Don't Miss!
- Automobiles
2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க
- Technology
அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!
- Finance
ஆக்ஸிஸ் வங்கி தூள்.. ரூ.5853 கோடி லாபம்.. முதலீட்டாளர்களுக்கு சான்ஸ் கிடைக்குமா?
- News
சாதாரண ரைஸ் 'ஃப்ரைட் ரைஸாக' மாறிய விசித்திரம்.. குக்கருக்கு அடியில் பார்த்தால் "உவ்வே.."
- Travel
இந்தியாவிலேயே மிக பழமையான நகரம் நம் பூம்புகார் தானாம் – ஆராய்ச்சி கூறுகிறது!
- Sports
அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு வீரர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்!
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
The best find of the Bigg Boss 6: தனலட்சுமி வெற்றியாளர்... ஷிவின் புரட்சியாளர்... சொன்னது யாரு?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 14வது வாரத்தின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டது.
இந்த சீசனில் இருந்து வெளியான 11 போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு டாஸ்க் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதால் பிக் பாஸ் வீடே ஜாலியாக உள்ளது.
இந்த வாரம் கடைசி எவிக்சனில் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்றைய தினத்துக்கான 3வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
நன்றி
சொல்ல
உனக்கு
வார்த்தை
இல்லை
எனக்கு...
பிக்
பாஸ்
வீட்டில்
கதறி
அழுத
ஷிவின்

இறுதிக் கட்டத்தில் பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பில் விக்ரமன், அசீம் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே பிக் பாஸ் ஹீரோ விக்ரமன், டைட்டில் வின்னர் அசீம் என்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. இவர்களுக்குப் பின்னர் ஷிவின், அமுதவாணன் ஆகியோர் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் விக்ரமனுக்கே சப்போர்ட் செய்து வருகின்றனர்.

கவனம் ஈர்த்த ஷிவின்
21 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த சீசனில் ஷிவினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கையான ஷிவின் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த முதல் ஓரிரு வாரங்கள் வரை அங்கிருக்கும் சூழலை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினார். அதேபோல் பெரும்பாலான ஹவுஸ் மேட்ஸ்களும் ஷிவினிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருந்ததை பார்க்க முடிந்தது. மேலும் சில போட்டிகளின் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஷிவின் அவரது பாலினத்தை பின்னணியாக வைத்து கேலி கிண்டல் செய்யப்பட்டார். அவை எல்லாவற்றையும் கடந்து 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாதனைப் படைத்துள்ளார் ஷிவின்.

இந்த சீசனின் சிறந்த கண்டுபிடிப்பு
20 போட்டியாளர்களும் தனித்தனியாக விளையாட ஷிவின் மட்டும் ஒரு சமூகத்தின் உரையாடலாக இந்த பிக் பாஸ் சீசனில் தொடர்ந்தார். காலங்காலமாக புறக்கணிக்கப்படும் திருநங்கை சமூகத்தில் இருந்து வந்த ஷிவின், தனக்கு கிடைத்த வாய்பை சரியாக பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என கமல்ஹாசன் கேட்டதற்கு பலரும் ஷிவினை குறிப்பிட்டனர். அதனையடுத்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் யார் பிக் பாஸ் சீசன் 6ன் சிறந்த கண்டுபிடிப்பு என ஹவுஸ் மேட்ஸ்களிடம் கேட்கப்பட்டது.

இதுவே பெரிய புரட்சி
அப்போது மைனா, அசீம் இருவரும் தனலட்சுமியை குறிப்பிடுகின்றனர். எந்தவொரு மீடியா வெளிச்சமும் இல்லாமல் இவ்வளவு தூரம் வந்தது பெரிய விசயம் என பாராட்டினர். அடுத்து பதிலளிக்கும் ராம், சாந்தி, விக்ரமன் உள்ளிட்டோர் ஷிவின் தான் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பட்டம் கொடுக்கின்றனர். இதை பெரிய புரட்சியாகப் பார்க்கிறேன், பேசுவதை விட வாழ்ந்து காட்டுவது கடினம். அதனை ஷிவின் செய்துள்ளார் என விக்ரமன் கூறுகிறார். அவரின் இந்த கருத்தை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஷிவின் நிச்சயம் அதற்கு தகுதியானவர் என்று ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.