Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
டைட்டில் வின்னர் அசீம்... இதெல்லாம் உலகமகா உருட்டு... பாய்காட் ட்ரெண்டிங்கில் விஜய் டிவி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த சீசனில் ஆரம்பம் முதலே அடாவடித்தனமாக விளையாடி வந்த அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
மிகவும் அறத்துடனும் சக போட்டியாளர்களை அதீத கண்ணியத்துடனும் வழிநடத்திய விக்ரமனுக்கு ரன்னர் அப் பொசிஷன் தான் கிடைத்தது.
பிக் பாஸ் டைட்டில் அசீமுக்கு வழங்கப்பட்டது ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, பலரும் பாய்காட் விஜய் டிவி என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!

முடிவுக்கு வந்த பிக் பாச் சீசன் 6
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் அசீம் டைட்டில் வின்னராகவும், விக்ரமன் ரன்னர் அப் எனவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது இடம் ஷிவின் கணேஷனுக்கு கிடைத்துள்ளது. அசீம், விக்ரமன், ஷிவின் மூன்று பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற நிலையில், பெரும்பாலானோர் விக்ரமனே டைட்டில் வெல்வார் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அசீம் வெற்றிப் பெற்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுதான் நியாயமா?
அசீம் டைட்டில் வென்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம், மக்கள் நாயகன் அசீம் என பலவிதமான ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம் அசீம் டைட்டில் வென்றாலும் விக்ரமன் தான் ரியல் வின்னர், அறம் வெல்லும் என நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர். முக்கியமாக டைட்டில் வின்னர் அறிவித்ததில் விஜய் டிவி பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை, இதெல்லாம் என்ன நியாயம் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாய்காட் விஜய் டிவி
விஜய் டிவி ப்ராடக்ட்டான அசீமுக்கு டைட்டில் வின்னர் கொடுத்தது கொஞ்சம் கூட நியாயமான செயல் இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தனியாக பிஆர்ஓ, யூடியூபர்களை வைத்து ஓட்டு கேன்வாஸ் செய்த அசீமுக்கு டைட்டில் கொடுத்தது கேவலமான ஒன்று எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் கடுப்பான ரசிகர்கள் பாய்காட் விஜய் டிவி என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ட்ரெண்டிங்
மேலும் பல ரசிகர்கள் விஜய் டிவியின் ஹாட்ஸ்டார் ஆப்பை தங்களது மொபைலில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேர்மையாகவும் அறத்துடனும் விளையாடிய விக்ரமனுக்கு தான் நியாயமாக இந்த டைட்டில் கிடைத்திருக்க வேண்டும், அசீமுக்கு கொடுத்தது தவறான முன்னுதாரணம் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இனி அடுத்து நடக்கும் சீசன்களில் அசீம் மாதிரி பாடி மாப்பிங் செய்தும் மற்றவர்களை தரக்குறைவாக விமர்சித்தும் விளையாடுவதை போட்டியாளர்கள் விரும்புவார்கள் எனவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேற்று மாலை முதல் இப்போது வரையிலும் பாய்காட் விஜய் டிவி ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.