Don't Miss!
- News
மீண்டும் வண்டியை ஈரோட்டுக்கு விட்ட ஈபிஎஸ்.. உங்க பூத்ல நிலவரம் என்ன? பொறுப்பாளர்களுடன் மீட்டிங்!
- Sports
ஆஸி.யை வீழ்த்த 2 செய்தால் போதும்.. ரோகித் படைக்கு முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் அறிவுரை
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
அதானி குழுமம்: ஹிண்டன்பர்க் மூலம் எல்ஐசி-க்கும் பிரச்சனை.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை..!
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
பிக் பாஸ் வீட்டில் ரூல்ஸ் மீறப்படுகிறதா? அமுதவாணனை அழ விட்ட கமல்ஹாசன்!
சென்னை : பிக் பாஸ் பத்தாவது வாரத்தில் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடந்த நிலையில், இந்த வாரம், கன்சேக்ஷன் ரூமில் நாமினேஷன் நடந்தது.
இதில் இந்த வாரம் நாமினேஷனில் அசீம், மணிகண்டன், ஏடிகே, ஜனனி, விக்ரமன், ரக்ஷிதா ஆகியோர் நாமினேஷனில் சிக்கினார்கள். அதில் குறைந்த வாக்குகளை பெற்று ஏடிகே வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் நாமினேஷன் ரூல்கள் மீறப்பட்டு வருகிறது என்கிறார் கமல்.
Bigg Boss Tamil 6: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர் தான்.. லீக்கான தகவல்!

அசீமுக்கு பெருகும் ஆதரவு
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்திலிருந்து அதிக முறை நாமினினேஷனில் சிக்கிய அசீம் இந்த வாரம் வெளியேறுவார் என்று பார்த்தால், இந்த வாரமும் அதிக வாக்குகளை பெற்று அவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை எப்படியாவது வெளியில் அனுப்பிவிட வேண்டும் என போட்டியாளர்கள் தொடர்ந்து அவரை நாமினேட் செய்து வருகின்றனர். ஆனால், அவருக்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது.

வலுவான போட்டியாளர் ஷிவின்
அதே போல பத்து வாரங்கள் ஆகியும் ஷிவின் ஒருமுறைக்கூட நாமினேஷனில் வரவில்லை. பிக்பாஸ் வீட்டில் வலுவான போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார். டாப் லிஸ்ட்டில் முதல் இடத்தில் ஆசீம், இரண்டாவது இடத்தில் விக்ரமன், மூன்றாவது இடத்தில் ஷிவின்,நான்காவது இடத்தில் தனலட்சுமி இருக்கிறார்.

ரூல்ஸ் மீறப்படுகிறது
இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் தாமதமாகவே வெளியாகின. சற்று முன் வெளியான ப்ரோமோவில், கமல்ஹாசன் நாமினேஷன் ரூல்கள் மீறப்பட்டு வருகிறது என்றார். அப்போது பேசும் தனலட்சுமி, ஜனனி யாருக்கு போடப்போறீங்கனு கேட்டார் என்று ஏதோ சொல்ல வர... குறுக்கிடும் கமல்...ஓ...ஜனனி சொல்லுவாங்களா? என கேட்க ஆடியன்ஸ் பக்கம் இருந்து கைத்தட்டல் பறக்கிறது. இதையடுத்து, அமுதவாணன் நீங்களே சொல்லுங்கள் என்று சொன்னதும்... சார்....நான் வந்து...என்று தயக்கத்துடன் பேச, நீங்க சொல்றீங்களா நானே உடைத்துவிடட்டுமா என பீடிகையோடு இரண்டாவது ப்ரோமோ முடிகிறது.

சூழ்ச்சி எது? நேர்மை எது?
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் நேர்மையாக, தீவிரமாக விளையாடியும் சில பேர் வெளியில் இருக்கிறார்கள். சில நேரம் நேர்மையான போராட்டங்களை சூழ்ச்சி வீழ்த்தி விடுகிறது. ஆனால், சூழ்ச்சி எது? நேர்மை எது என்று பிரிந்துப்பார்க்க வேண்டியது நம்ம கடமை இல்லையா என கூறிவிட்டு தனக்கே உரிய பாணியில் பிரிச்சிடலாமா என கேட்டு இருந்தார்.