Don't Miss!
- News
ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடியுடன் போராடிய இந்தியர்களை ஓட ஓட தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகள்!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஆயிஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட போட்டியாளர்கள்..இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஐம்பது நாட்களை கடந்து போட்டி இப்போது தான் சூடுபிடித்துள்ளது.
இந்த சீசனில் டைட்டிலை வெல்லப்போது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் இப்போதே எழுந்துள்ளது. இந்த சீசனில் வலுவான போட்டியாளராக அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இருக்கிறார்கள்.
வீட்டிலிருந்து 8 போட்டியாளர்கள் இதுவரை வெளியேறிய நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.
’V’
டைட்டில்
விஜய்க்கு
வெற்றி
கொடுத்து
இருக்கிறதா?
வெற்றி
முதல்
வாரிசு
வரை
ஒரு
ரவுண்டப்!

குயின்ஸி வெளியேறினார்
கடந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் ஏழு பேரின் பெயர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று குயின்ஸி வெளியேறினார். பிக் பாஸ் வீட்டின் குயினாக வலம் வந்த க்யூட் தேவதை வெளியேறியதை நினைத்து குயின்ஸியின் ஆர்மி கடும் சோகத்தில் உள்ளனர். ராம், கதிர், ரச்சித்தா எல்லாம் உள்ளே இருக்கும் போது செல்லத்தை அனுப்பிட்டீங்களே என அவரது பேன்ஸ் புலம்பி வருகின்றனர்.

டபுள் எவிக்சன்
பிக் பாஸ் நிகழ்ச்சி பாதி கிணறு தாண்டி உள்ளதால், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு பதிலாக ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் என்ட்ரி ஆவார் என்று கூறப்படுகிறது. நாட்கள் போகப்போக டாஸ்க்குகள் விளையாட்டுத் தனமாக இருக்காமல், உடல்வலிமைக்கு சவால் விடும் டாஸ்காக இருக்கும் என்பதால் இனி நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆயிஷா தான் டார்கெட்
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், நாமினேஷன் ப்ராசஸ் நடக்கிறது. இதில், ஆயிஷா, ராம் மற்றும் அசீம் ஆகியோரின் பெயர்களை பல போட்டியாளர்கள் காரணத்தோடு நாமினேஷன் செய்கின்றனர். இதில் இந்த வாரம் ஆயிஷா அல்லது ராம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அசீமுக்கு பெரும் ஆதரவு
என்னதான் வாரா வாரம் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அசீம், கோவப்படுகிறார், தரக்குறைவாக பேசுகிறார் என பல குற்றச்சாட்டுகளை அசீம் மீது சுமத்தினாலும், மக்கள் அவருக்கு வாக்கு அளித்து காப்பாற்றி விடுகிறார்கள். நேற்றைய எபிசோடில் கூட பாப்புலாரிட்டி லெவல் குறித்து அசீம் பேசிய போது அங்கிருந்த ஆடியன்ஸ் அவருக்கு ஆதரவாக இருப்பதை கை தட்டி வெளிப்படுத்தினார்கள். இதனால், இந்த முறையும் அசீம் காப்பாற்றப்படுவார் என்பது தெரிகிறது. இனி வரும் நாட்களில் பிக் பாஸ் வீட்டில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.