Don't Miss!
- News
'பேனா நினைவு சின்னம்..' நல்ல நோக்கத்திற்காக செய்கிறார்கள்.. நாம் பாராட்ட வேண்டும்.. சொல்வது ஓபிஎஸ்
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்ன இதெல்லாம்..அட்மின் பார்த்த வேலையா இது..கமலின் பேச்சால் கடுப்பான நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவைப் பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ் கண்டபடி கிண்டலடித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் 80 நாட்களைக் கடந்து பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, சிவின், கதிர், மணிகண்டன் என ஒன்பது போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
எங்கப்பா
அந்த
3
பிக்
பாஸ்
பிரபலங்களே
காணோம்..
’துணிவு’
அறிவிப்பில்
மிஸ்ஸான
அமீர்,
பாவனி,
சிபி!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது அதில் அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து போட்டியாளர்களை மகிழ்வித்தனர். இதில், கதிரின் தோழி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். வீட்டிற்கு வந்தது மட்டுமில்லாமல் அவருடன் இணைந்து டான்ஸ் ஆடினார். அவர், கதிரின் தோழி என்று சொல்லப்பட்டாலும், அவர் கதிரின் காதலி என்று கூறப்படுகிறது.

வீடே களேபரமானது
இதையடுத்து,குடுவையில் மண் போடும் டாஸ்க் வைக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் போது ரச்சித்தாவுக்கும் அசீமுக்கு வாக்குவாதம் நடந்தது. அப்போது, ரச்சிதா அசீம் எப்போதும் அடுத்தவர்களை எதுவும் பேசவிடமாட்டார் என்றார்.இதைகேட்ட அசீம் நான் எப்போதும் அப்படி செய்தது இல்லை. ஆனால், ரச்சிதாவுக்கு சனிக்கிழமை மட்டும் தைரியம் வரும் என்று தெரியவில்லை.கமல் சார் முன்னாடி நல்ல வேஷம் போட்டு நடிக்கிறீங்க என்றார். இதையடுத்து,வந்த விக்ரமன் இறுதிப் போட்டி வரை போகும் தகுதி அசீமுக்கு இல்லை, அவர் கோபத்தில் எப்போதும் நிதானமே இல்லாமல் பேசுகிறார் என்றார். இதனால், வழக்கம் போல அசீம் மற்றும் விக்ரமனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வீடே களேபரமானது.

வெளியேறுவது யார்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மணிகண்டன் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மணிகண்டன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்ற அடையாளங்களுடன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த மணிகண்டன் தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினார். மேலும் பிக்பாஸ் வரலாற்றிலேயே நான்கு முறை தலைவரான முதல் போட்டியாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

உணர்வுகளின் அதிர்வுகள்...
இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், மிரட்டலான இசையுடன் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் கமல். அதில், உணர்வுகளின் அதிர்வுகள், உறவுகளின் வருகை...இதனால், உணர்வுகளின் ரீங்காரம் வீடெல்லாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நான் வாரா வாரம் சொல்லிக்கொண்டு இருக்கும் அதே விஷயங்களை இன்னும் சுருக்கமாகி இருக்காங்க. இதைப்புரிந்து கொண்டு தங்கள் விளையாட்டை மாற்றி விளையாடுவார்களா என்று பார்க்கணும்..ஏன் என்றால் இன்னும் கொஞ்சநாள் தான் இருக்கு என்று கூறியுள்ளார்.

என்ன ப்ரோமோ இதெல்லாம்
இந்த ப்ரோமோவை பார்த்து டென்ஷன் ஆன இணையவாசி ஒருவர், சார் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ போடுறேனு சொன்னீங்க அது எப்போ வரும்? இது ஏதோ வேணாம்னு டெலிட் பண்ண சீன் மாதிரியிலே இருக்கு, தெரியாம அட்மின் இத போஸ்ட் பண்ணிட்டாரா என கேட்டுள்ளார்.