For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கடைசி நேரத்தில் விக்ரமன் வெற்றி பெறாதது ஏன்?ஏமாந்த ரசிகர்கள்...வெளியான அதிர்ச்சித் தகவல்!

  |

  சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக விக்ரமன் இருப்பார் என்று கருதப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அவர் வெற்றி பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

  பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் தான் அரசியல் பிரமுகரான விக்ரமன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

  நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய விக்ரமன், தனது செயலால், கோடான கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

  பிக் பாஸ் சீன் 6

  பிக் பாஸ் சீன் 6

  21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.இதில், 3லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் கதிர் வெளியேறினார். இரண்டாவது முறையாக வைக்கப்பட்ட பணப்பெட்டியுடன் 11லட்சத்து 75000 ஆயிரம் ரூபாயுடன் அமுதவாணன் வெளியேறினார். இதையடுத்து, மீட் நைட் எலிமினேஷனில் மைனாவும் எலிமினேட் செய்யப்பட்டார்.

  அசீமை வெறுத்த ரசிகர்கள்

  அசீமை வெறுத்த ரசிகர்கள்

  இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின் இருந்தனர். இதில் அசீம் வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருந்தது, ஏன் என்றால் அவர், வீட்டில் இருந்தவர்களிடம் நடந்து கொண்டவிதம் யாருக்கும் பிடிக்கவில்லை. அமுதவாணனை அடித்தது, திருநங்கை ஷிவினை கேலி செய்தது, விக்ரமனை ஒருமையில் பேசி அரசியல்வாதி வேலையை வெளியில் வைத்துக்கொள் என்று சொன்னது என பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும், மக்களுக்கு சுத்தமாக பிடிக்காததால் அசீம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என பிக்பாஸ் பிரியர்கள் விவாதமே செய்து வந்தனர்.

  நிச்சயம் வெற்றி பெறுவார்ல

  நிச்சயம் வெற்றி பெறுவார்ல

  ஆனால், விக்ரமன் யாரிடத்திலும் வரம்பு மீறியோ, அவமரியாதை செய்யும் விதத்தில் பேசியதே இல்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக விக்ரமன் குரல் கொடுத்தார். இதனால்,விக்ரமன் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. விக்ரமன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சோஷியல் மீடியாவில் செய்தி பரவியது மட்டுமில்லாமல், அவருக்கு வாக்கு எண்ணிக்கையிலும் விக்ரமன் முன்னிலையில் இருந்தார்.

  அசீமுக்கு தகுதியே

  அசீமுக்கு தகுதியே

  இந்நிலையில் யாரும் எதிர்பாராதா விதமாக பிக் பாஸ் டைட்டிலை அசீம் பெற்றுள்ளார். விக்ரமன் ரன்னர் அப் ஆகவும், ஷிவின் கணேஷன் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் வந்துள்ளனர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத விக்ரமனின் ரசிகர்கள், அறம் தோற்றது, தீமை வென்றது என்றும், நல்லவர்களாக இருந்தால் ஜெயிக்க முடியாது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அசீமுக்கு டைட்டிலை வெல்லும் தகுதியே இல்லை, இது ஒரு தவறான முன்உதாரணம் என்று தங்கள் கோவத்தை ட்விட்டரில் காட்டி வருகின்றனர்.

  இதுதான் காரணம்

  இதுதான் காரணம்

  டைட்டிலை விக்ரமன் தான் ஜெயிப்பார் என ரசிகர்கள் பலரும் கணித்து வந்த நிலையில், இறுதிப்போட்டியில் விக்ரமன் வெற்றி பெறாததற்கு முக்கியமான காரணமே விக்ரமன் ஒரு அரசியல்வாதி என்பதுதான் என்றும், அதுமட்டுமில்லாமல், விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் விக்ரமனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டது, அவருக்கு பின்னடைவாக அமைந்துவிட்டாக கூறப்படுகிறது. அரசியல் தலையீடு இருந்ததால், கடைசி நேரத்தில் விக்ரமனின் வாக்கு சரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், விக்ரமனின் ஆதரவார்கள் சோகத்தில் உள்ளனர்.

  English summary
  Bigg Boss Tamil Season 6 Grand Finale: Why didn't Vikraman win? Shocking information
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X