Don't Miss!
- News
ரூ. 4.9 கோடிக்கு ஏலம்.. புதிய சாதனை படைத்தது இளவரசி டயானாவின் ‘பழைய’ ஊதா நிற கவுன்!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சொந்தமுள்ள வாழ்க்கை..சொர்க்கத்திற்கு மேல..விஜய்டிவியில் புது சீரியல்..கண்கலங்கிய ஜிபிமுத்து!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் டிவியின் புதிய சீரியல் குறித்த ப்ரோமோ வெளியாக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 99 நாட்களை எட்டிவிட்டது. அடுத்தவாரம் இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற்றார், யார் யாருக்கு எந்தெந்த இடம் என்பது தெரிந்து விடும்.
டிக்கெட் டூ பினாலே டிக்கெட்டை பெற்றுள்ள அமுதவாணன் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைய உள்ளார்.
பிக்
பாஸ்
6ல்
கடைசியாக
எவிக்சனான
ஏடிகே...
லைஃப்
டைம்
செட்டில்மெண்ட்
கொடுத்த
கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சி
பரபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபிமுத்து,மெட்டிஒலி சாந்தி,ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி , நிவாஷினி, ஷெரினா, அசல் கோலார், மணிகண்டா, மகேஷ்வரி ஆகியோர் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அவர்கள் அனைவரும் 7 போட்டியாளர்களுக்கும் கடுமையான சேக்ரிஃபைஸ் டாஸ் கொடுத்தனர்.

கடுமையான டாஸ்க்
அவர் கொடுத்த அனைத்து டாஸ்க்கும் கடுமையாகவே இருந்தாலும், போட்டியாளர்கள் அதை செய்து முடித்தனர்.ஏடிகே தலையை மொட்டை அடித்துக்கொண்டு முன்னாடி மட்டும் குடுமி வைத்துக்கொண்டார். அதே விக்ரமன் ஒருபக்கத்தில் மட்டும் தாடி, மீசையை எடுத்துக்கொண்டார். ஒரு அரசியல்வாதியாக இருந்த போதும் எதைபற்றியும் கவலைப்படாமல் விக்ரமன் செய்தது உண்மையில் தியாகம் தான் என அவரது ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

ஏடிகே வெளியேறினார்
கடந்த வாரம் நடந்த கடைசி நாமினேஷனில் அமுதவாணனைத் தவிர அசீம், விக்ரமன்,கதிர், ஷிவின், மைனா, ஏடிகே என அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர், இதில், குறைந்தவாக்குகளை பெற்று ஏடிகே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் எதையுமே செய்யாமல் இருந்த கதிர் இன்னும் வீட்டிற்குள் இருப்பதை நினைத்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

புதிய சீரியல் மகாநதி
இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்க்கா முதல் ப்ரோமோவில், நடிகரும்,பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான சரவணன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து,நான் விஜய் டிவில் மகாநதி என்ற சீரியலில் நான் பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கிறேன் என்றார். அந்த சீரியலின் ப்ரோமோ பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும்போட்டு காட்டப்பட்டது. உணர்ச்சிப்பூர்வமான இந்த ப்ரோமோவைப்பார்த்து ஜிபிமுத்து கண்கலங்கினார். மகாநதி சீரியல் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.