ரூல்ஸல்லாம் கொண்டுவராதம்மா ஜனனியிடம் கட் அண்ட் ரைட்டாக சொன்ன ஜி.பி.முத்து.. கச்சேரி கன்ஃபார்ம்!
சென்னை: தனலட்சுமி, ஜிபி முத்து சண்டை ஒரு பக்கம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நடிக்கிறாருன்னு சொல்லிட்டா என அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டார் ஜிபி முத்து.
இந்நிலையில், அடுத்ததாக இலங்கை செய்திவாசிப்பாளரான ஜனனியிடமும் ஜிபி முத்துவுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
உன் ரூல்ஸை நீயே வச்சிக்கே, என் கிட்ட கொண்டுவராதம்மா என ஒரே போடாக போட்டு அடுத்த லாஸ்லியாவை ஆஃப் செய்து விட்டார் ஜிபி முத்து.

ரெண்டு பேருக்குத்தான் ஆர்மி
இப்போ வரைக்கும் இந்த சீசன் பிக் பாஸில் ஜிபி முத்துவுக்கும் இலங்கை செய்திவாசிப்பாளர் ஜனனிக்கு மட்டும் தான் ரசிகர்கள் ஆர்மி அமைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுவரை ஜிபி முத்து தனலட்சுமி சண்டை வெடித்த நிலையில், ஜிபி முத்துவுக்கு பெரிய ஆதரவு இருந்தது. ஆனால், ஜனனியையும் ஜிபி முத்து கண்டித்த நிலையில், சோஷியல் மீடியாவில் ஜிபி முத்து ஆர்மிக்கும் ஜனனி ஆர்மிக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது.

ரூல்ஸ்ல்லாம் கொண்டுவராதம்மா
அடுத்த டீமில் ஒருத்தருக்கு கஷ்டம் என்றாலும் நான் ஓடிப் போய் உதவுவேன், அதை கண்டு சும்மா இருக்க மாட்டேன், உன் ரூல்ஸை எல்லாம் இங்கே கொண்டு வராதம்மா என ஜனனியையும் ஒரே போடாக போட்டு கண்டித்து விட்டார் ஜிபி முத்து. தனலட்சுமி விவாகரத்திலும் ஜிபி முத்து செய்தது சரி அல்ல என்பது போல தற்போது ஜனனி ஆர்மியினர் ஜிபி முத்துவுக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.

தனித்தன்மை
நான் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் வாய்ப்பை பயன்படுத்தி சம்மதித்து வந்தேன். அதற்காக என் கேரக்டரை மாற்றிக்கொள்ள முடியாது. இங்க என்னை என்ன மாதிரி மாற்றிக்கொள்வேன் என்றால் அடுத்தவர் வேலையை செய்வேன், கொடுத்த வேலையை செய்வேன். ஆனால் என் தனித்தன்மையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று சொன்னதுமே ஜனனியின் சிரித்த முகம் சுருங்கிப் போய்விட்டது.

மனிதாபிமானம் முக்கியம்
மனிதாபிமானத்தை விட்டு கொடுக்க மாட்டேன். அதற்காக என்னை வெளியே அனுப்பினால் தாராளமாக கும்பிடு போட்டுட்டு போய்விடுவேன். எனக்கு தேவை வயசுக்கு மரியாதை, சுயமரியாதை இல்லாமல் 5 நாள் பிக்பாஸுக்காக என்னை மாத்திக்க முடியாது என ஜனனியிடம் கண்டிப்பாக சொல்லி விட்டார் ஜி.பி.முத்து.

ரசிகர்கள் பாராட்டு
ஜிபி முத்துவின் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டான பேச்சையும் அவர் நடந்து கொள்ளும் விதத்தையும் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இப்படி இருப்பாரு ஜிபி முத்துன்னு தெரியாமல் போயிடுச்சே மனுஷன் தங்கம்யா என கொண்டாடி வருகின்றனர்.

கிளம்பும் எதிர்ப்பு
அதே சமயம் ஜனனி ஆர்மியினர் இனிமேலும், ஜிபி முத்துவுக்கு சப்போர்ட் செய்ய முடியாது என்கிற முடிவுக்கு வந்து, யார் சொல்வதையும் கேட்காத மனப்பான்மை சரியாக வராது, ஜிபி முத்துவுக்கு கட்டம் சரியில்லை என அவரது குறைகளையும் குற்றங்களையும் நோட் பண்ண ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











