Don't Miss!
- News
"உதிரும் இலைகள்"... ப்ளானே இதான்.. பட்ட பாடெல்லாம் வீணா.. பாஜக ஆதரவு யாருக்கு தெரியுமா.. கசிந்த தகவல்
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Lifestyle
தம்பதிகளே! உங்க உறவில் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்க நீங்க என்ன பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Finance
சீனாவை ஆட்டி படைத்த சவால்கள்.. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கவலை!
- Sports
சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
Bigg Boss Tamil 6: கன்ஃபார்ம்..இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போறது இவர் தான்?
சென்னை : பிக் பாஸ் வீட்டில் போன வாரம் ஜனனி வெளியேறிய நிலையில், இந்த வாரம் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி உள்ளார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதில் டைட்டிலை வெல்லப்போது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஹன்சிகாவின்
'காந்தாரி'
பர்ஸ்ட்
லுக்
போஸ்டர்..காஞ்சனா
படத்தின்
காப்பியா?
கலாய்க்கும்
நெட்டிசன்ஸ்!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில், மணிகண்டன் வீட்டின் கேப்டன் என்பதால், அவரை யாரும் நாமினேட் செய்யவில்லை. அதே போல, நாமினேஷன் ஃப்ரீ டாஸ்கில் வெற்றி பெற்றதால், ஏடிகே மற்றும் அமுதவாணணை யாரும் நாமினேட் செய்யவில்லை.

3 பேர் டேஞ்சர் ஜோனில்
இதையடுத்து, விக்ரமன், கதிரவன், அசீம், சிவின், ரச்சித்தா, மைனா நந்தினி, தனலட்சுமி ஆகிய ஏழு பேரும் நாமினேஷனில் சிக்கினார்கள். இதில் தனலட்சுமி, கதிர், மைனா ஆகிய மூவரும் டேஞ்சர் ஜோனில் இருந்தனர். இதில், கடந்த சில வாரங்களாக கதிர் சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கு கணிசமான வாக்குகள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், கதிருக்கு பெண் ரசிகைகளின் ஆதரவு இருப்பதால், அவரை அவரது ரசிகைகள் காப்பாற்றி விடுகிறார்கள்.

வெளியேறிய போட்டியாளர்
இதனால் மைனா நந்தினி மற்றும் தனலட்சுமி ஆகியோரில் ஒருவர் நிச்சயம் வெளியேறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனலட்சுமி குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் தனலட்சுமியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

ஓவர் ஆட்டம் போட்டா இப்படித்தான் ஆகும்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட தனலட்சுமி வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவரின் தெனாவட்டான பேசும், யாரையும் மதிக்காத தனமும் தான் என்றும், அவர் என்றைக்கோ வெளியில் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவரது திறமைக்காக கொடுத்த நல்ல வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.