Don't Miss!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- News
ஒரு வேளைக்கு ரூ 3 லட்சத்தில் டீ குடிக்கும் நீடா அம்பானி.. மகன் நிச்சயத்தில் செய்த காரியம் தெரியுமா?
- Technology
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அசீமுக்கு ரெட் கார்டு கொடுங்க..அப்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கும்..கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 ஒன்பது வாரங்களை கடந்து 10வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதால், இனிவரும் டாஸ்க்குகள் கடுமையானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் ராம், ஆயிஷா வெளியேறினார்கள்.
இதுவரை 7 பேர் வெளியேறி உள்ள நிலையில், தற்போது, விக்ரமன், அசீம், ஷிவின், ரச்சித்தா, தனலட்சுமி,ஜனனி, ஏடிகே,கதிரவன், அமுதவாணன்,மைனா ஆகியோர் இருக்கிறார்கள்.
3 குரங்குகள் போஸ்...நண்பர்களுடன் செம லூட்டி அடிக்கும் பிக் பாஸ் ஷெரீன்!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் வீடு நேற்று திங்கட் கிழமை என்பதால் சற்ற சுறுசுறுப்பாகவே இருந்தது. கடந்த வாரம் நடந்த கதாபாத்திர டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட அமுதவாணன், மைனா, ரச்சித்தா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். அதாவது, டப்பில் இருக்கும் தண்ணீரை பின்பக்கமாக அமர்ந்து, கட்டியிருக்கும் டயாப்பரின் மூலம் நீரை உறிஞ்சிக் கொண்டு, தூரத்தில் இருக்கும் சேரில் அமர்ந்து பிழிய வேண்டும். சேரின் கீழே இருக்கும் பாட்டிலை யார் முதலில் நிரப்புகிறார்களோ அவரே தலைவர் இந்த டாஸ்க்கை ரச்சித்தா விரைவாக செய்து முடித்து இந்த வாரத்தின் தலைவர் ஆனார்.

ஹிட் லிஸ்டில் யார்?
இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. இதில் ஜனனி, ஏடிகே, அசிம், விக்ரமன், மணி மற்றும் ரச்சிதா ஆகியோரை அனைவரும் பல காரணங்களை கூறி நாமினேட் செய்தனர். ரச்சித்தா இந்த வாரம் தலைவராகி உள்ளதால், இந்த வாரம் அவர் வெளியே வாய்ப்பு இல்லை. அதேபோல, அசீம் மற்றும் விக்ரமனும் வெளியேற வாய்ப்பு இல்லை என்பதால், இந்த வாரம், ஜனனி, மணி, ஏடிகே ஹிட் லிஸ்டில் இருக்கிறார்.

சொர்க்கமா..நரகமா டாஸ்க்
தற்போது இந்த வாரத்திற்கான சொர்க்கமா..நரகமா டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளனர். கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கிற்காக வீட்டில் சிறி கூண்டு வடிவில் ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் நரகத்தில் அதிக நேரம் சைக்கிள் பேடலில் செய்பவர் சொர்க்கத்திற்கு வரலாம், அதேபோல குறுக்குவழியில் சிறிய கூண்டை திறந்து கொண்டும் சொர்க்கத்திற்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது ப்ரோமோ
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் அசீமுக்கும் அமுதவாணனும் சண்டை போட்டுக்கொள்கின்றனர். ஜனனி மற்றும் தனலட்சுமிக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருந்தால் எப்படி என அசீம் கேட்க இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நிகழ்ச்சி விறுவிறுப்பா இருக்கும் என்று இப்போதே நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கி விட்டனர்.

அப்போதுதான் விளங்கும்
ஒரு சில இணையவாசிகள் அசீமுக்கு ஆதரவு தெரிவித்தாலும், அசீம் எந்த விளையாட்டையும் விளையாட விடுவதே இல்லை என்றும், கேட்டால் என்னைப் பிடிக்காதவங்க வீட்ல இருக்கலாம். ஆனா என்னைப் பிடிச்சவங்க வெளில கோடி பேரு இருக்காங்க என்று வியாக்காணம் பேசுகிறார். இவரை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பினால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி விளங்கும் என பதிவிட்டுள்ளார்.