miss!
- News
டெல்டாவில் பயிர் சேதம்! ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு தருக! அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ஷிவின்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டதால் சில எமோஷனலான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்த பிக் பாஸ் வீடு இப்போது ஆனந்தம் விளையாடும் வீடாக மாறிவிட்டதா என ரசிகர்களுக்கே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
டாஸ்க்
எல்லாம்
முடிந்து
ஜாலியாக
அரட்டை
அடித்து
வரும்
பிக்
பாஸ்
போட்டியாளர்கள்,
இன்று
சீரியல்
ஆர்ட்டிஸ்ட்டாக
கண்ணீர்
வடித்து
வருகின்றனர்.
இந்த
வாரம்
யார்
எவிக்சன்
என்பதையும்
கடந்து
தற்போது
வெளியான
இரண்டாவது
ப்ரோமோ
பிக்
பாஸ்
ரசிகர்களையே
திக்குமுக்காட
வைத்துள்ளது.
பிக்
பாஸ்
சீசன்
6
கடைசி
எவிக்சன்
யார்...
ஹவுஸ்
மேட்ஸ்களுக்கே
ட்வீஸ்ட்
வைத்த
கமல்

பிக் பாஸ் 98வது நாள்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அசீம், விக்ரமன், ஷிவின் இந்த மூவரில் ஒருவர் தான் டைட்டில் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே 94வது நாளான இன்று ஏடிகே, கதிர், மைனா இவர்களில் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுவரை கிடைத்த தகவலின் படி ஏடிகே தான் எவிக்சனாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆனந்தம் விளையாடும் வீடு
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்தே அசீம், தனா, விக்ரமன், ஷிவின், அமுதா, ஏடிகே, மகேஸ்வரி உள்ளிட்ட அனைத்துப் போட்டியாளர்களும் எதேனும் ஒரு தருணத்தில் சண்டையிட்டு வந்தனர். பெரும்பாலான நேரங்களில் சண்டை தான் பெரிய டாஸ்க்காக இருந்தது. இதனால் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீடு ரணகளமாக தெரிந்தது. இந்நிலையில், அடுத்த வாரத்துடன் பிக் பாஸ் சீசன் முடிவுக்கு வருவதால், இப்போது ஆனந்தம் விளையாடும் வீடாக மாறிவிட்டது.

நன்றியும் நெகிழ்ச்சியும்
இந்த சீசனில் இருந்து இதுவரை வெளியேறிய 11 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் திரும்பவும் அடியெடுத்து வைத்துள்ளனர். அதன்படி ராபர்ட் மாஸ்டர், அசல், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, நிவாஷினி, ஷெரினா, மகேஸ்வரி, மணிகண்டன், ராம் ஆகியோர் உள்ளே வந்தனர். இவர்கள் அனைவருக்கும் கமல் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதில் பிக் பாஸ் வீட்டில் யாராவது ஒருவருக்கு நீங்கள் நன்றி கூறுவதாக இருந்தால் அது யார் எனக் கேட்கிறார்.

கதறி அழுந்த ஷிவின்
அதன்படி முதலில் ஷிவின் எழுந்து கண்ணீர் மல்க ரச்சிதாவிற்கு நன்றி கூறுகிறார். அடுத்து தனா இந்த வீட்டில் கிடைத்த அழகான தங்கை என நெகிழ்ச்சியடைகிறார் கதிர். ராபர்ட் மாஸ்டர் வழக்கம் போல அப்பா ஸ்தானம் கொடுத்த குயின்ஷிக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல் அசீம் அண்ணா கூட பெரிய கனெக்ட் இருக்குதுன்னு தனா சொல்ல, விக்ரமனுக்கு நன்றி தெரிவிக்கிறார் மகேஷ்வரி. இறுதியாக இந்த ப்ரோமோவில் வரும் ராம், ஷிவின் எனக்கு சிஸ்டர் மாதிரி என உருக்கமாக கூற, அதைக் கேட்ட ஷிவின் கதறி அழுகிறார். இந்த நன்றி சொல்லும் சம்பவம் பிக் பாஸ் வீட்டையே மெகா சீரியல் போல் மாற்றியுள்ளது. ஆனாலும் இது ரசிகர்களை மிகவும் உணர்ச்சிவயப்பட வைத்துள்ளது.