கட்டப்பஞ்சாயத்து பண்ணாதீங்க..வரம்பு மீறி பேசிய அசீம்…கொந்தளித்த விக்ரமன்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், கட்டப்பஞ்சாயத்து பண்ணாதீங்க என்று வரம்பு மீறி பேசிய அசீமை விக்ரமன் கடுமையாக கண்டித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இப்போது 10போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நாட்கள் நெருங்க நெருங்க டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பிக்பாஸ் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இந்த சீசனின் வலுவான போட்டியாளராக அசீம், விக்ரமன், ஷிவின், தனலட்சுமி இருக்கிறார்கள். இதில் அசீம் மற்றும் விக்ரமன் வெற்றி பெற அதிகவாய்ப்பு இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கால்வாசி கிணறைத் தாண்டி விட்டது. அடுத்த மாதம் இந்த நேரத்திற்கு எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெற்றியாளர் யார், ரன்னர் அப் யார் என்று தெரிந்து விடும். இதனால், இனிமேல் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கும். டாஸ்க்குகள் அடுத்த வாரத்தில் இருந்து நிச்சயம் கடுமையாகவே இருக்கும்.

கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள்

கடந்த இரண்டு வாரங்களாக பிக் பாஸ் வீடு அமைதியாகவே இருந்தது, கடந்த வாரம் சொர்கம் நரகம் டாஸ்கும் இந்த வாரம் கனா காணும் காலங்கள் டாஸ்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் ,பள்ளி மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் போட்டியாளர்கள் மாறினார்கள். இதையடுத்து, நேற்று 80ஸ் கல்லூரியாக மாற்றப்பட்ட பிக்பாஸ் வீட்டில் விதவிதமாக உடை அணிந்து போட்டியாளர்கள் அலப்பறை கொடுத்தனர்.

கொளுத்திப்போட்ட பிக் பாஸ்

கொளுத்திப்போட்ட பிக் பாஸ்

இந்த வாரத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இல்லாமல், அனைவரும் ஜாலியாகவே இருந்ததைப் பார்த்து கடுப்பாகிப் போன பிக் பாஸ், இன்றைக்கு ரேங்கிங் டாஸ்க்கை கொடுத்து பிரச்சனையை கொளுத்திப் போட்டுள்ளார். காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், பர்சர் அடித்ததும், அனைவரும் ரேங்கிங் நம்பர் முன் ஓடிவந்து நின்றுவிட கடைசியாக வந்த ஷிவின், ஏடிகேவிடம் பேசுவார். அப்போது ஏடிகே உனக்கு இந்த இடத்தில் இருக்க தகுதியே இல்லை என்ற ஆத்திரத்தில் கத்துகிறார்.

அவமானப்படுத்தக்கூடாது

அவமானப்படுத்தக்கூடாது

இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ கூடாது என அசீமை விக்ரமன் கண்டிக்கின்றார். அப்போது அசீம் பருப்புப் பஞ்சாயத்து என்று கூற,கடுப்பான விக்ரமன், இது உங்களுக்குரிய இறுதி எச்சரிக்கை, ஏற்கனவே மண்னை கவ்வியதை மறந்துவீட்டீங்களா அசீம், மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்ல.

கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க

கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க

விக்ரமன் இது பிக் பாஸ் வீடு, இங்க வந்து கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க என்று மீண்டும் மீண்டும் விக்ரமனை ஆத்திரம் அடையும் வகையில் அசீம் பேச, கோவத்தின் உச்சத்திற்கு சென்ற விக்ரமன், நான் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்தேன் என்று நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று கத்துகிறார். அதற்கு அசீமும், எனக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சினை முடிஞ்சுது, நீங்க எதற்கு இடையில வாறீங்க எனக் கேட்கிறார். காலையில் வெளியான முதல் ப்ரோமோவிலும் அசீம் மற்றும் விக்ரமனுக்கு சண்டை முட்டிக்கொண்டதால், இன்றைய எபிசோடு சும்மா தரமாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X