For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சீட்டு போட்டு குலுக்கி..வெளியேறுபவரின் பெயரை அறிவிக்கும் கமல்..இது புதுசா இருக்கே!

  |

  சென்னை : சீட்டு போட்டு குலுக்கி வெளியேறும் போட்டியாளரின் பெயரை கமல் தேர்வு செய்துள்ளார்.

  பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 70 நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.ஆரம்பத்தில் சண்டையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி 70 நாள் ஆகியும், இன்னமும் சண்டை சற்றும் குறையாததால் பார்வையாளர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.

  காரணத்தோடு சண்டை போட்டால் பரவாயில்லை, எதற்கு எடுத்தாலும் சண்டை வருவதால் சற்று கடுப்பாகவே இருக்கிறது.

  பாயாசம் போடுற அந்த ஆயாவே அசீம் தானா? ஷெரினா, குயின்ஸி இப்போ ஜனனி.. என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்?பாயாசம் போடுற அந்த ஆயாவே அசீம் தானா? ஷெரினா, குயின்ஸி இப்போ ஜனனி.. என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்?

  பிக் பாஸ் சீசன் 6

  பிக் பாஸ் சீசன் 6

  நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரையும் நிற்க வைத்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நைசாக மடக்கி மடக்கி கேள்வி கேட்டார். நாமினேஷனில் ரூல்ஸ்சை மீறி செயல்படுவது யார் என்று கேட்டு அமுதவாணன், ஜனனி, தனம் செய்த தவறை சுட்டிக்காட்டி அவர்களை எச்சரித்தார்.

  அசீமை வறுத்தெடுத்த கமல்

  அசீமை வறுத்தெடுத்த கமல்

  மேலும்,சொர்க்கமா நரகமா டாஸ்கின் போது குகைக்குள் விக்ரம் முதலில் கை வைத்த போதும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு ஜனனி தான் கை வைத்தார் நான் கண்ணாலப் பார்த்தேன் என்று கூறியதால், குறும்படத்தை போட்டுக்காட்டி கை வைத்தது யார் என்பதை நிருபித்தார்.மேலும், கண்ணால பார்த்தேன் என்று சொன்ன அசீமை சும்மா லெஃப்ட் அண்ட் ரைட்டு வாங்கிய கமல் சும்மா கூட்டத்தோடு கோவிந்தா போடாதீர்கள் என்றார். இதையடுத்து, நேர்மையாக இருந்த விக்ரமன் சேவ் செய்தார்.

  வசமா மாட்டிக்கொண்ட ஷிஷின்

  வசமா மாட்டிக்கொண்ட ஷிஷின்

  அதே போல ஷிவினும் கதிர் சொர்க்கத்திற்கு போக ஃபேவரிசம் காட்டினார் என் போட்டியாளர்கள் அனைவரும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து ஷிவினிடம் விளக்கம் கேட்ட கமல், விளையாட்டில் ஃபேவரிசம் இருக்கக்கூடாது விளையாட்டை நேர்மையாக விளையாட வேண்டும் என்று ஷிவினுக்கும் ஒரு மிரட்டல் விடுத்தார்.

  மூவரில் யார் வெளியேறுவார்?

  மூவரில் யார் வெளியேறுவார்?

  இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல்ஹாசன் இந்த மூவரில் யார் வெளியேறுவார் என நினைக்கிறீர்கள் என மணிகண்டன், அசீம், ஜனனியை பார்த்துக் கேட்கின்றார். அதற்கு மூவருமே நான் தான் போவேனு தோனுது சார் என அவர்களே தங்களின் பெயரை கூறிக்கொண்டனர்.

  இது புதுசா இருக்கே

  இது புதுசா இருக்கே

  இதனைத் தொடர்ந்து கமல் எவிக்சன் கார்ட்டை உள்ளே வைத்து விட்டு இனி இது எல்லாம் தேவையில்லை, குடவோலை முறையில் யார் தெரிவு செய்யப்படுகின்றீர்களோ அவர்கள் பேசாமல் வெளியே வந்து விடுங்கள் எனக் கூறுகின்றார். அப்போது,ஏடிகே கண்ணாடி குடுவையில் இருந்து ஒருவரின் பெயரை எடுக்கிறார். அது யாராக இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். குறைந்த வாக்குகளை பெற்ற ஜனனி வெளியேறி உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.இருந்தாலும், இன்று இரவு வெளியாகும் போட்டியாளர் யார் என்று தெரிந்து விடும்.

  நேர்மைக்கு கிடைத்த வெற்றி

  நேர்மைக்கு கிடைத்த வெற்றி

  மேலும், நேற்றைய எபிசோடில், ஜெயிக்காமல் ஜெயித்தேன் என்று கொண்டாடிய ஜனனிக்கு தலையில் குட்டுவைத்த கமலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார். ஒரு நெட்டிசன் இணையத்தில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும். இது விக்ரமனின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி என்று மீம்ஸ் போட்டு பாராட்டி உள்ளார்.

  English summary
  Bigg Boss Tamil Season 6 : December 18th episode Promo 1
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X