Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அசீமுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு..சின்ராச இனி கையில பிடிக்க முடியாதே!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 55 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் ஆடியன்ஸ் அசீமுக்கு ஆதரவாக கைகளை தட்டி தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதில் இந்த வாரம் நாமினேஷனில் கதிரவன், ஜனனி, மைனா நந்தினி, தனலட்சுமி, ரச்சிதா, குயின்ஸி உள்ளிட்ட 6 பேர் இடம் பெற்றனர்.
இதில் உள்ள போட்டியாளர்கள் மிகவும் கவனமாக விளையாடி வந்ததால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
Bigg Boss Tamil 6: குட் பை குயின்ஸி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர் தான்!

யார் வெளியேறுவார்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நடைபெற்று முடிந்தது. இந்த டாஸ்க்கில் ஜனனி, குயின்ஸி, ரச்சிதா ஆகிய மூவரும் சரியாக விளையாடவில்லை. இருந்தாலும் அதிக கற்களை ஆட்டையை போட்டு வைத்திருந்த ரச்சித்தா, இந்த வாரம் காப்பாற்றப்பட்டார். இதில் கதிரவன் மற்றும் தனலட்சுமி நேற்று காப்பாற்றப்பட்டார்கள்.

சோகத்தில் ரசிகர்கள்
தற்போது, ஜனனி, குயின்ஸி ஆகியோருக்கு குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது. இதில், குறைந்த வாக்குகளை பெற்ற குயின்ஸி இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராம்,கதிரவன், ஜனனி ஆகியோர் வெட்டியாக இருக்கும் போது குயின்ஸி வெளியேறி உள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனம் பேசுவது சரியில்லை
இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், உங்களின் பாப்புலாரிட்டி லெவல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டு பச்சை மற்றும் சிவப்பு வண்ண பெட்டியை வைத்துள்ளார் கமல். இதையடுத்து வந்த ஏடிகே, நான் தனலட்சுமிக்கு சிவப்பு தருகிறேன். அவங்க பேசும் விதம், நடந்துகொள்ளும் விதத்தை வைத்து சிவப்பு தருகிறேன் என்றார்.

அசீமுக்கு பெரும் ஆதரவு
இதில் அதிகம் பேர் ஷிவின் மற்றும் விக்ரமனுக்கும் பச்சை கொடுத்தனர். இதில் பலர் அசீமுக்கு சிவப்பு கொடுத்தனர். இதற்கு பதில் அளித்த அசீம், இது இந்த வீட்டில் இருப்பவர்களின் எண்ணம் என்றுதான் நான் நினைக்கிறேனே தவிர, இதுதான் உண்மை என்று நான் நினைக்கவில்லை என்று சொன்னதும், அங்கு இருக்கும் ஆடியன்ஸ் கை தட்டி அசீமுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அசீம் ஆர்மி
ஆரம்பத்தில் அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டில் அவர் மட்டும் தான் போலித்தனமாக இல்லாமல், விளையாட்டின் மீது கவனம் செலுத்தி விளையாடி வருகிறார் என்று அசீமுக்கு ஆதரவாக பல கருத்துக்கள் வெளியாகி, சோஷியல் மீடியாவில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.