Don't Miss!
- News
எச்.ராஜா வீட்டருகே பெரியார் சிலை.. அகற்றிய காரைக்குடி போலீஸ்! "பாஜக ஆட்சியா?" என கொந்தளிக்கும் திவிக
- Lifestyle
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோட MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஷிவின் பண்ணால் தப்பில்லை..நான் பண்ணால் தப்பா..விக்ரமனின் செயலால் கடுப்பான மைனா!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 76வது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் , ஷிவின் பண்ணா தப்பில்லை நான் பண்ண தப்பா என்று மைனா விக்ரமனை நிற்க வைத்து கேள்வி கேட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று குறைந்த வாக்குகளை பெற்று தனலட்சுமி, வெளியேறினார். வலுவான போட்டியாளராக இருந்த தனம் வெளியேறியது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
தற்போது வீட்டில், ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ஏடிகே, அமுதவாணன், விஜே கதிரவன், விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 9 போட்டியாளர்கள் உள்ளனர்.
அசீமுக்கு
ரெட்
கார்டு
கொடுங்க..அப்போது
தான்
பிக்பாஸ்
நிகழ்ச்சி
விளங்கும்..கொந்தளிக்கும்
நெட்டிசன்ஸ்!

கேப்டன் ஆன அமுதவாணன்
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் ரேங்க் டாஸ்கில் முதல் இரண்டு இடத்தை பிடித்த அமுதவாணமும், அசீமும் இந்த வாரத்தின் கேப்டன் பதவிக்கான டாஸ்கிற்காக போட்டியிடுகின்றனர். இதில், இருவரும் ஒரே கயிற்றில் கட்டப்பட்டுள்ளனர். கீழே உள்ள பரிசுகளை எடுத்து, அவர்களுக்காக கொடுக்கப்பட்ட பெட்டியில் போடவேண்டும். அதிக பரிசுகளை யார் எடுக்கிறரோ அவரே இந்த வாரத்தின் கேப்டன் ஆவார். இதில், அமுதவாணன் அதிக பரிசு பெட்டியை எடுத்து இந்த வாரத்தின் கேப்டன் ஆனார்.

ரெட் காட்டை வாங்கிய அசீம்
இதையடுத்து இரண்டாவது ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான ஓப்பன் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் , ரெட் கார்ட்டை எடுத்து காரணத்துடன் ஒருவரை நாமினேட் செய்யவேண்டும். இதில் அசீம், ஷிவினுக்கு ரெட் கார்டை கொடுத்து இந்த வீட்டில் பெருசா எதையும் செய்யவில்லை என்றார். அதே போல அமுதவாணன்,ஷிவின் அசீமுக்கு ரெட் கார்டை கொடுத்தார்கள்.

நாமினேஷனில் சிக்கினார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமான கேப்டனாக இருப்பவர்கள் நாமினேஷனில் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் வாரத்தின் எலிமினேஷன் நாமினேஷனிலிருந்து தப்பிக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் அந்த விதிமுறையை பிக் பாஸ் இந்த வாரம் மாற்றி உள்ளது. இந்த வாரத்தின் கேப்டனாக அமுதவாணனும் நாமினேஷனில் சிக்கி உள்ளார்.

நிற்கவைத்து கேள்வி கேட்ட ஷிவின்
தற்போது, இன்றைய நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.இதில் விக்ரமன் மைனாவை நாமினேட் செய்கிறார். இதையடுத்து, மைனாவும் விக்ரமனும் நாமினேஷன் செய்தது குறித்து பேசுகிறார்கள். அப்போது, மைனா, விக்ரமனிடம் அந்த காரணத்திற்காகத்தான் என்னை நாமினேட் செய்தீர்கள் என்றால், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதை தப்பைத்தான் அன்னைக்கு ஷிவின் பண்ணாங்க, அது உங்களுக்கு தப்பா தெரியவில்லையா என்று விக்ரமனை நிற்கவைத்து கேள்வி கேட்பது போல மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.