Don't Miss!
- News
ஆஆ.. இது வேற நடக்குதா.. ஒரே வார்த்தையில் அதிர செய்த "சொமேட்டோ" ஊழியர்.. அந்த CEO-வே ஆடிப்போயிட்டாராமே
- Education
NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023:குறும்பட திருவிழா போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்...!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
கல்யாணம் பண்ணுங்க... ட்ரஸ்ட்டுக்கு ஹெல்ப் பண்றேன்... விக்ரமனுக்கு அட்வைஸ் பண்ண ஷிவின்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
100 நாட்களை கடந்துள்ள இந்த பிக் பாஸ் 6வது சீசனில் ஏராளமான சுவாரஸ்யங்கள் நடந்துள்ளன.
பிக் பாஸ் சீசன் 6 பல புதிய நட்புக்களுக்கு அடித்தளமிட்டது. அதில் ஷிவின் - விக்ரமன் இருவரின் நட்பு ரசிகர்களின் மனதை வென்றது.
இந்நிலையில், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ள விக்ரமனுக்கு ஷிவின் சொன்ன மேரேஜ் அட்வைஸ் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிக்
பாஸ்
குயின்ஸியின்
மாமாக்குட்டியான
மணிகண்டன்..
ரெண்டு
பேரும்
செம
டான்ஸ்..
தீயாய்
பரவும்
வீடியோ!

விக்ரமன் - ஷிவின் நட்பு
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் ஷிவின், விக்ரமன், அசீம் மூவரும் டைட்டில் வின்னர் ரேஸில் உள்ளனர். இவர்களில் ஷிவினும் விக்ரமனும் பிக் பாஸ் வீட்டில் சந்தித்து கொண்ட பின்னர் நெருங்கிய நண்பர்களாக மாறினர். பிக் பாஸ் வீட்டில் ஷிவினுக்கு எதிரான பல பிரச்சினைகளில் விக்ரமன் குரல் கொடுத்துள்ளார். அதேபோல் விக்ரமனுக்கு ஆதரவாக ஷிவினும் ஸ்ட்ராங்காக சப்போர்ட் செய்துள்ளார். இதனை அசீம் பலமுறை விமர்சனம் செய்ததும் உண்டு. ஆனாலும் விக்ரமன் - ஷிவின் நட்பு பிக் பாஸ் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது.

விக்ரமனுக்கு அட்வைஸ்
இன்று மாலை கிராண்ட் பினாலே நடக்கவுள்ளதால், ஷிவின், விக்ரமன், அசீம் ஆகிய மூன்று பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். அப்போது ஷிவின் - விக்ரமன் இருவரும் வீட்டுக்குள் தங்களது எதிர்கால திட்டம் குறித்து பேசிக் கொண்டனர். வெளியே சென்றதும் திருமணம் பண்ணிக்கோங்க என ஷிவின் விக்ரமனிடம் கூறுகிறார். அதனை மறுக்கும் விக்ரமன் தன்னுடைய கனவு ட்ரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அதற்கான பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் கூறுகிறார்.

ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம்
அதனை கேட்ட ஷிவின், "நீங்க கல்யாணம் பண்ணுங்க. உங்க கல்யாணத்துக்கு பரிசா அந்த ட்ரஸ்ட் திறந்து உங்களுக்கு கிஃப்ட்டா கொடுக்குறேன். உங்களோட விழுதாக இருந்து நான் அந்த வேலைகளையும் செய்றேன் என்கிறார். இதற்கு விக்ரமன், "இஞ்சி பூண்டு விழுதா?" என புன்னகையுடன் ஷிவினை ஜாலியாக கிண்டல் செய்கிறார். விக்ரமன் - ஷிவின் இருவருக்குமான இந்த உரையாடல் பிக் பாஸ் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் ஒருவேளை தான் அதனை எடுத்தால் ட்ரஸ்ட் துவங்க தன்னால் ஆன உதவிகளை நிச்சயம் செய்வதாக ஷிவின் விக்ரமனிடத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. .

விக்ரமனின் லட்சியம்
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து சொல்லவும் என கமல் ஒருமுறை கேட்டிருந்தார். அப்போது, விக்ரமன் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் சமூக பணிகளையும் சட்ட உதவிகளையும் செய்ய வேண்டும் என லட்சியத்துடன் இருப்பதாகக் கூறியிருந்தார். இதனை மனதில் வைத்தே ஷிவின் அவ்வாறு சொன்னதாக தெரிகிறது. முன்னதாக, தனக்கு பரிசாக வந்த கருப்பு நிற உடைகளை விருப்பத்துடன் அணிந்துகொண்ட விக்ரமன், வாத்தி என பிரிண்ட் செய்யப்பட்டிருந்த டிஷர்ட்டையும் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டார்.